11-08-2005, 12:31 AM
தூயவன் Wrote:வெள்ளைக்காரன் காந்திக்கு கொடுத்த மரியாதையால் இந்தியா சுதந்திரம் பெற்றதாக பெருமை பேசுவார்கள். அதை விட உண்மையாக உண்ணாவிரதம் இருந்த திலீபனையும், அன்னை புூபதியையும் மதிக்கத்தெரியாத இவர்களா மகாத்மாவைப் பற்றி பேசுவது?.
காந்தி திரும்பிவந்தால் வெட்கத்தால் கூனி நிற்பார். இவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததை எண்ணி.
காந்தியால் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடையவில்லை. காந்தியின் வழியில் போயிருந்தால் சிலவேளை இந்தியா இன்றுவரை சுதந்திரம் அடையயாமல் இருந்திருக்கும். அவர் அமைதி வழியில் கூடிய அக்கறை கொண்டிருந்தார். உண்மையில் பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளிற்கு ஏன் சுதந்திரம் வழங்கியது. அதற்கு மிக முக்கிய காரணம் இரண்டாம் உலகப்போர் - அதிக நாடுகள் சுதந்திரம் அடைந்த காாலத்தைப் பார்த்தால் தெரியும் அவை எக்காலப்பகுதியில் சுதந்திரமடைந்தவை என்று., அடுத்தது உள்நாட்டுக் கலகங்கள் - இக்கலகங்களை அடக்க அதிக பலம் பிரயோகிக்கப்படவேண்டி இருந்ததனால் அதை தவிர்க்க அவற்றிலிருந்து அவர்கள் விலகினார்கள்.
காந்தியைப்போல் இருந்திருந்தால் இன்னும் அதிக காலம் வைத்திருந்திருப்பார்கள். சந்திரப்போசைக் கொன்றவர்கள் ஏன் காந்தியைக் கொல்லவில்லை :?:
ஏன் கொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லையே அவர்களிற்கு காந்தி பிரச்சினையாய்த் தெரியவில்லை.காந்திதான் தமக்கு சுதந்திரம் வாங்கித்தந்தவர் என்று கூறும் இந்தியர்களின் முகத்திரையைக் கிழிக்கவே திலீபன் அண்ணாவும் அன்னை பூபதியும் காந்தியின் வழியைத் தெரிவு செய்தனர். அதன் படி அவர்கள் செய்தும் காட்டினார்கள். <b>காந்தி பட்ட வேதனையே தெரியாத இந்தியர்களிற்கு எம் திலீபன் அண்ணா பட்ட வேதனையா தெரியப்போகுது
</b> இரக்கம் என்பத சிறிதுமற்ற இந்தியர்களாக அரக்கமுள்ள தமிழர்களா வாழ தமிழர்கள் சிந்திக்க வேண்டும். இந்தியா எவ்வாறு உருவாகியது? பல நாடுகளின் கூட்டரசே இந்தியா. அதில் ஏதாவது தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் வரலாற்று ஆதாரங்களுடன், நாம் எம் தவறைத் திருத்திக் கொள்ளுகிறோம். அவர்கள் தம் உரிமை எதுவென்றே தெரியாது இருக்கும் போது எப்படி எம் பிரச்சினைகள் தெரியவரும். அது வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே இந்தியா எம்மைப் பிரியவிடாது தடுப்பதில் அக்கறை செலுத்துகிறது என்பதை அவர்கள் தெரிந்தகொள்ளாதவரை எம் பிரச்சினைகள் அவர்களிற்கும் தெரியப்போவதில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

