11-08-2005, 01:53 AM
Vasampu Wrote:கலஞர் கருணாநிதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்று உங்கள் மனச்சாட்சிக்கு புரியவில்லையா??
சரி இவ்வளவு வாதிடுகின்றீர்களே உங்கள் மனச்சாட்சியையும் பார்ப்போம்.
சில வாரங்களின் முன் ஒரு 4 பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை வழங்கிய செய்தி யாழ்க் களத்திலும் வந்தது. ஆளாளுக்கு வந்து கொலையை நியாயப்படுத்த அப்பெண் இராணுவத்தினரோடு விபச்சாரம் செய்தா அது இது என்று மனம் போனபடியெல்லாம் எழுதினீர்கள ஆனால் கடைசியாக கசிப்புக் காச்சி வந்தா எச்சரித்தும் நிற்பாட்டவில்லை அதனால் மரணதண்டனை வழங்கப் பட்டது என்று முடித்தீர்கள். அத்துடன் அந்தத் தாயின் மகனும் ஒரு போராளி என்றும் எழுதினீரகள்.
சரி இப்போ நான் கேட்கின்றேன் ஒரு போராளிக்கு நீங்கள் கொடுத்த மரியாதை இதுதானா. அந்தப் போராளியின் தாயைக் கேவலப் படுத்தி எழுதியவர்கள் அந்நியரா??? அந்தத் தவறைச் செய்தவர்கள் எவரும் மனம்வருந்தனீர்களா??? நீங்களே உங்களைக் கேவலப் படுத்திக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா????????
வசம்பு எனக்கு தெரியாத விடயங்களை பற்றி நான் கதைப்பதில்லை, நான் பார்த்த, அறிந்த, படித்த விடயங்களை பற்றியே நான் கதைக்கிறேன், தெரியாத விடயங்களை கதைத்து மூக்குடைபடுவதைவிட பேசாமல் படித்துவிட்டு போகலாம், என்னை பொறுத்தவரை அவர் யாரக இருந்தாலும் காட்டிக்கொடுப்போர், தமிழினத்துக்கு துரோகம் செய்பவர்கள், தமிழினத்தை அழிக்கக்கூடிய நாசகார செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டியவர்கள், தமிழினவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தனது அண்ணனையே கொண்ற போராளியை நான் அறிவேன், அவர்களுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம், எமது இனம் விடுதலை பெற வேண்டும், அதற்கு எந்தவிலையும் நாம் கொடுக்கதயாராக இருக்கவேண்டும்.
.
.
.

