11-10-2005, 01:33 AM
வெள்ளைக் குழந்தையின் விழிநீர் வடியக்கண்டு
தெள்ளு தமிழெடுத்துக் கவிதொடுக்கும் உள்ளங்காள்
கலங்கும் விழிகாண கலங்கும் நல்லிதயம்
உலகில் இது நியதி
ஓவியம் இதுவென்னும் உண்மை தெரிந்திருந்தும்
உடனே கவி வடிக்கும்
இது கவியின் தகுதி
ஆழிப்பேரலையால் அடுத்தடுத்த கொடுமைகளால்
நீள விழிகளெல்லாம் நிர்வற்றிப் போனதினால்
நீல விழிபடைத்து நீர் கவிகள் செய்தீரோ?
யார்மீதும் குற்றமில்லை!
தமிழில் கவிபடைக்க கருவுக்கேது பஞ்சம்?
கலங்கும் தமிழ் இதயக் காட்சியொன்றைப் படைத்து
உலகெங்கும் அமர்ந்திருந்து கவிகளைத் தொடுப்போமா?
தமிழ்ப்புலமை வளர்ப்போமா?