11-08-2005, 12:36 AM
நேர்மையாக வாதிடுவதென்றால் எதையும் வாதிடலாம். வெறும் காட்டுக் கத்தலால் என்ன பயன். அன்று இந்திய இராணுவம் அநியாயம் புரிந்தபோது தமிழக மக்கள் கொந்தளிக்கவில்லையா?? தமிழக அரசு கொதித்தப் போய் விடவில்லையா?? இந்திய இராணுவம் நாடு திரும்பியபோது தனது வெறுப்பைக் காட்ட அப்போது முதலமைச்சராகவிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை வரவேற்காமல் தன் எதிர்ப்பைக் காட்டவில்லையா?? இவையெல்லாவற்றையும் சாட்டாக வைத்து பின்பு வந்த சந்திரசேகரரின் அரசு கலைஞர் கருணாநிதி புலிகள் தமிழ்நாட்டில் பரவ உதவினார் என்ற குற்றச்சாட்டுடன் அவரின் தமிழக அரசை ஜெயலலிதாவினதும் ராஜிவ்காந்தியினதும் அழுத்தத்தால் கவிழ்த்த போது நீங்கள் எத்தனை பேர் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தீர்கள். கலைஞர் கருணாநிதியின் காலத்தில்தான் பல ஈழ அகதிகுளுக்கே மேற்படிப்பு படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் வசதிக்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் சொல்லலாம். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்களேன். பின்பு ஏன் பாடுவதற்கும் இசையமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் அவங்களைத் தேடுகின்றீரகள். ஆம் ஆம் வசதிகளுக்கேற்றவாறு கதைப்பதற்கு சொல்லவா வேண்டும்.

