11-07-2005, 04:42 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 5 </span>
அந்த பாலைவனபூமியின் காலநிலை அவனுக்கு ஒத்துவரவில்லை. மூக்கினால் அடிக்கடி இரத்தம் வர வைத்தியரிடம் போனபோது, அவர் சொன்னார் "ஆரம்பத்தில் அப்படிதான் மூக்கில் ரத்தம் வரும் அதைவிட விரல்கள் குளிரில் வெடித்து இரத்தம் வரும் என்று."
மெதுவாக 3 கிழமையின் பின்பு அவன் பெயரில் கடிதம் வந்து இருப்பதாக மேலதிகாரி சொன்னார். அவனுக்கு புலன் வேலையில் ஓடவில்லை. எப்போ மாலை வரும், யாரிடம் இருந்து வந்து இருக்கும் என்று மனது அலை பாயத் தொடங்கியது. மிகவும் கஸ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.
பாலைவனத்தில் இருக்கும் ஜீவன்களுக்கு கடிதம் ஒன்று தான் ஜீவனை காப்பாற்றும் ஒரு அமுதம் அந்த மடல்கள் தான் அவர்களின் ஆதாரமே கடிதத்திலே தான் வாழ்க்கையே போகும். அந்த வாழ்க்கையை வாழ்வதுக்கு நிறைய மனபலம் வேண்டும். நட்பு ஒன்றுதான் சுகதுக்கம் எல்லாவற்றிக்கும் மருந்து.
மெதுவாக போகும் நேரத்தை சபித்தபடியே மாலைவரும் வரை, எப்படியோ நேரத்தை ஓட்டியவன் அலுவலகத்துக்குச் சென்று, கைகள் நடுங்க கடிதத்தை வாங்கிக் கொண்டான். அதில் முத்து முத்தாய் இருந்த மதுவின் கையெழுத்தை பார்த்ததும் விரல்கள் நடுங்க பிரித்தான்
<i>என்றும் என் இனியவருக்கு,
பாசத்துடனும் காதலுடனும் உங்கள் மது எழுதுவது..
உயிரே,நலமா?
உங்களைப் பிரிந்த நாள் முதலாய் என் அந்தராத்மா நிம்மதியில்லாமல் அலைகிறது. உங்களப்பா(என் மாமா)உங்கள் மடலை என்னிடம் பிரிக்காமல் கொண்டுவந்து வந்து தந்தார். உலகத்திலே மகனுக்காக காதல்கடிதம் சுமந்துவந்தது என் மாமா தான் என்று நினைக்கிறேன். இனிமேல் எனக்கு நேரடியாக மடல் அனுப்புங்கள் நிற்க. உங்களை நான் முத்தமிட்டது ஊர் எல்லாம் பரவி விட்டது. அம்மா என்னை ஒரே திட்டுவதுவும் தான் அண்ணாவுக்கு கடிதம் போட்டுவிட்டா. எனக்கும் உங்களுக்கும் காதல் என்று.
கவனம் அண்ணாவுடன் சண்டை பிடிக்கவேண்டாம் அவரிடம் குணம் என்னைவிட எல்லாம் புரிந்தவர் நீங்கள் சிக்கல் இல்லாமல் நாம் சேரவேண்டும். உங்களை முத்தமிட நினைக்கவில்லை ஆனால் என் உயிர் உங்களிடமே கூட போவது போல் ஒரு உணர்வு அதணால் தான் அப்படி நடந்துவிட்டேன். ஆசை முத்தங்கள் எப்போதும் என் மனம் கவர்ந்த என் செல்ல அத்தானுக்கு. இப்பொதெல்லம் என் தலையணைக்கு அடியில் உங்கள் மடல் தான் துணை. தூக்கம் வராத இரவுகள் எல்லாம் அந்தமடல் தான் என் துயர் துடைக்கும் தேவதூதன் கிழமைக்கு 2கடிதங்கள் போடுங்கோ. தபால்காரனைப்பார்த்துக் கொண்டு இருப்பதுதான் என் வேலை. அம்மா பேசுகிறா எனக்கு பைத்தியம் என்று… இப்படி ஒரு அன்பானவனை பிரிந்தால் எந்த பொண்ணுக்குதான் பைத்தியம் பிடிக்காது. ஒரு போட்டோ எடுத்து அனுப்புங்கோ பார்க்க எனக்கு மட்டும் பிளிஸ்</i>
என்று வாசிக்க கண்கள் பனிக்க அவன் மீதியை அறையில் சென்று வாசிக்க வைத்துக் கொண்டான்
அறைக்குள் சென்றவன் உடை கூட மாற்றத் தோன்றாமல் படுக்கையில் சாய்ந்தான். மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் படுக்கைகள் ரொம்ப வித்தியாசமானவை, அதை விபரித்தால் தான் புரியும். மேலும், கீழும், அமைந்த படுக்கைகள். ஆதனைச் சுற்றி காட்போட் மட்டைகளினால் அடைத்து, ஒரு தனி உலகமாக்கி விடுவார்கள்.
அதனுள்ளே தன் மனைவி பிள்ளைகள் எல்லோரினதும் படங்களை மாட்டி படுக்கப்போகும் முன்பு முத்தமிடுவார்கள். மின்குமிழ் பூட்டி அழகு பார்ப்பார்கள். கடிதம் வந்தவுடன் அந்த படுக்கையில் வாசித்தபடியே கண்ணில் நீர்வடிய… படுக்கையை நனைக்கும் கணவர்கள், காதலியின் கடிதம் காணாமல் ஏங்கும் காளையர்களின் சோகப்பாடல்கள்... என்று ஓர் கதம்பமான உணர்வு அலைகள் அந்த அறையினுள்ளே அலையும். ஓர் விசித்திரமான உலகம் அது..
அந்த வாழ்க்கையின் சுவை ஒரு தனி இன்பம் தான். கவலையோ, இன்பமோ பகிரும் அற்புதமான உலகம் அது. பெண் என்று ஒர் உறவு அங்கே இல்லாத போதும், அங்கே அவர்கள் எல்லோரையும் இணத்து வைத்த உறவுகள் பெண்மை தானோ! மனைவி, பிள்ளைகள் ,காதலி ,சகோதரி என்று பெண்களுக்கே என்று தானே ஒவ்வொரு மனிதனும் அலைகிறான். ஏதோ ஒருவடிவத்தில் ஒரு பெண் ஒரு ஆணை ஆட்டி படைகிறாள் தாயாக, தங்கையாக, காதலியாக.
படுக்கையில் சாய்ந்த அவனுக்கு தன் தவிப்பு பற்றி முதன் முறையாக வெட்கம் வந்தது காதல் எப்படியெல்லாம் மனிதனை மாற்றுகிறது. மெல்ல தொடர்ந்து மதுவின் கடிதத்தை வாசிக்கத் தொடங்கினான்.
<i>"ரமணா... என் ஆருயிரே.. என்னை தழுவிய உங்கள் கரங்கள் எப்போ என்னை தீண்டும் உங்கள் மடியில் ஆயிரம் யுகங்கள் சாய வேண்டும் "சங்கீதம் நீயாக சாகித்தியம் நானாக வாழ்கின்ற மனசும் சாரீரம்" சேர மனது துடிக்கின்றது... கையில் வைத்து இருந்த இனிப்பை யாரோ பறித்து விட்டது போல் ஒரு உணர்வு வந்து கொண்டே இருக்கிறது. யார் செய்த சதி இது. படுக்கையெல்லாம் முள்ளாய் ...தூக்கமும் வராமல் உங்களை பிரிந்து 2 ஆண்டுகள் எப்படி... நினைக்கவே முடியாமல்… இந்தகடிதம் எழுதும் போது விடிகாலை 2 மணி அன்பு முத்தங்கள்.. என் இனியவரே ..வேறு என்ன பதிலை எதிர்பார்த்து காதலுடன் உங்கள்
வருங்கால மனைவி ..
மது அன்பு முத்தங்கள் கண்ணா.. </i>
"கடிதம் வாசித்த அவனுக்கு உறக்கம் வரவில்லை… மெதுவாக எழுந்து கடிதம் எழுத ஆரம்பித்தான். அவன் நினைவுகளும் மதுவுடன் வாழ்வது போல்… எழுதும் மடலுடன் ஒன்றி விட்டான் போல் இருந்தது. அடுத்த படுக்கையில் இருந்து அவனை பர்ர்த்த ஜெனி கேட்டான்.. "யாரிடம் இருந்து கடிதம் என்று "
மழுப்பலாக சிரித்த ரமணனை பார்த்த ஜெனி " ம்ம் எனக்கு தான் 2 கிழமையாக கடிதமே வரவில்லை என்று கவலை பட்டான்.
கல்யாணம் கட்டி ஒரு மாதத்தில் மனைவியை பிரிந்து வந்த ஜீவன் அவன் படுக்கபோக முதல் மனைவியின் போட்டோவை முத்தமிடும் சத்தம் அந்த அறை பூராக கேட்கும். எல்லோரும் அனுதாபத்துடன் அவனை ரசிப்பார்கள். ஊருக்கு சென்று வரும் கல்யாணமானவர்கள் ஒரு கிழமையோ, ஒரு மாதமோ பித்துபிடித்தவர்கள் போல் இருப்பார்கள்.
ரமணனுக்கும் அவர்கள் நிலை புரிந்தது காதலிக்கத் தொடங்கி ஒரு மாதத்தில் ஏற்பட்ட பிரிவையே தாங்கமுடியாதவனால், தன் நண்பர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.!
"இப்படியே வேலை என்று வாழ்க்கை ஓடியது அப்பாவும் கடிதம் போட்டார். அக்காவுக்கு கல்யாணம் சரி வந்து இருக்கு என்று. அவனும் பதில் உடன் பணமும் அனுப்பினான்.
ஓய்வு இல்லாமல் மேலதிக நேர வேலை செய்து நிறைய பணமும் கையில் இருந்தது. விடு முறையில் ஊருக்கு செல்லும் நண்பனிடம் அக்காவின் தாலிக்கு தங்க பிஸ்கட் வாங்கி பணமும் கொடுத்து அனுப்பினான்.
ரமணனுக்கு என்று கொம்பனி வாகனம் கொடுத்தபடியால் எல்லா இலங்கை சேர்ந்த நண்பர்களுக்கும் இலவசமாக விமான நிலையம் செல்ல உதவி செய்யும் அவனை எல்லோருக்கும் தேவையாக இருந்தது. அவனும் சலிக்காமல் உதவி செய்வான்.
விடுமுறையில் ஊருக்கு செல்லும் யாரும் அவன் வீட்டில் போய் சாப்பிடாமல் வந்ததும் இல்லை. அவர்களை சாப்பிடும் போது பார்த்தபடியே இருக்கும் அவன் வாய் பேசாத அன்னை சொல்லுவா அவர்களை பார்க்கும் போது ரமணனை பார்ப்பது போல் இருக்கு என்று வாத்சல்யத்துடன் பரிமாறி சைகையில் சொல்லுவா என்று இங்கு வந்து கதை கதையாக சொல்வார்கள்...
சில வேளைகளில் மதுவுக்கும் சாறிகள், வாசனைத் திரவியங்கள் என்று கொடுத்து விடுவான் இப்படியே 3 வருடங்கள் ஓடின. இரண்டு சகோதரிகளுக்கும் திருமணமும் முடிந்து, சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக கேள்விபட்டான்.
ஒரு நாள் வேலையின் நிமித்தம் ஜெட்டா நகரத்துக்கு போனபோது அருகில் தான் மதுவின் அண்ணா இருப்பது தெரிந்தது அவனின் முகாமுக்கு சென்றான். அங்கே மதுவின் அண்ணவை சந்தித்தான்.
அது சொல்ல முடியாத சங்கடமான நிலை எப்படி அழைப்பது? மச்சான் என்றா இல்ல எப்படி? வாங்கோ ரமணன் என்று வரவேற்ற மதுவின் அண்ணாவுடன் அன்று இரவு தங்கினான். மனசுவிட்டு கதைத்தபோது அவனுக்கும் சம்மதம் என்று சொன்னான். அப்போ வருகிற ஆறு மாதங்களின் பின்பு இருவரும் சேர்ந்து போய் கல்யாணம் மதுவுக்கு என்று தீர்மானித்தார்கள். அன்பு நண்பனாக இருந்தவன் சகோதரியின் கணவன் என்ற நிலை வந்த போது ஏற்பட்ட மரியாதை அவனை தவிக்க வைத்தது.
எதிர்பாரமல் ஜெட்டாவில் பழுதான வாகனங்கள் அதிகமாகவே, அவன் மேலதிகாரி அவனை தொலைபேசியில் அழைத்து 2,3 கிழமைகள் சென்றாலும் பிரச்சனை இல்லை வேலைகளை முடித்து வரும்படிசொன்னார். மிகுந்த மனக்கஸ்டத்துடன் ஒப்புக் கொண்டான்.
ரமணன் அடிக்கடி மதுவின் சகோதரனிடம் போவான். மதுவுக்கு பிடித்தமானது என்று பார்த்து பார்த்து வாங்கினான். வருங்கால மனைவி அல்லவா. நகைகள் இப்படி எல்லாமே மிக தரமானவைதான். ஆதைப் பார்த்த அவள் சகோதரன் அத்தான் மதுவுக்கு நினைக்கமுடியாத ஒரு வாழ்க்கை கொடுக்கபோறீங்கள் அவள் கொடுத்து வைத்தவள்… என்று சொல்லி சொல்லி பூரித்து விட்டான்.
அவன் ஜெட்டாவில் இருக்கும் போது மதுவின் கடிதம் ஒன்று சகோதரனுக்கும் வந்தது அப்போ ரமணன் கேட்டான்.
"என்னவாம் மது" என்று?
வழக்கமாக உங்களைப் போய் பார்க்கச் சொல்லி எழுதும் மது இந்தமுறை உங்களை பற்றி ஏதுமே எழுதவில்லையே ஆச்சரியமாக இரூக்கு என்று சொன்னான் அவள் சகோதரன்.
மூன்று கிழமையால் திரும்பி அவன் தன் இருப்பிடம் போகும் போது, வழியில் வந்த பாலை வனங்கள் எல்லாம் சோலை வனங்களாக மாறியதை அனுபவித்து கொண்டு வந்தான். அவன் இருப்பிடத்தில் ஒரு வெடிகுண்டு தன் வாழ்க்கையின் பாதை அவன் திட்டங்கள், மனகோட்டை எல்லாமே தவிடு பொடியாகி விடை தெரியா சூனியமாக போகிறான் என்று அவனை பார்த்தவர்களுக்கும் புரியுமா என்ன?
1286 கி,மீ தூரம் கடந்து வந்தவனுக்கு களைப்பே இல்லை மதுவின் நினைப்பும், கல்யாண சந்தோஸமும், அவனை பறக்கவைத்து கொண்டு இருந்தது.
அவன் அறையில் 10 கடிதங்கள் இருந்தது அதிலே அவன் ஆசைக்காதலியின் முத்தான எழுத்துகளைக் காணோம் ஒரு புதியமுகவரி யுடன் அவன் நண்பன் ஒருவனின் கடிதம் வந்து இருந்தது அதைவிட அப்பாவின் கடிதத்துடன் தனியாக முத்திரை ஒட்டி ரமணனின் சகோதரி விலாசத்துடன் ஓர் கடிதம். சரி முதல் அக்காவின் கடிதம் பார்ப்போம் என்று உடைத்து வாசிக்க ஆரம்பித்தான்.
வாசிக்க ஆரம்பித்த அவனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை,
<i>"அன்பான தம்பிக்கு பாசமுடன் அக்கா அத்தான் எழுதிகொள்வது "
என்ன இது புதிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் விழி தவிப்பது புரிகிறது என்ன செய்வது,நினைத்தது நம்பியது எல்லாம் கானல் நீர் ஆகும் என்று படைத்தவன் சொல்லாமல் விட்டுவிட்டான். மனம் கலங்க வைக்கவேண்டாம்.
இங்க இப்போதெல்லாம் மது எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.. தெரியாத மாதிரி போகிறா. நாங்கள் எம் மச்சாள் என்று மரியாதையாக தான் நடத்துகிறோம். ஒரு கிழமைக்கு முன்னால் அத்தான் மது வேலை செய்யும் வைத்தியசாலைக்கு அண்மையில் தன் நண்பரை சந்தித்து கதைத்து கொண்டு இருந்தபோது யாரோ கூட வேலை செய்யும் ஆணுடன் அன்னியோனியமாக கதைத்துக் கொண்டு போனதை கண்டாராம். மனது பொறுக்கமுடியாமல் எழுதுகிறேன் உண்மையாக இருக்கக்கூடாது என்று மாயவனை வேண்டுகிறேன் என்று இருந்தது.</i>
வாசித்தவன் நம்பாமல் கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டான். மேலே வாசிக்காமல் அவன் செந்தழலை கறையான் அரித்துவிட்டது என்றால் நம்ப அவன் என்ன முட்டாளா? அவனுக்கு புரியவே இல்லை மதுவில் அவன் வைத்த அன்பு ம்ம்ம்ம்....!
<b>-தொடரும்-</b>

inthirajith