11-08-2005, 12:31 AM
Vasampu Wrote:<b>பிருந்தன்
உங்களுக்கு மகாத்மா யார் என்று கேட்ட கேள்வி மட்டும்தான் கண்ணில் பட்டதோ. அதன் பின் எழுதப் பட்டவையொன்றும் உங்கள் கண்ணில் படவில்லை. சிலரின் கௌரவமான சொற்பிரயோகங்கள் மதனால் நீக்கப்பட்டது போன்றன உங்கள் பார்வையில் படவில்லை. தீக்கோழிபோல் தலையை மட்டும் மண்ணில் புதைத்துவிட்டு எல்லாவற்றையும் மறைத்தது போல் நினைப்பது அபாரமான விடயம்தான். அடுத்தவரை குற்றம் சாட்டும்போது நாம் சரியாக நடந்து காட்டவேண்டும். அதைவிடுத்து நாம் அதைவிட கீழ்த்தரமாக நடந்து கொள்வதுதான் உங்களின் நிலையென்றால் அதை நினைத்து வெட்கப்பட வேண்டியவர்கள் யார் என்பது எவருக்கும் புரியும். காந்தியைப் பழிப்பதால் பழிப்பவர்கள் காந்தியைக் கேவலப்படுத்தவதாக நினைத்தக் கொண்டு அண்ணாந்து துப்புகின்றார்கள். உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இவைதான் என்பதால் உங்களிடம் கேள்வி கேட்டதற்காக நானும் வெட்கப்படுகின்றேன். தன் கணவரை கொன்றவர் என்ற கோபமும் இன்றி நளினிக்கு கட்சிக்காரர்கள் எதிர்த்தும் து}க:குத் தண்டனையிலிருந்து விலக்களிக்களாம் என்று கூறிய சோனியாவின் பெருந்தன்மையின் முன் நீங்களெல்லாம்......... ......</b>
யார்மீது நாங்கள் அதீத நம்பிக்கையும் அன்பும் வாத்திருக்கிறோமோ அவர்கள் அதில் இருந்து தவறும்போது அதீதகோவம் உருவாகிறது.
இந்திராவின் மீதும் இந்தியாவின் மீதும் நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தோம், முன்பு ஊரில் பாருங்கள் வாசிகசாலைகளில் எமது அரசியல் கட்சிதலவர்களின் படங்களை நாங்கள் வைத்திருக்கவில்லை, மகாத்மாவினதும், இந்திராவினதும் படங்தான் இருக்கும்,.
வசம்பு நான் தெளிவாகவே குறிப்பிட்டேன், எதற்காக அவர்கள் கோவத்தில் பேசுகிறார்கள் என்று அந்தகோவத்தின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாரதம் ஈழத்தமிழர்பால் நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் இந்தக்கோவம் வந்திராது, நீங்கள் நினைக்கிறீர்களா அவர்கள் நடந்து கொண்டவிதம் சரி என்று, மகாத்மாவை கோவிக்க நாம் யார், அவர் காட்டியபாதையில் பாரதம் நடக்கவில்லை என்பதுதான் எமது கோபம், நடந்துமுடிந்தவை முடிந்ததாகவே இருக்கட்டும், இனிநடக்கப்போவவை நல்லவகையாக இருக்கட்டும், மறப்போம் மண்ணிப்போம்.
.
.
.

