11-27-2003, 05:16 AM
tamilmaravan Wrote:இதை அப்பிடியே குருவிக்கு தனிப்பட்டமெயில்லைபோட்டிருக்கலாமே.என்ன நிர்வாகமோ. சிங்கள ஆட்சியாக இல்லாவிட்டால் சந்தோசம் தான்.தமிழ்மறவன் வலைஞன் எழுதிய கருத்தினை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை என நினைக்கின்றேன். திரும்பவும் வாசித்துப்பாருங்கள்.
sOliyAn Wrote:வலைஞன் அவர்களே! தனிச் செய்திகளையும் தாங்கள் கவனித்தால் நல்லது.. சிலர் சிலருக்கு தகாத வார்த்தைகளில் தனிச்செய்தி அனுப்புவதை அறிய முடிகிறது. பின் கருத்துக் களத்தில் நல்லவர்கள்போல பலரது அனுதாபத்தைப் பெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிச் செய்தியின் தாக்கத்தால் சில கருத்துகள் வரும்போது.. அது கருத்தாளரையே பறந்தள்ளவும் விளைகிறது. எனவே.. அவற்றிலும் கவனிப்புச் செலுத்தினால்.. களைகளுக்கும் கதிர்களுக்குமுள்ள பகுப்பை செய்யமுடியும் எனக் கருதுகிறேன்.
இவ்வாறான தகவல்கள் முன்னரும் எமக்கு கிடைக்கப்பெற்றன. அவர்கள் யார் என்பதும் தெளிவாக எமக்குத் தெரியும். தனிப்பட்ட செய்தியினை தவறாக யாராவது பயன்படுத்த முனைந்தால் அதுபற்றி அறியத்தாருங்கள். தேவைப்படின் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட செய்தி அனுப்பமுடியாதபடி செய்துவிடமுடியும். மேலும் ஒருவரிடம் இருந்து நீங்கள் தனிப்பட்ட செய்தியினைப்பெற விரும்பாது விட்டால் profile என்பதில் சென்று அதற்கான செயற்பாட்டைச் செய்துவிடமுடியும்.

