06-22-2003, 09:10 AM
சமாதான தேவதை என்றும் வன்முறை அரசியலால் கணவனையும் தந்தையையும் இழந்த அபலைப்பெண் என்றும் - பல்லின உணர்வுகொண்ட ஜனநாயகவாதி என்றும் புகழப்பட்ட சந்திரிகா அம்மையார் மிகக்கொடூரமான சர்வாதிகாரியாகவும், கொலைகார ஆட்சியாளராகவும் மாறி மனிதாபிமானத்தையே காலில் போட்டு மிதித்து ஆட்சி புரிந்தார்.
இப்போது ரணில் விக்கிரமசிங்காவின் முறை வந்துள்ளது. ஆரம்பம் நம்பிக்கைதரும் விதத்திலேயே உள்ளது. ஆயினும், நம்பி ஏமாற தமிழ் மக்கள் இம்முறை தயாராக இல்லை.
ஐ.தே. முன்னணித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துவிட்டது.
சமாதான முயற்சிகளையும் பொருண்மிய மீட்சியையும் முக்கிய ஆட்சியியல் இலக்காகக் கொண்டு தமது அரசாங்கம் செயற்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
புலிகள் இயக்கம் சார்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிரகடனப்படுத்திய ஒரு மாதகால போர்நிறுத்தத்தைக் கருத்தில் எடுத்த சிறீலங்காப் பிரதமர் அரசாங்கத்தரப்பில் இருந்து ஒரு மாத மோதல் தவிர்ப்பை அறிவித்தார்.
நத்தார் தினத்துடன் ஆரம்பமான போர் ஓய்வு சிறந்த முறையில் இருதரப்பினராலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கெதிரான பொருண்மியத் தடைகளை படிப்படியாக அகற்றப் போவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் முதற்கட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்.
வெளிநாட்டு மத்தியத்துவராக முன்னர் செயற்பட்ட நோர்வே அரசிற்கு மீண்டும் அழைப்பனுப்பிய சிறீலங்கா பிரதமர் நோர்வேயின் பங்களிப்பைக் கோரியுள்ளார். சந்திரிகா அரசாங்கம் ஓரங்கட்டியிருந்த முன்னாள் அனுசரணையாளர் சொல்கைம் அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னர் தனியொரு அனுசரணையாளர் என்ற நிலைமாறி இப்போது ஆறு பேர்கொண்ட அனுசரணையாளர் குழுவொன்று பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளப் போகின்றது.
நோர்வேயின் வெளிவிவகார பிரதி அமைச்சர் திரு . கெல்கேசன் தலைமையிலான அனுசரணையாளர் குழுவில் சொல்கைமும் ஒருவர்.
புலிகள் இயக்கத்துடன் இதுவரை காலமும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கு 'பலமான அடித்தளம் இன்மையே' பிரதான காரணம் என பிரதமர் ரணில் தனது கருத்தைக் கூறியுள்ளார். பலமான அடித்தளத்தை அமைக்க தனது அரசாங்கம் மெதுவாகவும், உறுதியாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்களை நடாத்தி ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு உதவும் வகையில் தான் மூன்று குழுக்களை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்கும் பணியில் ஒரு குழுவும், பேச்சுவார்த்தைகளை நேரடியாக நடாத்த ஒரு குழுவும், பேச்சுக்களில் பிணக்குகள் ஏற்பட்டு முடக்க நிலை எழுந்தால் மாற்றுத் தீர்வுகளை ஆய்வு செய்து அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற ஒரு குழுவும் என மூன்று தளங்களில் இவை செயற்படும் என்றார்.
புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் நேரடியாகப் பங்குபெற கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீரிசும், பொருளாதார சீர்திருத்த அமைச்சர் மலிந்த மொறகொடவும், முன்னாள் ராஜதந்திரி ஜயந்த தனபாலாவும் பிரதமரினால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என ஐ.தே. முன்னணி சார்பான சண்டே லீடர் (30.12.2001) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையுூட்டும் வகையில் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ இடையிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதான முயற்சியில் காட்டிவரும் ஆரம்ப முயற்சிகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுூட்டுபவையாக உள்ளன.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினை புூதாகார வடிவமெடுத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் இருந்து தென்தமிழீழத்தை ரணகளமாக்கிய ஆர். பிரேமதாசா உட்பட, இலங்கைத்தீவையே இரத்தக்காடாக்கிய சந்திரிகா அம்மையாரது காட்டாட்சிகளையும், அதன் எதிர் விளைவுகளையும் நேரடியாகப் பார்த்த அனுபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.
மூன்று வேறு காலகட்டங்களில் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாக இருந்த இந்த முப்பெரும் சிங்களத் தலைவர்கள், போர் மூலம் புலிகளை வெல்லமுயன்று, படுதோல்வி கண்ட உண்மை புதிய பிரதமருக்கு நன்கு தெரியும்.
போர்மூலம் புலிகளை வென்று தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை நசுக்கும் திறன் சிங்கள அரசுக்கு இல்லை என்ற உண்மை இன்று சிங்கள மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெரிந்த உண்மையாகிவிட்டது.
போர் புரிய விரும்பினாலும் சிறீலங்காவின் பொருளாதாரம் அதற்கு இடங்கொடுக்க மறுக்கின்ற இன்றைய புறச்சூழலிலேயே ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார்.
சமாதானப் பேச்சு, அரசியல் தீர்வு என கதைத்தாலே பொங்கியெழுந்து இனவெறி கக்கி போர்முரசு கொட்டுகின்ற பௌத்த மத பீடங்களும், பிக்குகளும் இப்போது அடக்கி வாசிக்க முயல்கின்றார்கள்.
7 வருடப் போரால் எதையும் சாதிக்கமுடியாது போனாலும், தொடர்ந்தும் தமது போர்க் கொள்கைக்கு ஆதரவு கேட்டு தேர்தலில் தோல்வி கண்ட பொ.ஐ.முன்னணியினர் புதிய அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக்கு புதிர் நிறைந்த மௌனத்தைக் காட்டி வருகின்றனர்.
ஜே.வி.பி.யினரும் சிகல உறுமயக்காரர்களும் சமாதானத்துக்கு விரோதமாகப் பேசி வருகின்றனர்.
1950களில் சிங்கள மக்களிடம் இனவெறியைத் தட்டிஎழுப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய எஸ். டபிள்யுூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் வழியில் அரசியல் பலம் பெற ஜே.வி.பி காரர்கள் முயல்கின்றார்கள்.
சிங்களதேசத்துப் பத்திரிகைகள் சமாதான சூழலுக்கு ஆதரவாகச் செயற்படவில்லை. 'ஐலண்ட்' நாளிதழ் தனது கட்டுரைகளிலும், ஆசிரியர் கருத்துரைகளிலும் இனவெறி கக்கி புலி எதிர்ப்புப்பிரச்சாரம் செய்து சிங்களவர் மத்தியில் பதட்டத்தை உருவாக்க முயல்கின்றது.
இதேவேளை, ஐ.தே.முன்னணியின் ஆதரவுப் பத்திரிகை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் குடும்பத்தினரை பங்குதாரராகவும் கொண்டதெனச் சொல்லப்படும் 'சண்டேலீடர்' பத்திரிகை (30.12.2001) தனது ஆசிரியர் கருத்துரையில், சிங்களவரை வெருட்டிக் கிலிகொள்ள வைக்கும் நச்சுக்கருத்தொன்றுக்கு, வக்காலத்து வாங்கப்பட்டுள்ளது.
"ஐ.தே. முன்னணி ஆட்சிக்கு வந்து நாட்டைப் பிரித்துக் கொடுத்துவிட்டால் அதன் பிறகு பொ.ஐ.முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பிரித்துக் கொடுப்பதற்கு நாடிருக்காது" என்று சிகல உறுமயவின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.குணசேகர கூறிய அர்த்தமற்ற வெறுப்புக்கருத்தை சரியானது என்று ஏற்றுக்கொண்ட சண்டேலீடர் ஆசிரியர் புதிய அரசு அவதானமாகச் செயற்படவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
இதேவேளை, விசேட அதிரடிப்படைக்கு பத்தாயிரம் பேரை திரட்டுவது என்ற முன்னைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு புதிய அரசாங்கமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது சமாதானப் பாதையில் ஒரு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, புதிய அரசாங்கம் ஒருவருடத்தைப் புூர்த்திசெய்தவுடன் நாடாளுமன்றை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை நடாத்தும் அதிகாரம் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு உண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க அவர் தயக்கம் காட்டமாட்டார் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த ஒரு வருடகாலத்துள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரையே பதவி கவிழ்க்கும் ஏது நிலைகளும் தென்படுகின்றன.
இந்த அரசியல் சதுரங்கத்திற்குள் சமாதான முயற்சிகள் ஒரு பகடைக்காயாகி செத்தழித்து விடுமோ! என்ற அச்சமும் தமிழ் மக்களிடம் உண்டு.
சமாதானப் பாதைக்குக் குறுக்கே சிங்களப் பேரினவாதிகளும், சிங்களத் தீவிரவாதிகளும் திரண்டெழும் நிலைவந்தால் அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு சமாதானப் பாதையில் உறுதிகாட்டும் தலைமைப்பண்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உண்டா! என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"சமாதான முயற்சியில் பாரிய நம்பிக்கை கொள்ளவேண்டாம். படிப்படியாக முன்னோக்கிப் போவோம். மலர்கள் நிறைந்த பாதையல்ல இது. இறுக்கமான கடினமான பாதை இது. எல்லாத் தடைகளையும் அகற்றுவோம்" என மந்திர சுலோகம் போல ஐ.தே. முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா உரையாற்றியுள்ளார்.
தீர்வு என்ற கட்டத்திற்கு சமாதானப் பேச்சுக்கள் வளர்ந்து செல்லும்போது சிங்கள தேசத்தில் எழ இருக்கும் எதிர்ப்பலைகளை ஊகித்துவிட்டு பிரதமர் இவ வாறு தனது மனதைத் திறந்து கருத்துக் கூறியுள்ளார். எனினும் 'உறுதிப்பாடும் - விடாமுயற்சியும் - தெளிவான பாதையும்' அவசியம் என்றும் நம்பிக்கையுூட்டியுள்ளார். தனது நம்பிக்கைக்கு ஆதாரமாக பலஸ்தீனப் பிரச்சினையை உதாரணம் காட்டமுயன்றுள்ளார்.
"பத்து வருட காலத்திற்கும் மேலாக - சர்வதேசத்தின் ஆதரவுடன் மத்திய கிழக்கில் அமைதி முயற்சி நடைபெறுகின்றது. ஆயினும், அது வர வர மோசமான நிலையை அடைகின்றது. இருந்தாலும் அங்கே அமைதி முயற்சி இருந்தபடியேதான் உள்ளது" என்று பிரதமர் உதாரணம் காட்டியுள்ளார்.
படைபலம் என்பது அறவே அற்றநிலையில் பலஸ்தீன விடுதலை இயக்கம், பேச்சு-பேச்சு-பேச்சு என விரக்தியுற்ற நிலையில், வேறுவழிகளின்றிப் பேசிக்கொண்டே இருக்க முயல்வதற்கும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
இங்கே புலிகள் இயக்கம் அரசியல் hPதியிலும்- இராணுவ hPதியிலும் பலமான அத்திவாரத்திலேயே உள்ளது. அமைதி வழியிலான அரசியல் தீர்வுக்கு சிறீலங்கா அரசு அனுசரணையாக இருக்கத் தவறும் பட்சத்தில் புலிகள் இயக்கம் தனது ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். இதையேதான் தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்ற மாவீரர் நாள் செய்தியிலும் முத்தாய்ப்பாகச் சொல்லியுள்ளார்.
"போர்ப்பாதையைவிட சமாதானத்திற்கான பாதை கடினமானது" என பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், சமாதான வழிமுறைகளில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும்படி சிங்களவரும், தமிழரும் ஜனநாயக hPதியில் வழங்கியுள்ள மக்கள் ஆணை என்பது புதிய அரசாங்கத்தின் பிரதான பலமாகவுள்ளது. சர்வதேச ஆதரவும் பெருமளவில் அதற்குண்டு. புலிகள் இயக்கமும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளது. இந்தநிலையில் சமாதானப் பாதை கடினமானது என்ற ஐயுறவு பிரதமருக்கு ஏற்படவேண்டிய அவசியமில்லை.
பொறுமையும், சகிப்புத்தன்மையும், சமரசம் காணும் திறமையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பிரத்தியேகப் பண்புகள் என அரசியல் ஆய்வாளர்கள் அவரை மதிப்பிடுகின்றனர். அதனால், சமாதான முயற்சி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் என அரசியல் ஆரூடம் கூறவும் முனைகின்றனர். ஆனால், இந்த மனிதப் பண்புகளே- சில பிரத்தியேகமான புறச்சூழலில் அவரது பலவீனமாக மாறி நிலைமைகளைத் தலைகீழாக ஆக்கிவிடும் விபத்தும் நடக்கவாய்ப்புண்டு.
இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை வரலாற்றைப் பொறுத்தளவில் இத்தகைய முன்மதிப்பீடுகளும், அரசியல் ஆரூடங்களும் பொய்த்துப்போனதே முழுமையாக நடந்துள்ளது.
தமிழருக்கு சமஸ்டி முறையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று இலங்கைத்தீவு சுதந்திரத்தைப் பெறமுன்பே ஆணித்தரமாகக் கருத்துக்கூறிய எஸ்.டபிள்யுூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களே சிங்கள-பௌத்த வெறிகொண்ட முதலாவது ஆட்சியாளராக இலங்கையில் இருந்தார்.
தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிங்கள நாடாளுமன்றில் "இரு மொழி ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடு" என தத்துவம் பேசி தமிழர்களது இதயத்தை வென்ற கொல்வின் ஆர்.டி. சில்வாவே 1972இல் அரசியல் அமைப்பு மாற்றத்தின் மூலம் தமிழருக்கு இருந்த ஒரு சிறு உரிமையையும் நீக்கி தமிழர்களை அடிமைகள் ஆக்கத் துணைபுரிந்தார்.