Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்களில் என்ன கார்காலம்..?!
#1
<img src='http://img490.imageshack.us/img490/2916/crying20girl9it.jpg' border='0' alt='user posted image'>

<b>இருவிழி அருவி
கண்டதேன் கார்காலம்
பெண்ணென்று பிறந்திட்டதால்
கறுமி இவள் என்று
கண்டவரும் பழிப்பதாலோ..??!

கலிகாலம் இதுவென்று
படைப்பது புதிதென்று
கட்டறுந்து
கூடிக்களிக்கும் போது
கூடலில் பிறந்ததை
தப்பென்று வீசியதாலோ...??!

பருவ வயதில்
பார் என் சுதந்திரம் என்று
பள்ளியறையில்
பரிசளித்தது
கருத்தடை தாண்டி
பிறந்தது எப்படி
வியந்துன்னை
வீதியில் விட்டதாலோ...??!

தாலாட்டுப் பாடிட
தாய்ப்பாலும் ஊட்டிட
தாயென்ற உறவுக்கு
தரவில்லை காலம் அவகாசம்
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!

தந்தை என்ற உறவது
கட்டிலில் முடிந்ததென்று
தாயவளைக் கைவிட்டு
கட்டாக் காளையாய்
கணமொரு கன்னி தேடும் அவன்
அப்பன் என்று
கண்முன்னே வந்ததாலோ...??!

பள்ளிக்குப் போன தோழியவள்
தோழர்கள் கூடி
சமத்துவம் பேசி
சாதுரியமாய் சதி பண்ணி
சாதித்து முடித்ததும்
சகதியில் வெற்றுடலாய்
வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??!

கண்ணுக்கு கருத்துக்கு
சுதந்திரம் என்று
காரிகை உன்னுடல்
கலையென்று கவிபாடி
களிக்கும் கறுமங்கள்
தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??!

கண்ணே மணியே
கலங்காதே
கரம் நீட்டி
பொய்யுரைத்துப்
பொய்யன்பு காட்டி
கலங்கடிக்க நினைக்கும்
கழுகுகள் வாழும் உலகிது..!

குழந்தையே...
சிந்தித்து
சிலாகித்து வையம்மா
உன்னடி...
இப்போ
கண்ணதைத் துடைத்திடு
உடனடி..
கண்ணீர்
உனக்கு பலவீனம்..
பலமாகு மதியெனும்
விழி திறந்து..!</b>

http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கண்களில் என்ன கார்காலம்..?! - by kuruvikal - 11-09-2005, 10:00 AM
[No subject] - by shanmuhi - 11-09-2005, 10:08 AM
[No subject] - by Rasikai - 11-09-2005, 06:56 PM
[No subject] - by tamilini - 11-09-2005, 07:17 PM
[No subject] - by அருவி - 11-09-2005, 08:21 PM
[No subject] - by Selvamuthu - 11-10-2005, 01:33 AM
[No subject] - by hari - 11-10-2005, 04:34 AM
[No subject] - by வெண்ணிலா - 11-10-2005, 04:57 AM
[No subject] - by RaMa - 11-10-2005, 06:18 AM
[No subject] - by poonai_kuddy - 11-11-2005, 10:51 PM
[No subject] - by kurukaalapoovan - 11-11-2005, 11:09 PM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 11:23 PM
[No subject] - by kuruvikal - 11-11-2005, 11:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)