Yarl Forum
புதிய செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


புதிய செய்தி - வலைஞன் - 11-26-2003

<b>புதிய செய்தி</b>

வணக்கம் கருத்துக்கள நண்பர்களே,

கடந்த சில காலங்களாக கருத்துக்களத்தில் நடந்து வரும் கருத்தாடல்கள் நிர்வாகத்திற்கு அதிருப்தியையும், மற்றைய கள அங்கத்துவர்களுக்கும், பார்வையாளர்களிற்கும் மனவருத்தையும் அளித்திருக்கிறது. கருத்தாடல்கள், தலைப்புகளைத் தாண்டி தனிப்பட்ட கருத்தாளர்கள் மீதான சாடல்களாகவும், வசைபாடல்களாகவும் அமைந்திருந்தமை யாழ் கருத்துக்களத்தின் தன்மையைப் பாதித்துள்ளது. கருத்தாட முடியாத அல்லது எதிர்க்கருத்துக் கூறமுடியாத சந்தர்ப்பத்தில், எதிர்க்கருத்தாளர் மீது பயன்படுத்தப்படுகின்ற சொற்பிரயோகங்கள் கவலையளிப்பதாக உள்ளன.

ஒரு தலைப்பின்கீழ் நடைபெறும் கருத்தாடலில் முரண்பாடு வந்துவிட்டால், அந்த முரண்பாட்டைத் தனிப்பட்ட பகையாக்கிக் கொண்டு மற்றைய பிற கருத்தாடல்களின் போதும் பழிதீர்த்துக் கொள்ள நமது கள அங்கத்துவர்கள் பலர் முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. கருத்துக்களத்தில் சுதந்திரமாகக் கருத்தாடுவதற்கு உங்கள் அனைவருக்கும் அனுமதியுண்டு. ஆனால், யாழ் கருத்துக்களம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தைத் தவறான முறையில் பலர் பயன்படுத்துகிறார்கள்.

களவிதிகளை மீறி எழுதப்படும் கருத்துகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், களநிர்வாகத்தை குறை சொல்வதும், கேலி செய்வதும் வருத்தமளிக்கிறது. நிர்வாகம் 24 மணிநேரமும் கருத்துக்களத்தைக் கண்காணிக்க முடியாது. இருந்தாலும் முடிந்தளவு கருத்துக்களைக் கண்காணித்து தக்க சமயத்தில் (சில நேரங்களில் அதிகமாகவே தாமதமாகலாம்) முடிவெடுக்கும்.

கள அங்கத்துவர்கள் பலரிடையே புரிந்துணர்வுகள் இல்லை என்பது இதுவரைகாலம் நடந்தவற்றின் மூலம் தெளிவாகிறது. கருத்தாடல்களின் போது எதிர்க்கருத்தாளரைத் தாழ்த்தியும், மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கியும் கருத்துகள் (?) முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக எதிர்க்கருத்தாளரும் தனது கோபத்தைக் காட்டிக்கொள்ள தவறான சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார்.

ஒரு கருத்தாடலின் போது யாரும் தோற்பதுமில்லை, வெல்வதுமில்லை. யாரையும் தோற்கடிப்பதற்காக நாம் கருத்துக்களை முன்வைப்பதில்லை. எனவே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று எண்ணி ஏன் சோர்ந்து போகிறீர்கள்? நிறையவே கற்றுக் கொண்டுள்ளோம் என்று மனதில் மகிழ்வடையுங்கள்.

<b>எனவே, தயவுசெய்து இதுவரை காலம் நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம்.</b> யாழ் கருத்துக்களம், தரமானதும், சமூகத்திற்குத் தேவையானதும், பண்பானதுமான கருத்தாடல்களையே எதிர்பார்க்கிறது. களநிர்வாகத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கருத்துக்களத்தைக் கண்காணிக்கவில்லை. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் வாழ்கிறார்கள். தம்முடைய நேரத்தை செலவழித்து இங்கே கருத்துக்களத்தைக் கண்காணிக்கிறார்கள். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கேலி செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். நன்மையளிக்குமெனில் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

அதேநேரத்தில், அனைத்துக் கருத்துக்கள அங்கத்துவர்களிடமும் நாம் வேண்டி நிற்பது:

+ புதிதாக வருகின்ற/இணைகின்ற அங்கத்துவர்களை நட்போடும், நற்பண்போடும் வரவேற்றுக் கொள்ளுங்கள்.
+ உங்களுக்கிடையில் பழி உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
+ கருத்துக்களைப் பண்பான முறையில் முன்வையுங்கள்.
+ மறைமுகமாகவோ, நேரடியாகவோ பிறரைத் தனிப்பட்டுத் தாக்கிப் புண்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
+ பிற கள அங்கத்துவர்களை ஒருமையில் அழைக்காதீர்கள்.
+ நீங்கள்தான் இங்கே நாயகர்கள். எனவே உங்கள் தனித்துவத்தைப் பேணும் அதேநேரத்தில், பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள்.

<b>கருத்து:</b> பயனற்ற, பண்பற்ற, மற்றும் எழுதப்பட்ட கருத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் எழுதப்பட்ட கருத்துக்களிற்குப் பதில் எழுதுவதைத் தவிர்க்கவும். காரணம், விதிமுறைகளை மீறும் வண்ணம் அமையும் கருத்துக்களை நீக்கும் பொழுது, அப்படியான கருத்துக்களிற்கு எழுதப்பட்ட பதில்களும் நீக்கப்படும். ஒருவருடைய மனது புண்படியாக கருத்துகள் அநைம்திருப்பின் அதுபற்றி களநிர்வாகத்திற்கு அறியத் தாருங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்களும் பதிலுக்கு தவறாக எழுதாதீர்கள்.

இந்த செய்தியோடு உங்களிற்கு இன்னொரு மகிழ்ச்சியான தகவலையும் வழங்குகிறோம். நாளையிலிருந்து ஏறகனவே "எச்சரிக்கை" வழங்கப்பட்டவர்களின் எச்சரிக்கைகள் நல்லெண்ண அடிப்படையில் நீக்கப்படுகின்றன. அதேபோல் கருத்துக்களத்தில் தடுக்கப்பட்டவர்களுக்கும் மீள எழுத அனுமதி வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கருத்துகளத்தில் வழங்கப்படுகின்ற கருத்தாடல் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

யாழ் இணையத்தினூடே நண்பர்களாய், தமிழர்களாய், மனிதர்களாய் என்றும் இணைந்திருப்போம். மகிழ்ந்திருப்போம். பழையதை மறந்து அனைவரும் மகிழ்வோடு களமாட வாருங்கள். உற்சாகத்துடன் வந்து முதலில் இங்கே கைகுலுக்கிக் கொள்ளுங்கள். <b>இது புதிய சுற்று!</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நன்றி
யாழ் கருத்துக்கள நிர்வாகம்


- shanmuhi - 11-26-2003

நல்ல செய்தி.
அனைவரும் பின்பற்றி யாழ் கருத்துக்களத்தை மேம்படுத்துவோம்.


- manimaran - 11-26-2003

நம் எல்லோராலும் உள்வாங்கப்படவேண்டிய செய்தி. திறம்பட எடுத்துச் சொன்ன வலைஞனுக்கு மிக்க நன்றிகள்.


- தணிக்கை - 11-26-2003

நல்வரவு புதிய உறவுகள்


- AJeevan - 11-26-2003

ஆக்கபூர்வமானவை தொடரட்டும்.


- இளைஞன் - 11-26-2003

வணக்கம் எல்லோருக்கும்...

நானும் கொஞ்சம் கைகுலுக்குறன். சண்முகி அக்கா, நண்பர் மணிமாறன், தணிக்கை அண்ணா, அஜீவன் அண்ணா எல்லாருக்கும் வாழ்த்துக்களுடனான வணக்கங்கள்.

மற்றது நண்பா கணணி, நண்பா குருவி, கண்ணன் அண்ணா, நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, யாழ் அண்ணா, சாந்தி அக்கா, முல்லை பாட்டி, மதிவதனன் ஐயா, வானதி, கணேஸ் அண்ணா, ரஜி, சோழியான் அண்ணா, அன்பகம், ஆதிபன், தமிழன், தமிழ்மறவன், வீரா அண்ணா, இளங்கோ அண்ணா, மோகன் அண்ணா, வலைஞன் அண்ணா, கரவைபரணீ அண்ணா, மணிதாசன் ஐயா, அம்பலத்தார் ஐயா.........தேவகுரு அண்ணா, மற்றது சாமியண்ணா... இனியவன்....

அம்மாடியோ! இவ்வளவு பேரா??? வேற யார்? தர்மா, பெப்ஸி, மற்றும் ஒரு சில கருத்தோடு நிறுத்திய அனைத்து நண்பர்க்கும், இன்னமும் இணைந்தும் கருத்தெழுதாத மற்றைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்களுடன், புதிய சுற்றில் வணக்கங்கள்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- anpagam - 11-26-2003

நல்ல ஒரு முன்னேற்றம் நன்றாக நல்லாக உங்களுக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளீர்கள்...நான் இதை எதிர்பார்தேன்
ஐயா நான் இங்கு புதியவன் 2 மாதமே இருக்கா என்னம் உங்கள் கருத்துக்களம் ழுழுதாக வாசிக்கவில்லை ஆனால் சிலநாளிலேயே எனக்கு வந்த ஓர் அறிவித்தல் ஈமெயில் என்னை நன்றாக குளப்பியது நான் எந்தவேளையிலும் பகிடியாகவே கதைக்க விரும்புகிறேன் இங்கு ஆதலால் சிலருக்கு பிடிக்கும் (நான் எழுதியது கருத்து உங்கள் குடும்பத்தை யாரோ தாக்கி இருக்கிறது (யாழில்) )ஏன்நீங்கள்பயப்புடகிறீர்களோ

தெரியவில்லை நான்திய கருத்துக்கு ஒருவரும் பதில் தரவில்லை அதில் இருந்தே எனக்கு எல்லாம் விளங்கியது (அஜீவன் நய்நா தவிர்த்து <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அவரும் ஒரு எல்லைக்குள் நின்றது தெரிந்தது ஆரையும் நான் குறைநினைக்க வில்லை ஆனால் இந்த மாற்றம் கட்டாயம் வரும் என்னதுக்காகவே தொடர்ந்து எழுதினேன்


- AJeevan - 11-26-2003

<!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->நல்ல ஒரு முன்னேற்றம் நன்றாக நல்லாக உங்களுக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளீர்கள்...நான் இதை எதிர்பார்தேன்
ஐயா நான் இங்கு புதியவன் 2 மாதமே இருக்கா என்னம் உங்கள் கருத்துக்களம் ழுழுதாக வாசிக்கவில்லை ஆனால் சிலநாளிலேயே எனக்கு வந்த ஓர் அறிவித்தல் ஈமெயில் என்னை நன்றாக குளப்பியது நான் எந்தவேளையிலும் பகிடியாகவே கதைக்க விரும்புகிறேன் இங்கு ஆதலால் சிலருக்கு பிடிக்கும் (நான் எழுதியது கருத்து உங்கள் குடும்பத்தை யாரோ தாக்கி இருக்கிறது (யாழில்) )ஏன்நீங்கள்பயப்புடகிறீர்களோ  

தெரியவில்லை நான்திய கருத்துக்கு ஒருவரும் பதில் தரவில்லை அதில் இருந்தே எனக்கு எல்லாம் விளங்கியது (அஜீவன் நய்நா தவிர்த்து <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அவரும் ஒரு எல்லைக்குள் நின்றது தெரிந்தது ஆரையும் நான் குறைநினைக்க வில்லை ஆனால் இந்த மாற்றம் கட்டாயம் வரும் என்னதுக்காகவே தொடர்ந்து எழுதினேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நைனா,
புதுசா ஆரும் வந்தாக்கா அப்பிடி , இப்பிடிதான் ஈக்கும்.

நா எல்லாங் ஈக்கேக்க, மனசை சும்மா நாற போட வேணாம்.

செல்றது விலங்குதா நய்னா?


- anpagam - 11-27-2003

உங்களிடம்தானே தணிக்கை ஆயுதம் உள்ளது. தேவைஇல்லாமல் கருத்தாடுவோருக்கு அலம்பல் என ஒருபகுதி பிரித்து கொடுங்கள் தேவையானவர் அங்குபோய் அலம்பட்டும் அறிவுள்ளோர் போனாலும் தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டார். சிலருக்கு இங்கு அது தேவை என்றால் என்னதான் செய்வது.....<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- AJeevan - 11-27-2003

anpagam Wrote:உங்களிடம்தானே தணிக்கை ஆயுதம் உள்ளது. தேவைஇல்லாமல் கருத்தாடுவோருக்கு அலம்பல் என ஒருபகுதி பிரித்து கொடுங்கள் தேவையானவர் அங்குபோய் அலம்பட்டும் அறிவுள்ளோர் போனாலும் தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டார். சிலருக்கு இங்கு அது தேவை என்றால் என்னதான் செய்வது.....<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

[quote=anpagam] [size=15]நான் எந்தவேளையிலும் பகிடியாகவே கதைக்க விரும்புகிறேன் இங்கு ஆதலால் சிலருக்கு பிடிக்கும் (நான் எழுதியது கருத்து உங்கள் குடும்பத்தை யாரோ தாக்கி இருக்கிறது (யாழில்) )ஏன்நீங்கள்பயப்புடகிறீர்களோ


- tamilmaravan - 11-27-2003

இதை அப்பிடியே குருவிக்கு தனிப்பட்டமெயில்லைபோட்டிருக்கலாமே.என்ன நிர்வாகமோ. சிங்கள ஆட்சியாக இல்லாவிட்டால் சந்தோசம் தான்.


- anpagam - 11-27-2003

ஓ அப்பிடி வாறின்களா நய்நா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நான் உம்மை சொல்லவில்லை நய்நா அதை விடும் அப்படியே இதுக்குத்தான் பெயர் பகிடியோட சேர்ந்த ..... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> .....
அதோட நான் முன்பே சொல்லியிற்றன் புகளுக்கும் விருதுக்கும் இங்கு எழுதவில்லை விளம்பரத்துக்கும் விலாசத்துக்கும் இங்கு எல்லோரும் எழுதவில்லை எல்லோருக்கும் (முக்கியமானவருக்கு) தெரியும் நான் யாரோ ....உங்கள் குழுவையும் இங்கு நடப்பதையும் புதியவர்கள் கூட விபரமானவர்கள் உடனே பிடித்துக்கொள்வார்கள் என்னை யாரண்டு எங்குள்ளவன் எனஇணய இலக்கத்தில் மட்டும் காணலாம் ஆனால் சுயநலம் இல்லாத மனிதர் உலகில் இல்லை என நிலை நாட்டுகிறீர்கள் எமக்கு வேலை செய்து வந்து நித்திரை கொள்ள கூட நேரம் இல்லாம இங்கு வந்து ஏதோ எழுதுகிறோம் ஆ னால் அதுக்குள் வேற நாநா நீயா என....என்னவோ நல்லது நடந்தால் நாமும் கலக்கலாம் எனத்தான் இந்த :? Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:


- anpagam - 11-27-2003

அதாவது நாம் தமிழ்ஈழத்தில் எல்லா பகுதி மக்களோடும் உறவாடி இருக்கிறோமா அங்கு ..... இல்லை (இணயத்தில் அது இப்போ சாத்தியமாகியது)(அது வேற யாழ் இணயம் :mrgreen: )இங்கு ஆம் அல்லது ஒம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ) :wink: ஆதலால் சிலர் கதைப்பது சிலருக்கு புதிதாக இருக்கலாம் சிலவேளை பகிடிஎது வெற்றி எது கூட தெரியாமல்கூட இருக்கலாம் எப்படி குளப்பம் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :wink: :| Idea 8)


- tharma - 11-27-2003

ஆகா பிரச்சனை தீர்ந்ததா!!!!!
மட்டற்ற மகிழ்ச்சி



நான் புதிய களம் திறக்க முயற்சித்தேன் ஆனால் திறக்கமுடியவில்லை.I dont know why???????????


- anpagam - 11-27-2003

பாப்பம் பாப்பம் தர்மா இதுல என் இருக்கு பொறுத்திருந்து பாப்பம் அஜீவன் சென்ன மதிரி புதிது என்றபடியால் நேரம் உள்ள படியால் உடன் உடன் கதைக்கிறோம் போக போகத்தான் தெரியும் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இப்பவே எனக்கு போதும் போதும் எண்டாகிற்று :roll: :wink: :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- anpagam - 11-27-2003

என்நொன்று துறந்து என்னதான் செய்ய போறீர் அதுவேற நடக்க்குதோ எனவே மாதிரி ஆகுரின்க இங்கும் பாப்பம் பாப்ம்...இங்கு அறிவு வேண்டும் நய்நா கிட்னி :wink: மட்டும் காணாது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 11-27-2003

வலைஞன் அவர்களே! தனிச் செய்திகளையும் தாங்கள் கவனித்தால் நல்லது.. சிலர் சிலருக்கு தகாத வார்த்தைகளில் தனிச்செய்தி அனுப்புவதை அறிய முடிகிறது. பின் கருத்துக் களத்தில் நல்லவர்கள்போல பலரது அனுதாபத்தைப் பெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிச் செய்தியின் தாக்கத்தால் சில கருத்துகள் வரும்போது.. அது கருத்தாளரையே பறந்தள்ளவும் விளைகிறது. எனவே.. அவற்றிலும் கவனிப்புச் செலுத்தினால்.. களைகளுக்கும் கதிர்களுக்குமுள்ள பகுப்பை செய்யமுடியும் எனக் கருதுகிறேன்.


- yarlmohan - 11-27-2003

tamilmaravan Wrote:இதை அப்பிடியே குருவிக்கு தனிப்பட்டமெயில்லைபோட்டிருக்கலாமே.என்ன நிர்வாகமோ. சிங்கள ஆட்சியாக இல்லாவிட்டால் சந்தோசம் தான்.
தமிழ்மறவன் வலைஞன் எழுதிய கருத்தினை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை என நினைக்கின்றேன். திரும்பவும் வாசித்துப்பாருங்கள்.

sOliyAn Wrote:வலைஞன் அவர்களே! தனிச் செய்திகளையும் தாங்கள் கவனித்தால் நல்லது.. சிலர் சிலருக்கு தகாத வார்த்தைகளில் தனிச்செய்தி அனுப்புவதை அறிய முடிகிறது. பின் கருத்துக் களத்தில் நல்லவர்கள்போல பலரது அனுதாபத்தைப் பெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிச் செய்தியின் தாக்கத்தால் சில கருத்துகள் வரும்போது.. அது கருத்தாளரையே பறந்தள்ளவும் விளைகிறது. எனவே.. அவற்றிலும் கவனிப்புச் செலுத்தினால்.. களைகளுக்கும் கதிர்களுக்குமுள்ள பகுப்பை செய்யமுடியும் எனக் கருதுகிறேன்.

இவ்வாறான தகவல்கள் முன்னரும் எமக்கு கிடைக்கப்பெற்றன. அவர்கள் யார் என்பதும் தெளிவாக எமக்குத் தெரியும். தனிப்பட்ட செய்தியினை தவறாக யாராவது பயன்படுத்த முனைந்தால் அதுபற்றி அறியத்தாருங்கள். தேவைப்படின் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட செய்தி அனுப்பமுடியாதபடி செய்துவிடமுடியும். மேலும் ஒருவரிடம் இருந்து நீங்கள் தனிப்பட்ட செய்தியினைப்பெற விரும்பாது விட்டால் profile என்பதில் சென்று அதற்கான செயற்பாட்டைச் செய்துவிடமுடியும்.


- Paranee - 11-27-2003

புதிதாய் தொடங்கி புதிதாய் வாழ்வோம்
என்றென்றும் கரங்கள் ஓற்றுமைக்காய் இணையட்டும்.


- P.S.Seelan - 11-27-2003

வலைஞன் அவர்களே அறிவுரைக்கு நன்றி. திருந்துவோம். களம் களை கட்டட்டும். இங்கு யாருக்கும் தனிப்பட்ட கோபதாபங்கள் இருக்க முடியாது. சில வேளைகளில் விபரிதங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகின்றது.வேகத்தால்.
நன்றி
வணக்கம்

அன்புடன்
சீலன்