06-22-2003, 09:14 AM
13.04.2002 அன்று, விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று வன்னி சென்று, தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்தார் அமைச்சரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ராவுூப் கார்கீம் அவர்கள்.
மூன்று மணிநேரமாக தேசியத் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார் ராவுூப் கார்கீம் அவர்கள்.
தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையிலான பிரச்சினை இருதரப்பும் இணைந்து பேசித்தீர்க்கப்படவேண்டிய பிரச்சினை. இதற்குள் மூன்றாம் தரப்பு தலையிடுவதானது, நிலைமையை மேலும் குழப்பி, இதனை தமது நலன்களுக்கு தீனியாக்கும் நோக்கம் கொண்டதாகும்.
தேசியத் தலைவரும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நடத்திய இப்பேச்சுவார்த்தை, இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றிற்கு வழிவகுத்தது. முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய நடைமுறைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதத்தில் தேசியத் தலைவர் அவர்கள் சில உத்தரவாதங்களை வழங்கினார்.
முஸ்லீம் தலைவர்கள் இச்சந்திப்புக் குறித்தும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தும், தமது மகிழ்சியை வெளியிட்டிருக்கின்றனர். முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைக்கும் தமிழீழத் தேசியத் தலைவரிடம் தீர்வை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை முஸ்லீம் மக்களிடத்தே இது உருவாக்கியுள்ளது.
--------------------------------------------------------------------------------
இணையும் கைகள்.
14.04.2002 அன்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களும், மலையக மக்கள் முன்னணித் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் அவர்களும் வன்னி சென்று தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்தனர்.
இரண்டு மலையகத் தலைவர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றபோதும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராடத்திற்கு அதரவு வழங்குபவர்கள்.
இதில், பெ. சந்திரசேகரன் அவர்கள், விடுதலைப் புலிகளுக்கு மலையகத்தில் உதவி ஒத்தாசை புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டவர்.
தற்போதைய சமாதான சூழ்நிலையில், இச்சந்திப்புக்கள் எளிதாய் அமைந்திருக்கின்றன.
மலையகத்தில் உள்ள அரசியல் தலைமைகள் பிளவுபடாமல் ஒரேசக்தியாக இணைந்து இந்த மக்களின் உரிமைக்காகப் போராடவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தேசியத் தலைவர் அவர்கள், மலையகத் தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராக இருப்பதாக உறுதி தெரிவித்தார்.
இலங்கைத்தீவில் உள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இணைந்து செயற்படுவது குறித்து அங்கு ஆராயப்பட்டது.

ஒரே தலைமையின் கீழ் பலம் பெறும் தேசியம்.
12.04.2002 அன்று, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே எனவும், விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி, தமிழர் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனவும், தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் என்றும் தமது பொது நிலைப்பாட்டை வலியுறுத்தி மக்கள் மத்தியில் தேர்தலுக்குநின்று அமோக வெற்றியைப் பெற்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியத் தலைவர் அவர்களைச், சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் மேற்கொண்டு தாம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் தேசியத் தலைவரின் கருத்தறிந்துகொண்டனர்.
ஒரே தலைமையின்கீழ், ஒரே இலட்சியத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் ஒன்றிணைந்து, தேசியத் தலைமையின் வழிகாட்டலில் செயற்படுவதென தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் இணக்கம் தெரிவித்தனர்.

தமிழீழத் தேசியத் தலைவர்
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு. விதார் கெல்கேசன் அவர்கள் 17. 04.2002 அன்று வன்னி சென்று, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களும் கைச்சாத்திட்ட வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலுக்குவந்து இரு மாதங்களை நெருங்கிய நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சமாதான முயற்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து ஆராய்வதே இச்சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழர் மத்தியில் தொடர்ந்து சந்தேகங்களை உண்டுபண்ணும் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருவது அடுத்த கட்ட சமாதான முயற்சிக்கு இடையுூறாக இருக்கும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருக்கின்றது.
இந்தச் சந்திப்பில், தேசியத் தலைவர் அவர்கள் இதனை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கட்டம் கட்டமாக முன்னேற்றம் காணப்படவேண்டியிருக்கும் இச்சமாதான முயற்சியில், முதல்கட்டமாக ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பல விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளாமல், அதற்கொரு உறுதியான தீர்வை முன்வைக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது, அத்திவாரத்தை சரியாக இட்டுக்கொள்ளாமல் கட்டடம்கட்ட அவசரப்படுவதற்கு ஒப்பானது என்பது விடுதலைப் புலிகளின் நியாயமான நிலைப்பாடு.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல விடயங்கள், உரிய காலத்தில் நிறைவேற்றப் படவில்லை என்பதை தலைவர் அவர்கள் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.
மீன்பிடித்தடை முற்றாக நீக்கப்படவில்லை என்பதையும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இருக்கக்கூடிய தடைகள் முற்றாக நீக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், பொதுமக்களின் வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள், பொது இடங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை என்பதையும், இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்குத்திரும்புவதில் தடங்கல்கள் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதையும் தலைவர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
யுூன் மாதம் நடுப்பகுதியில், தாய்லாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நேரடிப்பேச்சுவார்த்தைக்கு முன்னராக, புரிந்துணர்வு ஒப்பந்த விதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதும், அதேவேளை, நேரடிப்பேச்சுவார்த்தைக்கு முன்னராக விடுதலைப் புலிகள் மீதான தடையை சிறீலங்கா அரசு நீக்கவேண்டும் என்பதும் தேசியத் தலைவர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
17.04.2002 அன்று வன்னியில் நடைபெற்ற இச்சந்திப்பில், திரு. விதார் கெல்கேசன் அவர்களுடன், சமாதான சிறப்புத் தூதுவர் திரு. எரிக் சுல்கைம், இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் திரு. ஜோன் வெஸ்பேர்க், நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் உடனிருந்தனர்.
தமிழீழத் தேசியத் தலைவருடன், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன், திருமதி. அடேல் பாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.
சரியான திசையில் எதிர்பார்த்ததைவிட வேகமாக சமாதான முயற்சிகள் செல்வதாக நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு. விதார் கெல்கேசன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குறிப்பிடும்படியாய், இருதரப்பு நகர்வுகளும் சமாதாந்தரமாக ஆரோக்கியமானவகையில் சரியான திசையில் பயணப்படுவதாகவே கருதப்படுகின்றது. எனினும், சில தாமதங்கள் தடங்கல்கள் சிறீலங்கா தரப்பில் இருப்பது உணரப்படுகின்றது.