11-10-2005, 07:51 AM
RaMa Wrote:aathipan Wrote:உலகில் பல மாளிகைகளில் பேய்கள் குடிகொண்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதில் வெள்ளைமாளிகையும் ஒன்றாகும். அங்கு ஒன்றல்ல இரண்டல்ல பல பேய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. முன்னாள் அமெரிக்க சனாதிபதிகள் மற்றும் பல முக்கியமான நபர்களின் ஆவிகள் அங்கு உள்ளன.
தரைத்தளத்தில் நீள் வட்ட அலுவலகத்திற்கும் படுக்கை அறைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் பலவிதமான சத்தங்களை(காலடி ஓசை சிரிப்பொலி மற்றும் கதவைத்தட்டம் சத்தம்) அங்கு வேலைசெய்பர்கள் கேட்டுள்ளனர்.
முன்னால் சானாதிபதியான தோமஸ் ஜேபர்சனின் ஆவி மஞ்சள் அறையில் வயலின் வாசிப்பதையும் பலர் கேட்டுள்ளார்கள். அது மட்டமன்றி நாட்டின் முன்னால் முதல்பெண்மணியான அபிகையில் அடம்ஸ் அவர்கள் வராண்டாவில் நடப்பதை பலர் பார்த்துள்ளனர்.
முன்னாள் ராணியின் அறைக்கு அன்ட்ரு ஜாக்சனனின் ஆவி
அடிக்கடி வருதை பலரும் அறிவர். ஒரு தடவை ராணியின் அறையில் பார்க்ஸ்என்ற தாதி படுக்கையை விரித்துக்கொண்டிருந்தபோது திடீரென சுற்றுப்புறம் குளிர்ந்துபோனதாம்;. திடீரென குளிர்ந்ததால் வியப்புற்றவர் அருகில் ஒரு ஆவியைப்பார்த்ததாக கூறுகிறார். அன்று பயந்து ஓடியவர் மூன்று வருடம் கழித்தே மீண்டு வேலைக்கு வந்துள்ளார்.
பார்க்ஸ் மட்டுமன்றி பலரும் ஆபிரகமாம் லிங்கனையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார்கள் ஒருதடவை நெதர்லாந்து ராணி முன்பு ஆபிரகாம் லிங்கன்தங்கிய அறையில் தங்கியுள்ளார். அன்று இரவு கதவு தட்டும் ஓசை கேட்க திறந்து பார்த்துள்ளார். அங்கு லிங்கன் நிற்பதைப்பார்த்து மூச்சையாகி விழுந்துவிட்டார்.
பல வருடம் கழித்து வேறோரு வேலையாள் லிங்கன் கட்டிலில் அமர்ந்து காலணிகளை கழற்றுவதைப்பார்துள்ளார்.
லிங்கன் 14 ஏப்பிரல் 1865ம் ஆண்டு ஜோன் வில்கிஸ் புத் என்பவரால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போதுதான் போர் முடிவுக்கு வந்த தருணம். போருக்குப்பின் அமெரிக்காவை கட்டியெழுப்பும் பல திட்டங்களுடன் அவர் இருந்துள்ளார். ஆனால் எல்லாம் முடியாமல் போகவே அவர் இன்றும் ஆவியாக அங்கே உலாவுவதாக பேசப்படுகிறது.
அப்போ ஆலரிமாளிகையில் இலங்கை சனாதிபதிகள் உலாவுகின்றனார்களா? அது தான் அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் பேய் குணமா?
இன்று வெள்ளை மாளிகையின் பல பகுதிகள் பாவிக்கப்படாமல் உள்ளனவாம். அதிலும் ஆபிரகாம் இலிங்கன் பயன்படுத்திய அறை இன்றும் பயன்படுத்தாமல் உள்ளதாக கேள்விப்பட்டேன்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

