11-09-2005, 11:08 AM
பேய் அல்லது ஆவி என்றதும் நாங்கள் சினிமாவில் பார்த்த வெள்ளை ஆடை அணிந்த உருவம் தான் மனதில் எழும். பலர் பேய்களைப் பார்க்காவிட்டாலும் உணர்ந்துள்ளார்கள்; எனக்கூறலாம்.
இறந்து போனவர்களின் ஆத்மா ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு உருவத்தைப்பெற்று நம்முன் வெளிப்படும் போது அந்த ஆத்மா, ஆவி அல்லது பேய் எனப்படுகிறது. அந்த உருவம் எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக புகைவடிவமாகவோ மின்னல் வெளிச்சமாகவோ அல்லது உயிருடன் இருந்த போது இருந்த உருவமாகவோ அல்லது ஒரு மிருகத்தின் உருவமாகவோ இருக்கலாம். இவை மட்டுமன்றி வேறு ஏதாவது ஒரு உருவாகவும் இருக்கலாம். மனித உருவத்தில் பேய்( பார்த்தவர்களின் கூற்றுப்படி) நீளமான ஆடை அணிந்து ஆனால் ரோபோவைப்போன்ற அசைவுகள் கொண்டதாக இருக்கும் என கற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் எந்தப்பேயும் எதாவது உருவத்தைக்கொண்டிருக்கும் என்ற கட்டாயம் இல்லை. பொருட்கள் நகர்வதை வைத்தும் ஒலி ஏழும்புவதை வைத்தும் திடீரென ஏற்படும் குளிர்ச்சியை வைத்தும் புதுவிதமான ஏதாவது ஒரு வாசனையை வைத்தும் உணர்ந்துகொள்ளலாம்.
பேய்களின் செயற்பாடுகள் ஏதோ ஒரு பொதுவான காரணத்திற்கே வெளிப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அது சிலவேளைகளில் முடிக்கப்படாத ஒரு செயலுக்காவோ அல்லது ஆத்மா வாழ்ந்த காலத்தில் யாராவது தவறுகளை செய்தும் அவர்கள் தண்டிக்கப்படாததாலோ ஆக இருக்கலாம். சில சமயத்தில் இறந்து போனவர்களுக்காக அதிகம் கவலைப்படும் போது அவர்களது ஆவி தாம் மரணத்திற்குப்பின் மகிழ்ச்சியாக இருப்பதைத்தெரிவிக்கவும் வெளிப்படலாம். சில சமயத்தில் இறந்த செய்தி தெரியாதவர்களுக்கு தனது மரணச்செய்தியை வெளிப்படுத்தவாகம் இருக்கலாம்.