Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனங்களில் நிலையான தமிழ் வீரரே!
#1
மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள்
மண்ணினில் விதையான மாவீரரே
மனங்களில்....

விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள்
விடுதலை மூச்சினில் நின்றீர்களே
மனங்களில்....


தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட
பகைவனை விரட்டவே வந்தீர்களே
மனங்களில்....

ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள்
வேராகி விழுதாகிப் பரந்தீர்களே
மனங்களில்....

இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்
எம் இதயத்தில் நினைவூறுமே!
மனங்களில்....
.
Reply


Messages In This Thread
மனங்களில் நிலையான தமி - by sOliyAn - 11-27-2003, 03:45 AM
[No subject] - by kuruvikal - 11-27-2003, 10:31 AM
[No subject] - by shanmuhi - 11-27-2003, 10:40 AM
[No subject] - by mohamed - 01-12-2004, 12:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)