11-08-2005, 01:14 AM
Vasampu Wrote:நேர்மையாக வாதிடுவதென்றால் எதையும் வாதிடலாம். வெறும் காட்டுக் கத்தலால் என்ன பயன். அன்று இந்திய இராணுவம் அநியாயம் புரிந்தபோது தமிழக மக்கள் கொந்தளிக்கவில்லையா?? தமிழக அரசு கொதித்தப் போய் விடவில்லையா?? இந்திய இராணுவம் நாடு திரும்பியபோது தனது வெறுப்பைக் காட்ட அப்போது முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை வரவேற்காமல் தன் எதிர்ப்பைக் காட்டவில்லையா?? இவையெல்லாவற்றையும் சாட்டாக வைத்து பின்பு வந்த சந்திரசேகரரின் அரசு கலைஞர் கருணாநிதி புலிகள் தமிழ்நாட்டில் பரவ உதவினார் என்ற குற்றச்சாட்டுடன் அவரின் தமிழக அரசை ஜெயலலிதாவினதும் ராஜிவ்காந்தியினதும் அழுத்தத்தால் கவிழ்த்த போது நீங்கள் எத்தனை பேர் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தீர்கள். கலைஞர் கருணாநிதியின் காலத்தில்தான் பல ஈழ அகதிகுளுக்கே மேற்படிப்பு படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வசதிக்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் சொல்லலாம். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்களேன். பின்பு ஏன் பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் அவங்களைத் தேடுகின்றீரகள். ஆம் ஆம் வசதிகளுக்கேற்றவாறு கதைப்பதற்கு சொல்லவா வேண்டும்.
அவ்வளவு ஆதரவாக இருந்த கருணாநிதி பின்னர் எப்படி மாறினார் என்பது உங்களுக்கு நண்றாகவே தெரிந்திருக்கும், அவர் கூறினார் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் ஆனால் தமிழீழம் அமைந்தால் சந்தோஷப்படுவேன்" என்று, அவரது அந்த கொள்கையை வேடிக்கையாக கூறுவார்கள் "கலைஞர் மகள் கனிமொழிக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார் ஆனால் குழந்தை பிறந்தால் சந்தோஷப்படுவார்" என்பதுபோல் இருக்கிறது என்று, கலைஞருக்கே தெரியும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், கடைசி வரையும் தனது முதலமச்சர் கனவு, கனவாகவே போய்விடும் என்று, இந்திய அரசியல் சட்டம் அப்படி.
மத்திய அரசு அப்படி சொல்கிறது என்பதற்காக எமது தொப்பிள்கொடி உறவுகளை நாம் விட்டு விடலாமா? அதுதான், ஜய்யா..... தமிழர்களின் கலாச்சாரமையம், நாம் ஒண்றாகவே இருந்தோம் இடையில் கடல் வந்து பிரித்துவிட்டது, அதற்காக எமது தொப்பிள்கொடி உறவுகளை விட்டுவிடலாமா? தாய் அடித்தாலும் அடிவாங்கிய குழந்தை அடித்த தாயிடம்தானே திரும்ப திரும்ப போகும், எமது உறவை யாராலும் பிரிக்க முடியாது.
ஜயா.....இந்தியமத்திய அரசு 50 வருடமாகத்தான் தமிழ்நாட்டின் மேய்ப்பன், எமக்கும் தமிழ்நாட்டுக்கும் 50000 ஆண்டு தொடர்புண்டு, மலேசியா,சிங்கபூர்,மொறிஸியஸ்,தென்னாபிரிக்கா தமிழர் அனைவரும் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து போனவர்கள், குமரிக்கண்டத்தை கடல் விழுங்கியபோது ஈழத்தமிழர் இந்தியாவில் இருந்து பிரிந்து விட்டனர், நாம் அனைவரும் ஒண்றாக இருந்தவர்கள், காலத்தால் பிரிந்திருக்கிறோம் மீண்டும் ஒண்றுசேர்வோம் அபோது எவனும் தமிழனை அடக்கி ஆழமுடியாது,
.
.
.

