Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#69
தாயகம் - தேசியம் - தன்னாட்சி
நிரந்தரத் தீர்விற்கான அடிப்படைகள்
தேசியத் தலைவர் பிரபாகரன் தெரிவிப்பு
கிளிநொச்சியில் 10.04.2002 அன்று நடைபெற்ற சர்வதேச ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார். 700ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் அவர்கள் சுமார் இரண்டரை மணிநேரம் செய்தியாளர் மாநாட்டை நடாத்தியிருந்தார். அங்கே பலதரப்பட்ட கேள்விகளுக்கும் அவர் விரிவான பதில்களை வழங்கியிருந்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமாதான முயற்சிகள் பற்றியும் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடுகள் பற்றியும் ஊடகவியலாளர்கள் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்தார். இச் செய்தியாளர் மாநாட்டில் தலைவர் பிரபாகரனுடன், அரசியல் ஆலோசகர்திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களும், அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களும், மட்டு-அம்பாறை தளபதி கேணல் கருணா அவர்களும், திருகோணமலைத் தளபதி கேணல் பதுமன் அவர்களும், திருமதி அடேல். பாலசிங்கம் அவர்களும் உடனிருந்தனர். செவ வியின் முக்கிய அம்சங்களை கீழே தொகுத்தளித்துள்ளோம்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமாதான முயற்சிகளில் புலிகள் இயக்கத்தின் நேர்மை மற்றும் உண்மைத்தன்மை பற்றிக் கேட்டபோது தலைவர் பிரபாகரன் கூறினார் "நாங்கள் உண்மையாகவும், நேர்மையுடனுமே சமாதான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். நாங்கள் ஒரு உண்மையான சமாதானத்தை விரும்புகின்றோம். ஆரம்பத்தில், ஒருதலைப்பட்சமாக நான்கு மாதங்களாக நாம்தான் போர்ஓய்வைக் கடைப்பிடித்திருந்தோம், அது மட்டுமல்லாது சமாதான சூழலை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்"
இலங்கையிலிருந்து அதிகதொலைவிலுள்ள நோர்வே நாட்டை பேச்சு அனுசரணையாளராக தேர்ந்தெடுக்க எவை காரணம் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது தலைவர் பிரபாகரன் சொன்னார் "அரசியல் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதில் நோர்வே பிரபல்யம் பெற்றுள்ளது. பல நாடுகளில் மக்கள் இனங்களுக்கு இடையேயான பிணக்குகளை தீர்த்துவைக்கும் முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டு வருகின்றது, நோர்வேயின் அனுசரணையை முதலில் சிறீலங்கா அரசே கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது, நோர்வே ஒரு நடுநிலையான நாடு. இந்தப் பிராந்தியத்தில் அதற்கென எந்தவொரு மூலோபாயநலனும் இல்லை. இந்தவகையில் சிறீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்குவதற்குப் பொருத்தமான நாடு நோர்வே என்று நாமும் கருதியதால் அதை அனுசரணையாளராக எமது இயக்கமும் ஏற்றுக் கொண்டது"
அமெரிக்க நகரங்களை தாக்கிய தற்கொலை விமானத்தாக்குதல் நடந்த ' செப்டெம்பர்-11' சம்பவத்தின் விளைவாக எழுந்த உலக அரசியற் சூழலே புலிகள் இயக்கத்தை சமாதானப்பாதைக்கு இழுத்துவந்தது என்று கூறப்படுவதுபற்றி தலைவரிடம் ஒரு செய்தியாளர் கேட்டபோது அவர் சொன்னார். "அவ வாறு இல்லைலு} அந்த சம்பவம் நடக்க நாலுமாதங்கள் முன்னரே நாம் ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்திக் கடைப்பிடித்திருந்தோம், அதுமட்டுமல்ல, நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம் வன்னி வந்து எம்மைச் சந்தித்திருந்தார். அவரிடம் நாங்கள் சமாதானத்தை விரும்புகின்றோம் என்றும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியிருந்தோம், எனவே செப்-11 சம்பவத்தின் விளைவாகவே நாம் சமாதானப் பாதைக்கு வந்தோம் என்று கூறுவது தவறு" என்று தலைவர் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்.

அப்படியானால், புலிகள் இயக்கம், சமாதான வழிமுறையை நாடியதற்கு என்ன காரணம் என்று செய தியாளர் கேள்வி எழுப்பிய போது தலைவர் கூறினார்லு} " எமது மக்களின் அரசியல் போராட்டம், முதலில் சாத்வீக வழியிலேயே ஆரம்பமானது, முன்னைய தமிழர் தலைமைகள் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எமது மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என நம்பினர், ஆனால், அவர்களது அகிம்சைப் போராட்டத்தை சிங்கள அரசு ஆயுதபலம் கொண்டு நசுக்கியபோது, ஆயுதங்களைக் கையிலெடுத்த நாம் எம்மைத் தற்காத்துக் கொள்ளப் போராடினோம். எனவே, புறச்சூழலின் நிர்ப்பந்தத்தால்தான் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம், எனினும் சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம், தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிங்கள அரசுடன் நாங்கள் பேச்சுவர்த்தைகளை நடாத்திவருகின்றோம்"
இந்தச் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டியதன் நோக்கமென்ன என்று கேட்டபோது தலைவர் சொன்னார்லு} "புலிகள் இயக்கம் அமைதி முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக பல்வேறான தப்பபிப்பிராயங்கள் பரப்பப் பட்டுவருகின்றன. ஆகவே, சர்வதேச ஊடகவியலாளர்களை இங்கு வரவழைத்து சமாதான முயற்சிகள் தொடர்பான எமது இயக்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக்கூறி, சமாதானவழியில் அரசியல் தீர்வுகாணும் உறுதிப்பாட்டுடன் புலிகள் இயக்கம் உள்ளது என்பதையும் அதற்காக நேர்மையுடனும், உண்மையுடனும் நாம் செயற்பட்டு வருகின்றோம் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறுவதே இந்தச்செய்தியாளர் மாநாட்டின் நோக்கமாகும்" என்று பதிலளித்தார்.
முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போலவே இப்போது நடைபெறும் சமாதான முயற்சியும் தோல்விகாணுமா! அல்லது வெற்றிகரமாகத் தொடருமா! என்று கேட்டதற்கு தலைவர் பிரபாகரன் கூறினார்லு} " முன்னைய பேச்சுவார்த்தைகளை விட இது முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில், இங்கே மூன்றாம்தரப்பு அனுசரணையாளராக நோர்வே செயற்படுகின்றது, எனவே, இம்முறை பேச்சுவார்த்தைகள் நல்லமுறையில் நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குண்டு"
அப்படியாயின், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு சமஸ்டி முறைபோன்று அரசியல்

வடிவத்தை ஒரு நிரந்தரத்தீர்வாக ஏற்றுக் கொள்வீர்களா எனக்கேட டபோது தலைவர் பிரபாகரன் சொன்னார்லு} "அதற்கான ஒரு அவசியம் ஏற்படவில்லை, தனிநாட்டுக்கோரிக்கையானது தமிழ்மக்களால் முன்வைக்கப்பட்ட ஒரு அரசியல் ஆணையாகும். 1977ம் ஆண்டு நடத்த பொதுத்தேர்தலில் தமிழீழத் தனிஅரசை அமைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் வாக்களித்து மக்களாணையை வழங்கியிருந்தனர். அந்த மக்களாணை மனுவை ஏற்றுக்கொண்ட நாம் எமது மக்களின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் தனி அரசிற்காகவும் போராடிவருகின்றோம். தாயகம், தேசியம், தன்னாட்சி என்பன தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் அபிலாசைகளாகும், இந்த முப்பெரும் அரசியல் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஓர் அரசியல்தீர்வு முன்வைக்கப்படுமானால், அதை எமது மக்களும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனி அரசுக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்வதுபற்றி நாம் பரிசீலிப்போம்"
ஈழத்தைத் தவிர மற்றைய விடயங்கள் பற்றிப்பேச தான் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறுயுள்ளார், இப்படியான நிலைப்பாட்டுடனேயே தாய்லாந்து செல்ல உள்ளீர்களா? என்று கேட்டபோது தலைவர் சொன்னாh லு}. "இப்போதைக்கு ஒருமுடிவும் எடுக்கப்படவில்லை, முடிவான தீர்வுகளும் எட்டப்படவில்லை இடைக்கால நிருவாகத்தை நடாத்துவது தொடர்பாகப் பேசத்தான் நாம் தாய லாந்து செல்ல முடிவெடுத்துள்ளோம்"
இடைக்கால நிருவாக அலகு பற்றிக் கேட்டபோது "தாய்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுக்களின் போதுதான் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பேசி முடிவெடுக்கவுள்ளோம். எனவே, இடைக்கால அரசு எப்படி இருக்கும் எவ வாறு செயற்படும் என்று இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது"
சமாதான முயற்சிகளின் முன்னேற்றம்பற்றித் திருப்திப்படுகின்றீர்களா? என்று கேட்டதற்கு தலைவர் சொன்னார்.. "ஆம், நான் திருப்திப்படுகின்றேன். அத்துடன், சமாதானப் பாதையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் துணிச்சலான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்"
ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் சமாதான முயற்சிகளைக் குழப்பமுனைவாரா? என்று கேட்தற்கு "நாங்கள் அப்படி நினைக்கவில்லை" என்று பதிலளித்த தலைவர் அவர்கள் "அவ விதம் அவர் முயற்சிப்பாரேயானால் அதைக் கையாளவேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினுடையதாகும்" என்றார்.
தமிழர் தாயகம் -தேசியம் -தன்னாட்சி என்பவற்றை ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முன்வைக்குமா? என்று கேட்டதற்கு தலைவர் பிரபாகரன் கூறினார்லு} "இத்தகையதொரு நிரந்தரத் தீர்வை முன்வைக்கும் அரசியல் அதிகாரம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திடம் இப்போதைய நிலையில் இல்லையென்று நாங்கள் கருதுவதாலேயே ஒரு இடைக்கால நிருவாகத்தை சிபார்சு செய்துள்ளோம். இந்த இடைக்கால நிருவாகத்தால் வடக்கு கிழக்கு அபிவிருத்தி அடையும். அதுபோல தென்இலங்கையை பொருளாதார hPதியாக அபிவிருத்திசெய்ய ரணில் விக்கிரமசிங்கவால் முடியும். எனவே, தமிழரைப் போலஇடைக்கால நிருவாக நடைமுறையால் சிங்களவரும் நன்மைபெறுவர், இதேசமயம், இந்த இடைக்கால நிருவாத்தால் தேவையான நேரத்தையும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பெற்றுக்கொள்ளும். அதன்பிறகு நிரந்தரத்தீர்வு பற்றி அவரது அரசாங்கத்துடன் நாங்கள் பேசமுடியும்"
புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு விலக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது தலைவர் சொன்னார்லு} "அதை நாங்கள் விரும்புகின்றோம் தகுந்த நேரம் வரும்போது எமது இயக்கம் மீதான தடையைநீக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம்".
ராஜீவ காந்தியின் கொலைபற்றிக் கேட்டபோது பத்துவருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு துன்பியலான சம்பவம் அதுவாகும் மேலும், இதைப்பற்றிக் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை" என்று தலைவர் பதில்கூறினார்.
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என உலகின் சிலநாடுகள் பிரகடனப்படுத்தியிருப்பது பற்றிக் கேட்டபோது "சில நாடுகள் அவ விதம் செய்திருப்பது உண்மைதான். சிங்கள அரசின் சதித்தனமான பரப்புரை காரணமாக சில நாடுகள் எமது இயக்கத்தை தடைசெய்துள்ளன. எனவேதான், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படமுன்னர் எமது இயக்கம் மீது சிறீலங்கா அரசு விதித்த தடையை அது அகற்றவேண்டும் என்று நாம் சிறீலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளோம். எமது இயக்கம் மீதான தடையை சிங்கள அரசு நீக்கும்போது எமது இயக்கத்தை தடைசெய்த ஏனைய நாடுகளும் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கும்படி நாம் பிரச்சாரம் செய்வோம்" என்று தலைவர் பிரபாகரன் பதில் கூறினார்.
செம்மணி. கோணேஸ்வரி போன்ற வழக்குகளை பேச்சுவார்த்தைக்காக விட்டுக்கொடுக்கவிரும்புவீர்களா! என்று கேட்டபோது தலைவர் சொன்னார். "இந்தப் படுகொலை கள் பற்றிய வழக்குகள் தொடர்ந்து நடக்கவேண்டும். இந்த மனிதப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும்"
சிறீலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ}ளைஞர்களது விடுதலைக்காக புலிகள் இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றிக்கேட்டபோது "தமிழ்இளைஞர்களது விடுதலை பற்றி நாம் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றோம் இவர்களில் பெரும்பாலானோர் புலிச்சந்தேகநபர் என்றுகூறி பயங்கரவாததடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கொடும் சட்டம் நீக்கப்படவேண்டும் என்று சிறீலங்கா அரசை பேச்சுவார்த்தைகளின்போது கோரப்போகின்றோம். இதேவேளை, இவர்களது விடுதலை தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்களைக் கோரியுள்ளோம்" என்று தலைவர் பிரபாகரன் பதிலளித்தார்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)