06-22-2003, 09:13 AM
கரும்புலிகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் உணர்வின் ஆழத்திலிருந்து பிறருக்காக தன்னை அர்ப்பணிக்கத்தூண்டும் ஊக்குவிசை எது? உலகில் இன்று பலரின் உணர்வுகளை குடைந்தெடுக்கும் வினாக்கள் இவை. இங்கே ஒரு கரும்புலி வீராங்கனை எழுதுகிறாள். அவள}ன் ஒருநாள் களவாழ்வின் கதை இது. படித்துப்பாருங்கள் தன் உணர்வுகளின் மென்மையை அவள் உங்களுக்குப் புரியவைப்பாள்.
அன்று 16.06.1997 நெடுங்கேணியில் ஒரு தேடியழித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். எமது பொறுப்பாளருடனும் வழிகாட்டியுடனும் வரைபடம், திசைகாட்டிகள் சகிதம் நகர்ந்துகொண்டிருந்தோம். திடீரென எதிரி எங்கள் மீது தாக்குதலைத் தொடுத்தான். கடும் சண்டை நாங்கள் எதிர்பார்க்காதபடி மூண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் எதுவும் செய்யமுடியாதபடி எமது அணியினர் இழப்புகளுடன் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். எல்லோரும் பின்வாங்கிவிட்ட பின்னர் நானும் ஒரு அண்ணனும் மட்டும் எதிரிக்குள் சிக்கிக்கொண்டோம்.
எதிரி தாக்கியபடியே இருந்தான். எங்களை நோக்கி மேலும் மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்தான். நாங்கள் பாதுகாப்பான முறையில் அவதானமாக பின்வாங்கிக்கொண்டிருந்தோம். அப்போது அந்த அண்ணனின் தொடையில் எதிரியின் ரவைபட்டு கால்முறிந்து இரத்தம் ஓடியது. சற்றுநேரத்திலேயே இடதுகையையும் ரவையொன்று பிய்த்துவிட்டது. இந்நிலையில் ஒரு காப்பில (ஊழஎநச) நின்று இருவரும் சண்டைபிடித்தோம். அதைவிட்டால் அங்கு நிலையெடுப்பதற்கு வேறு பாதுகாப்பு இல்லை.
எமது அணியினரும் எம்மை மீட்பதற்காய் விடாது முயன்றுகொண்டே இருந்தனர். அவர்களுக்கு அது கடினமாகவே இருந்தது. எனினும் தொடர்ந்து போரிட்டனர். எமக்கும் எதிரிக்கும் இடையே வெறும் 7 மீற்றர் இடைவெளிதான் இருக்கும்போல் இருந்தது. ஒன்றும் செய்யமுடியாதநிலை. என்னோடு காயப்பட்டுக்கிடந்த அண்ணன் 'குப்பி' கடிக்க முயன்றபோது நான் பறித்துவிட்டேன்.
எதிரி எம்மைக் கையில் பிடிக்கும் அளவிற்கு நெருங்கிவிட்டான். "நான் குப்பிகடிக்கப்போறன் நீ ஓடித்தப்பு" அந்த அண்ணன் மெதுவாகக் கத்தினான். நான் ஓட மறுத்துவிட்டேன். திடீரென அந்த அண்ணன் கூறினார். "குப்பிகடித்து அவன் தப்பவைத்துவிட்டால்லு}" சற்று மௌனமானவன் பிறகு தன்னை சுட்டுவிட்டு ஓடுமாறு தனது ரி-81-1 ஐ என்னிடம் தந்தான். அதில் எம் இருவருக்கும் சுடுவதற்காக இறுதிவரை வைத்திருந்த ஐந்து ரவைகள் மட்டுமே இருந்தன.
எதிரி கிட்ட நெருங்கி எம்மை பிடித்துவிடப்போகிறானென்ற உணர்வு மேலும் மேலும் உந்தியது. திரும்பிநின்று என்னை நெஞ்சில சுட்டுப்போட்டு "நீ ஓடு!" அண்ணன் கத்தினான் நான் என்ன செய்ய? ஓட முடியாத நிலையிலிருந்த அந்த சகோதரனை நான் எதிரியிடம் பிடிபடவிடுவதா? எனது கையாலேயே அவரை சாகடிப்பதா? விசைவில்லில் விரலை வைத்தேன். சுடவில்லை. நான் அவரைச் சுடவே இல்லை. விக்கிவிக்கி அழ ஆரம்பித்துவிட்டேன்.
என்னை நான் சுடும் துணிவு என்னிடம் இருந்தது. அந்தப் போராளியைச் சுடும் துணிவு எனக்கு வரவே இல்லை.
சிந்தித்தேன், அந்த அண்ணனை சுட்டுவிட்டு நான் தப்பிப்போவது சரியா? துவக்கை மண்ணில் குத்திவைத்துவிட்டு அண்ணனுடன் இருந்து அவரை 'குறோலில்' இழுத்து வர முயன்றேன். என்னால் முடியவில்லை. அண்ணனோ தன்னைச் சுட்டுவிட்டு ஓடும்படி என்னை வற்புறுத்திக்கொண்டே இருந்தான். எதுவும் செய்யமுடியாது தோற்றுப்போய் இருவரும் குப்பியை வாயில் வைத்துக்கொண்டு இறுதி நம்பிக்கைக்காய் காத்திருந்தோம்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் துர்க்கா அக்காவிடமிருந்து வந்த அணியினர் என்னையும், குருதிவழிந்து உயிருக்காய் போராடிக்கொண்டிருந்த அண்ணனையும் காப்பாற்றினர்.
மறுநாள் நயினாமடுவில் சுற்றிவளைத்து தாக்குதல் நடைபெற்றது. இரண்டு நாள் உணவோ தண்ணீரோ இல்லை. மறுநாள் இரவு சண்டை ஓய்ந்தது. சாப்பாடு வந்தது. கைகழுவக்கூட தண்ணி இல்லாது இரத்தக்கையால புட்டை பிடித்துப்பிடித்து தின்றோம். இவற்றையெல்லாம் என்னால மறக்கவும் முடியவில்லை. அப்படியே எழுதவும் முடியவில்லை.
இதை எழுதிவிட்டுப் போனவள் கரும்புலி மேஜர் மீனா 25.12.1999 அன்று ஆனையிறவு படைத்தளத்துள் எதிரியின் ஆட்டிலறி தளங்களைத் தகர்ப்பதற்காக எம்மைப்பிரிந்து போனவள் இன்னும் இருதோழர்களுடன் வராமலே போய்விட்டாள். அவளது குறிப்பேட்டில் இன்னும் எழுதியிருக்கிறாள்.