Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Karuna Defection - Wickremasinghe's Ploy” - UNP Stalwart
#5
இது உதயனில் உள்ளதுதானே!

ரணிலின் உருவாக்கமே கருணா குழு
ஐ.தே.கட்சி எம்.பி. நவீன் பெருமிதம்
பிரபா போருக்குத் தயாரானால் எதிர்க்க
அமெ. இந்தியப் படைகள் ஏற்பாடாம்


புலிகளிடமிருந்து கருணா குழு பிரிந்து தனியாக உருவாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலே காரணம் என்ற பெருமிதத்தோடு கூறுகின்றார் அக்கட்சியின் நுவ ரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க.
பேச்சு முயற்சிகளை விடுத்து யுத்தம் ஒன்றுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் முற் படுவாரானால் அவரது புலிப்படையோடு இலங்கைப் படைகள் மோதவேண்டிய தேவையில்லை. அதற்கு இந்தியஇ அமெரிக்கப் படைகளை ஒழுங்கு செய்து வைத்திருக் கிறார் ரணில் விக்கிரமசிங்க என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழனன்று கினிகத்தேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப் பினர் நவீன் திஸநாயக்க உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையில் நவீன் திஸநாயக்க மேலும் கூறியதாவது:
இந்நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வே யின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.
அப்பொழுது கருணாவை இச்சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனு மதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார்.
நாடு திரும்பிய கருணா தமிழர் விடு தலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிர பாகரன் அந்த இயக்கத்தை தவறாக இயக் கிக்கொண்டிருக்கிறார்என்பதை இந்த அறிவு
மூலம் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாகக் கருணா இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத் துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். அந்த அடிப்படை காரணமாகத்தான் பிரபாகரன் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாமலிருக்கிறார். இவ்வாறு அமைந்த துக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.
இந்த நிலைமைகளையும் மீறி யுத்தம் ஒன்றைப் பிரபாகரன் ஆரம்பித்தால் அந்த யுத்ததிற்கு எங்கள் இராணுவத்தை நாம் அனுப்ப வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்திய இராணுவமும் அமெரிக்கா இராணுவமும்தான் அத்தகைய யுத்தத்தில் ஈடுபடும்.
இதற்கான அடிப்படை ஒப்பந்தப் பேச் சுக்களை ரணில் விக்கிரமசிங்கஇ இந்திய நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவி திரு மதி சோனியா காந்தியுடனும் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஜோர்ஜ் புஷ்ஷுடனும் நடத்தியுள்ளார். என்றார் நவீன் திஸநாயக்க.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்களான பந்துல குணவர்த்தனஇ கே. கே. பியதாஸஇ முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் துணைவியார் திருமதி பிரேமதாஸா மற்றும் மலையக மக்கள் முன்னணி செய லாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண் டார்கள்.
இக்கூட்டத்தை மஸ்கெலியத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கே.கே. பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.

உதயன் நாளேட்டிலிருந்து! நன்றி உதயன்நாளிதழ்.
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
[No subject] - by kurukaalapoovan - 11-07-2005, 12:40 PM
[No subject] - by narathar - 11-07-2005, 01:06 PM
[No subject] - by matharasi - 11-07-2005, 01:27 PM
[No subject] - by ANUMANTHAN - 11-07-2005, 04:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)