06-22-2003, 09:10 AM
சி றகுகள் முளைக்கும் வரை எந்தத் தாய்ப்பறவையும் தன் குஞ்சுகளைப் பறக்க அனுமதிப்பதுமில்லை. சிறகுகள் பலமடைந்த குஞ்சுகளைக் கூட்டிலேயே தங்கியிருக்க அனுமதிப்பதுமில்லை.
இந்திய இராணுவக் காலத்தில் காட்டிலே தன்னோடிருந்த சொற்ப எண்ணிக்கையிலான பெண் போராளிகளை அப்போதே சண்டைகளுக்கு அனுப்பி இழப்புக்களை ஏற்படுத்த தலைவர் அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் பலத்தை அதிகரிப்பதிலேயே கவனமுடன் இருந்தார். இதைப் புரிந்துகொள்ளாமல், சண்டைக்குப்போகும் தம் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இவர்கள் ஒரு நாடகத்தைத் தலைவரின் முன் அரங்கேற்றியதைச் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோமல்லவா?
சண்டையைப் போன்ற சண்டை
நாடகம் முடிந்தது. சண்டைக்கான அழைப்பு வரலாம் என்று காத்திருந்தார்கள். ஆனால் அதற்கான அறிகுறிகளையே காணோம். தலைவர் தன் மனதுக்குள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்? ஒருவருக்கும் புரியவில்லை.
திடீரென அழைப்பு வந்தது. எல்லோருக்கும் தலைகால் புரியாத சந்தோஸம். திட்டம் இதுதான். காலையில் காவலுலாப்போன இந்திய இராணுவ அணியொன்றை, அது திரும்பிவரும்போது இவர்கள் வழி மறித்துத் தாக்கவேண்டும். தாக்கிவிட்டால் போயிற்று! ஏற்கனவே காட்டுக்குள் சண்டைகளுக்குப் போய் வந்த ஆண் போராளிகள் இவர்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஓரிடத்தில் இவர்களை சூழலுக்கேற்ப உருமறைப்புடன் நிலைப்படுத்தி, இதுதான் எதிரிவரும் வழியெனத் திசையையும் காட்டி, ஓரிருவரை உயர்ந்தமரக் கொப்புகளில் ஏற்றி அவதானிப்புக்கென விட்டுலு} எல்லாம் தயார். இனி இந்திய இராணுவத்தைக் கண்டவுடன் முழங்க வேண்டியதுதான்.
காலையில் நிலையெடுத்தவர்கள் நீண்ட நேரமாகியும் தம் விழிகளில் கூர்மை குன்றாது உஸார் நிலையில் காத்திருந்தார்க்ள.
இந்திய இராணுவ அணி வேறிடத்தில் நிலையெடுத்திருந்த ஆண் போராளிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் ஓசைகள் கேட்கத்தொடங்க, இவர்கள் தயாரானார்கள். ஆனால் இராணுவத்தினரின் எறிகணைகள் இவர்களை நெருங்கினவே தவிர, இராணுவம் நெருங்கவில்லை. இலவுகாத்த கிளி போலாயிற்று இவர்கள் நிலை.
இவர்களின் ஏமாற்றத்தை அவதானித்த ஆண் போராளிகள் 'வாருங்கள்' என்று வேறு இடம் நோக்கிக்கூட்டிச்செல்ல, சண்டை பற்றிய கற்பனையோடும் உற்சாகத்தோடும் புறப்பட்டார்கள். வழிகாட்டிகளாக முன்னே போன ஆண்போராளிகள் மரங்கள், செடி, கொடிகளிடையே புகுந்து ஓட, இவர்களும் வேகமுடன் நகர்ந்தார்கள். கொஞ்சத்தூரம் போனதும் தெரிந்த சூழல் ஏற்கனவே எங்கோ பழக்கப்பட்டதுபோல் தோன்ற, உற்றுப்பார்த்தார்கள். ஆம், ஐயமில்லை. அவை தலைவரோடு இவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அண்மையிலுள்ள, இவர்கள் ஏற்கனவே பலதடவை பார்த்துப் பழக்கப்பட்ட மரங்கள்தான். இந்திய இராணுவத்தை இடைமறித்துத் தாக்கும் நினைப்புடன் போனவர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் தமது பாசறைக்கே வந்துசேர்ந்தபோது அடைந்த மனவெப்பியாரத்தை வார்த்தைகளில் விபரிக்க இயலாது.
கேலிப்புன்னகையை அணிந்த முகங்களோடு இவர்களை வரவேற்கவெனப் பாசறைகளிலுள்ள ஆண் போராளிகள் கூடிநின்றனர்.
'சண்டை என்ன மாதிரி?' என்று உண்மையிலேயே சண்டை முடிந்து வருபவர்களிடம் விசாரிப்பது போன்று அக்கறையான குரலில், ஆனால் சிரித்த விழிகளுடன் அவர்கள் கேட்டது தம் காதுகளிலேயே விழவில்லை என்பது போன்ற முகபாவத்துடன் இவர்கள் தத்தம் குடில்களுக்குள் புகுந்துகொண்டார்கள்.
மறுநாள் காலை தன் குடிலைக் கடந்துபோன பெண் போராளியொருவரைக் கூப்பிட்ட தலைவர், 'என்ன மாதிரி? நேற்று எத்தனை 'ரவுணட்ஸ்' அடித்தீர்கள்?'
'மூன்று' மகசின் முடிந்துவிட்டது' என்று அவரின் பாணியிலேயே பதிலளித்தார் இவர். எல்லா விடயத்திலும் தங்களுக்குப் பக்க பலமாக, துணையாக இருக்கும் தலைவர் கூடத் தம்மை ஏமாற்றிவிட்டார் என்ற ஆதங்கம் எல்லோருக்கும். உண்மையில் அவர் ஏமாற்றவில்லை. தொடர் பயிற்சிகளில் இருந்த தங்களுக்கு அன்று நடந்தது கூட ஒரு மாதிரிப் பயிற்சிதான் என்பது புரிய சில காலம் எடுத்தது. கள நிலையைப் பரிச்சயப்படுத்துவதற்காகவே தாம் அன்று அனுப்பப்பட்டதை நாளடைவில் உணர்ந்ததும் அவர்கள் மறுபடி உற்சாகமாகிவிட்டார்கள்.
எண்ணிக்கையிலும் பலத்திலும் இவர்கள் வளர்ந்த பின்னர், இவர்களில்லாமல் சண்டையில்லை என்ற நிலையைத் தலைவர் உருவாக்கியதைப்பற்றி மறுபடியும் இங்கே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
சிறகுகள் விரிந்தன
தலைவரைத்தேடி இந்திய இராணுவம் செக் மேற் 1 நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேரம் ஒருநாள் பெரும்பாலான ஆண்போராளிகள் வெளி நடவடிக்கைகளுக்குப் போய்விட்டார்கள். தலைவருடன் நின்ற நாலைந்து பேர் தவிர அன்று அந்தத்தளத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது பெண் போராளிகள் மட்டுமே. இவர்கள் கூட அதிகம் பேரில்லை. எனவே இவர்கள் எல்லோரும் வெளிப்புறக்காவலுக்கு வந்துவிட்டனர்.
வெளியே போயிருந்தவர்கள் எதிர்க்கப்பட்ட இந்திய இராணுவ அணி ஒன்றுடன் மோத சண்டையில் சிதறிய இராணுவ அணி எமது தளத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதைக் காவலில் நின்ற ஒரு பெண் போராளி கண்டுவிட்டார். அந்தக் காவல ரணில் அப்போது அவர் மட்டுமே தனித்து நின்றார். இப்போது போன்று தொலைத் தொடர்பு வசதிகள் அப்போது பெரியளவில் இருக்கவில்லை. எல்லாம் நேரடித் தொடர்புகள்தான்.
எதிரி நெருங்கிவிட்டான் என்று உள்ளே போய்ச் சொல்வதானால், இவருடைய இடம் வெற்றிடமாகிவிடும். உடனேயே அந்தப் போராளி இந்திய இராணுவத்தைச் சுடத் தொடங்கினார்.
காவலரணில் நின்று சுட்டார். உடனேயே சற்று விலகி நின்றுவிட்டார். ஓடிப்போய் இன்னோரிடத்தில் நின்று சுட்டார். ஆண் போராளிகளின் பெயர்களை சொல்லி, சுடு என்று கத்தியவாறு சுட்டார். நிலைகளை மாற்றியும் பெயர்களைக் கூப்பிட்டும் சுட்டு, நிறையப்பேர் நின்று சுடுவதுபோன்ற மாயையை ஏற்படுத்தினார். இந்திய இராணுவம் விலகிச் சென்றுவிட்டது. அபாயம் நீங்கியது.
நிலைமைக்கேற்ப உடனடியாக முடிவெடுத்துச் செயலாற்றிய அவரின் திறமை தலைவரால் பாராட்டப்பட்டது. அவரோடு இராணுவத்தினர் சண்டையிட்டபோது கைவிட்டுச் சென்ற இராணுவப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபோலவே செக்மேற் 1 இன்போது இன்னொரு நாள் காவலரணில் நின்ற பெண் போராளிகள் இந்திய இராணுவத் தேடுதல் அணி ஒன்றைக் கண்டுவிட்டார்கள். ஒருவர் உள்ளே ஓடிப்போய் நிலைமையைச் சொல்ல, அவர்கள் ஓடிப்போய் பன்றி சுடுவதற்காகப் பரணில் காத்துக்கொண்டிருந்த தலைவரைத் தடுத்து உள்ளே கூட்டிவந்துவிட்டார்கள்.
ஆனாலும் அவர்கள் அருகில் நிற்பது பெருத்த அபாயம் ஆயிற்றே. உடனடியாகத் திசை திருப்பியாக வேண்டும். உடனேயே நான்கு பெண் போராளிகளும் ஒரு ஆண் போராளியுமாக ஐவர் கொண்ட அணி ஒன்று புறப்பட்டது. எதிரியைத் திசை திருப்பி அனுப்பிவிட்டு வந்தது.
'அலேட்' மணி
இயல்பாகவே காட்டிலே வாழ்கின்ற ஊர்வன, புூச்சிகள், விலங்குகள்போல இந்திய இராணுவமும், காட்டுக்குள் ஊரத்தொடங்கிவிட்டிருந்தது. இந்திய இராணுவத்தைக் காணாமல் நகருவதென்பது எங்களுக்குச் சாத்தியமற்றதாகிவிட்டிருந்தது. காட்டின் ஒரு குறிப்பிட்ட புள்ளிவரை தேடுதல் (ஊடுநுயுசுஐNபு) செய்யும் ஒரு அணி, அதே புள்ளியை நோக்கி வேறொரு திசையிலிருந்து வரும் இன்னொரு இராணுவத்தேடுதல் அணிக்குத் தாம் வந்து போனதைத் தெரியப்படுத்தும் விதமாக (PடுயுலுஐNபு ஊயுசுனுளு) சீட்டுக் கட்டிலுள்ள 'கிங்' (முஐNபு) அட்டையை மரமொன்றில் சொருகிவிட்டுச் செல்லும். அவர்களின் நடவடிக்கையின் பெயரும் 'செக்மேற்' தானே. நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ வொரு அடியையும் சற்று முன்னர் ஒரு இராணுவ அணி கடந்திருக்கும். இன்னொரு அணி நெருங்கிக்கொண்டிருக்கும்.