Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#65
க.வே.பாலகுமாரன்


பாகம் இரண்டு
வரலாற்றின் வலிய இரும்புக் கரங்கள் சிங்களத்தின் குரல்வளையை இறுகப் பற்றி நெரிப்பதை இப்போது நாம் காண்கின்றோம். முழிகள் பிதுங்க சிங்களம் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளிப்பதைப் பார்க்கின்றோம். இதனிடையே ஒருகுரல் மட்டுமே வேறுபட்டும் மாறுபட்டும் சுருதி பிசகியும் இடைவிட்டு ஒலிப்பதையும் கேட்கின்றோம். அக்குரல் பண்டா குடும்பத துக்குரல் என்பது நாம் சொல்லாமலே விளங்கும். சிங்களத்தையே நாசம் செய்யும் பண்டா குடும்பத்தின் பாவங்களை இக்கணத்தில் நினைத்துப்பார்க்கின்றோம். தந்தை தாய் மகள் என விரியும் பண்டா குடும்பத்து ஆட்சியிலே 'தந்தை' இனமானம் என்றால் என்ன என எமக்குரைக்க, தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தினை தாயோ முகிழ்க்கச் செய்ய, மகள் என்ன செய்தார்? என்ன செய்கின்றார்? 1996ம் ஆண்டு ஆனி மாதத்து விடுதலைப் புலிகள் ஏட்டிலே 'பண்டா குடும்பம் போல் உண்டா உலகில்' என எழுதப்பட்ட கட டுரையை மீளவும் புரட்டினோம். இப்போது 'பண்டாவின் குடும்பத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் சந்திரிகா அம்மையாருக்கு வரலாறு வழங்கப்போகும் தண்டனை எவ விதம் இருக்குமென எமக்கு தெரியாவிட்டாலும் அது உச்சத் தண்டனையாக அமையும் என்பதற்கான அறிகுறிகள் இப்போது மிகத் தெளிவாகத் தெரிகின்றன' என்கிற வரிகளை மீள் வாசிப்புச் செய்தோம். 1996ம் ஆண்டின் பின்னால் அவர் செய்த இமாலயத் தவறுகளுக்கான தண்டனைகளையும் சேர்த்தால்? அவை என்னவாக இருக்கும்? சிந்தித்தோம்.
அதேவேளை, பண்டா குடும்பத்தினரின் (சுனேத்திராவை விலக்கி) ஆளும் ஆசை அதாவது நாட்டை நாசம் செய்யும் ஆசை இப்போது அநுராவையும் விட்டபாடில்லை என்பதை அறியும்போது சிங்கள மக்களுக்காக ஒன்றல்ல இரண்டு சொட்டுக் கண்ணீர் உதிர்க்க நாம் தயாராகவுள்ளோம். உண்டுகொழுத்து உலகெல்லாம் அலைந்து எப்பதவி கிடைத்தாலும், அதை எவர் தந்தாலும் மகிழ்ந்து கிடைக்காவிட்டால் கண்ணீர் சிந்தி அழும் சிங்கள அரசியலின் உதவாக்கரை செல்லப்பிள்ளை அண்மையில் கூறிய கருத்துக்களிவை. 'எனக்குப் பிள்ளைகள் கிடையாது. எனது சகோதரி சுனேத்திராவிற்கும் பிள்ளைகள் கிடையாது. சிறிய சகோதரியின் பிள்ளைகளோ அரசியலிற்கு வரப்போவதில்லை. எனக்குப்பின் எவரும் சுதந்திரக்கட்சியின் தலைவராக வரமுடியும். அதற்கு இன்னொரு பத்தாண்டுகள் பொறுக்குமாறு கட்சி உறுப்பினர்களை வேண்டுகிறேன். அதுவரை தலைமைப் பதவியை யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. 2006ம் ஆண்டில் சனாதிபதித் தேர்தலில் நானே போட்டியிடுவேன். கட்சி சென்ற தேர்தலில் தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருவதாகக் கூறிய வாக்குறுதியை அக்கா நிறைவேற்றவில்லை' என அவரின் மன ஆதங்கம் நீள்கின்றது. உண்மையிலை அனுராவிற்கு நிலைமைகள் விளங்கவில்லையா? தமக்கையாரோடு தமது குடும்பக்கட்சிமுறை, முடிவிற்கு வருவதை அவர் உணரவில்லையா? அவரது அக்கா வகித்திருக்கவேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தை இப்போது ரணில் அச்சொட்டாக வகிப்பதை அவர் அறியாரா?
இக்கட்டத்தில், சந்திரிகா வேடமேற்று நடித்திருக்க வேண்டிய பாத்திரம் பற்றி சுருக்கமாகக் கூறுவதன் மூலம் ரணில் நுழைந்திருக்கும் புதிய பாத்திரத்தின் தன்மையை எமது வாசகர்கள் உணரமுடியும். 20ம் நூற்றாண்டிற்குரிய பேரினவாதத்தினை கைவிடமுடியாததால் 21ம் நூற்றாண்டின் 'எல்லா எல்லைகளும் கடந்த' புதிய வேடத்தினை ஏற்று நடிக்க சந்திரிகாவால் முடியாமற்போனது. ஆனால் ரணிலின்போக்கு வேறுபட்டது. தனது முன்னோர் விட்ட தவறினை அவர் இம்முறை விடத் தயாராகவில்லை. சூழலின் சூழமைவை தன்னைச் சூழ்ந்துள்ள காரிருளை அவர் எவ வாறோ புரிந்ததால் சிங்களவரின் தலைவனாக இருப்பதைவிட, தமிழ் மக்களின் நேசனாக இருப்பதன் மூலமே தனது இலக்கினையும் உலகத்தின் இலக்கினையும் அடையும் பாதைகளில் தடையின்றி பயணிக்க முடியும் என அவர் நம்புகின்றார். அவரது இலக்கும் உலகின் இலக்கும் வேறுபடவில்லை. ஆனால், மெத்தப்படித்த பண்டாகுடும்பத்து மகளுக்கு இது புரியவில்லை. புரிந்தால் அதை ஏற்க அவர் சிங்கள மனம் விடவில்லை. இந்த இடத்தில் இக்கட்டுரையின் மையப்புள்ளியிலிருந்து நாம் சற்று விலகி இடைச் செருகல் என்கிற தவறினை செய்வதற்கு வாசகர் எம்மை பொறுக்க வேண்டும்.
உலகிலுள்ள எல்லா நாடுகளினதும் பொருண்மியங்கள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நிலையை அதிகரித்தல், சர்வதேச முதலீட்டுப் பொதித்திட்டங்கள், பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் என்பவற்றிலுள்ள தடைகள், எல்லைகள் யாவற்றினையும் நீக்கி நாடுகளின் தேசிய சந்தைகளை ஒன்றிணைத்தலே இவ வுலகின்போக்கு. இதனையே உலகமயமாக்கல் என்கிறார்கள். (இவ விடத்தில் உலகமயமாக்கலின் தொடக்கநிலையே தாராளமயமாக்கல் என்பதையும் இதனை ஜே.ஆர். 1977 களில் தொடக்கினார் என்பதையும் வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்)
இங்கு தேசிய சந்தைகளை ஒன்றிணைத்தலில் ஏற்படும் தடைகளில் சிங்களப் பேரினவாதம் முதன்மைத் தடை என்பதனையே ரணில் புரிந்துள்ளார் என்பதும் தமிழ் மக்கள் மீதான பொருண்மியத் தடை, பாதைத்தடை, உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் தடை என நீளும் பல தடைநீக்கமும் உள்ளடங்கும் விதத்தினையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே சந்திரிகா தடைகளிட்டார், ரணில் நீக்குகிறார். தமது இலக்கினை பாழ்படுத்தியதற்காக சர்வதேசம் சந்திரிகாவிற்கு வழங்கிய தண்டனை அவரை முற்றிலுமாக புறக்கணித்து அவர் மீது இடும் அழுத்தம் என்றாகின்றது. இங்குள்ள முரண்நகை என்னவென்றால், சர்வதேசம் புலிகள் மேல் அழுத்தம் போடவேண்டும் என்கிறநோக்கும், அம்மையார் பயன்படுத்திய கதிர்காமரையே இப்போது சர்வதேசம் அம்மையார் மீது அழுத்தம் போட பயன்படுத்துவதும் விந்தைதான். இரண்டும்கெட்டான் நிலையிலுள்ள கதிர்காமரோ தலைவியின் தாளைப் பணிவதா மேற்குலகின் வெறுப்பை சம்பாதிப்பதா, தெரியாமல் திண்டாடுகின்றார். எது தன் அடிமைச் சேவகத்திற்கு உகந்ததோ அதை அவர் செய்வார். ஆனால், சீற்றத்தின் உச்சியிலும் இயலாமையின் பிடியிலும் சிக்கியிருக்கும் சந்திரிகா என்ன செய்வார்? நாட்டிற்குள் வரும் பிரதி அமைச்சர்மாரை சந்திப்பதுதான் சனாதிபதியின் வேலையா என தன் பேச்சாளரை விட்டு அறிக்கைவிடுவார். எந்தவொரு நாட்டிலும் இத்தகையதொரு பாரிய (அவ) மரியாதையை அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பகுதி உதவிச் செயலாளர் கிறிஸ்ரினா றொக்கா பெற்றிருக்க மாட்டார் என்பது திண்மை. இவர் சி.ஐ.ஏ.யிலும் 15 வருடங்கள் பணிபுரிந்தவராம். அம்மையாருக்கு உதவியோருக்கு கூட அவமதிப்பு சூழும் காலம் இக்காலம்.
திரும்பவும் பண்டாகுடும்ப அரசியலுக்குள் வருவோம். தென்னாசியாவில் பண்டா குடும்பம் போல் உண்டா? இந்தியாவின் நேருக்கள், பாக்கிஸ்தானின் புூட்டோக்கள், பங்களாதேசத்தின் ரகுமான்கள் இவர்கள் எல்லோருக்கும் இல்லாத பெருமை பண்டா குடும்பத்திற்கு உண்டு. ஒரு குடும்பத்திலேயே இரண்டு பிரதமர், ஒரு எதிர்க்கட்சித் தலைவர், ஒரு சனாதிபதி என எத்தனை பதவிகள்? ஒரு சனாதிபதியென்கிற எண்ணிக்கையை அதிகரிப்பதே அநுராவின் நோக்கம். ஆனால் தனக்குத் தரப்பட்ட வாக்குறுதியொன்றினை சகோதரியார் நிறைவேற்றவில்லையென குறைபடும் அநுராவிற்கு வாக்குறுதிகளைக் காப்பாற்றாது, விடுவதே பண்டாவின் குடும்பத்து பரம்பரைத் தொழில் என்பது தெரியாது போய்விட்டதா? அல்லது அதற்காக வழங்கப்பட்ட தண்டனைகளையும் அவர் மறந்துவிட்டாரா? ஆனால் நாம் மறக்கமுடியுமா?
1959ம் ஆண்டு செப்ரம்பர் 28ம் திகதி காலையில் அலரிமாளிகைக்குள் புகுந்த சோமராம தேரர் பண்டார நாயக்காவை நேருக்கு நேர் சுட்டதற்கு என்ன காரணம்? விகாரைக்குள் முடங்கிக் கிடந்த பிக்குகளை வீதிக்கு இறக்கித் தனது தலைமையில் பிக்குகள் முன்னணியை உருவாக்கி பதவிக்குவர தன்னைப் பயன்படுத்திய பின் தனக்கு தரப்பட்ட வாக்குறுதிகளை பண்டா நிறைவேற்றவில்லையென, புத்தரகித்தரதேரர் கொதித்ததே காரணம். சிறிமாவை பதவிக்கு கொண்டுவரப்பாடுபட்ட இளைய ஜே.வி.பி.யினர், பதவிக்கு வந்தபின் சிறிமா தமக்குத்தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையும் ஒரு காரணமாகக்கொண்டே 1971இல் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஜே.ஆர். தன் பங்கிற்கு தண்டனையாக பின்னர் சிறிமாவோவின் குடியியல் உரிமைகளைப் பறித்து இழிவுபடுத்தினார். எனவே இவர்களின் மகளுக்கு வரலாறு இனிவழங்கப்போகும் தண்டனை என்ன? இங்கே நாம் எழுப்பும் கேள்வி இதுதான். தந்தை, தாய் மகள் என இவர்கள் தமிழினத்தை ஏமாற்றிய துரோகத்தனத்திற்கு, அழிவிற்கு, குடிகெடுப்பிற்கு, நாசத்திற்கு எல்லாவற்றிற்கும் ஒட்டுமொத்தமான தண்டனையை பண்டா குடும்பத்தின் சார்பாக பெறப்போவது யார் என்பதே. அது சந்திரிகாவே என்பதே வரலாற்றின் தீர்ப்பு. ஏற்கனவே அம்மையாருக்கு தண்டனை வழங்கும் பணியை வரலாறு ஆரம்பித்துவிட்டது.
தோல்விக்கு மேல் தோல்வி, அவமானத்திற்குமேல் அவமானம், அம்மையார் தீயிலிட்ட புழுப்போல துடிக்கின்றார். யாப்பில் அவருக்குள்ள அனைத்து அதிகாரங்களையும் அவர் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றார். அரசாங்கத்தின் தலைவராக நாட்டு நிருவாகத்தின் தலைவராக ஏன் முப்படைகளின் பிரதம தளகர்த்தராகக் கூட அவரால் செயற்பட முடியவில்லை. அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமைதாங்கப்போனால் கேலி செய்து எள்ளி நகையாடப்படுகின்றார். அவருக்கு அறிவிக்காமலேயே அமைதி பிரகடனப்படுத்தப்படுகின்றது. சனாதிபதி மாளிகையே கூண்டாக கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக அம்மையார் சிறகடிக்கின்றார். பண்டா குடும்பத்து பாவங்களுக்கெல்லாம் சேர்த்து மனவேதனையில் உழல்கின்றார். ரணிலுக்கு என்ன விளங்கும்? சிறீலங்காவின் பொருண்மியத்தை விலைக்கு வாங்கும் திறனும் புலிக்களுகுண்டு எனப் புலம்புகின்றார்.
அவரது பாதுகாப்பு வியுூகங்கள் உடைக்கப்படுகின்றன. அவரது துணைவர்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். நிராயுத பாணியாக்கப்படுகின்றனர். மாமனைக்காப்பாற்ற முடியாத மருமகள் என்றாகிவிட்டார். அவரைச் சுற்றி வலை இறுக்கப்படுகின்றது. அவரது பாதுகாப்புப் பிரிவின் தலைவர் மீது மிகப் பாரதூரமான கொலை, சதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இதற்குத் துணைபோனமைக்காக அவரது செயலரும், ஆயுதங்கள் வழங்க அனுமதி வழங்கியதற்காக அம்மையாருமே குற்றம் சாட்டப்படும் நிலை உருவாகின்றது. சட்டன ஏட்டின் ஆசிரியர் படுகொலை, மாமனிதர் குமாரின் அரசியல் படுகொலை இவற்றின் பின்னால் அவரிருந்தது ஊரறிந்த செய்தி. ஏயர் லங்கா, சனல் 9, ஈவான்ஸ், தவக்கால், துறைமுக இறங்குதுறையென அவரது ஊழல் பட்டியல் விசாரணைகள் வேகமாக தொடர்கின்றன. இவ வாறான பேரளவிலான ஆயத்தங்களோடு ரணில் அவர் மேல் இறக்கப்போகும் இறுதி இடி எத்தகையது? அவர் மீதான ஒழுக்கவழுவுரைப் பிரேரணைகளைக் கொணர்ந்து அவரைப் பதவி இறக்குவதா? அல்லது தான் ஆட்டுவிக்கும் போது ஆடும் பொம்மலாட்டப் பொம்மையாக அவரைக் கையாள்வதா? இது ரணிலின் முடிவிற்குரியது. இதில்கூட அம்மையார் சுயமாக முடிவெடுக்க முடியாத இக்கட்டான நிலையிலுள்ளார். அதனாலே அவர் ராவய விக்டர் ஐவன் எழுதியதுபோல 'சீறிப் படமெடுத்து புற்றைவிட்டு வெளியே வருவதும் வந்தவுடன் படத்தை மடக்கி புற்றுக்குள் போவதுமாக' இருக்கிறார். இவ வாறு அவர் படும்பாடு சொல்லுந்தரமன்று. இதனாலேயே வள்ளுவன் சொல்லிச் சென்றான்.
"ஏவவும் செய்கலான் தான் தேறான்
அவ வுயிர் போம் அளவும் ஓர் நோய்"
(செய்ய வேண்டியதை நல்லோர் சொன்னாலும் செய்யான் (ள்) தானும் அறிந்து செய்யான்(ள்) அவ்வுயிர் போகுமளவும் ஓர் நோய்)
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 10 Guest(s)