![]() |
|
மனங்களில் நிலையான தமிழ் வீரரே! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மனங்களில் நிலையான தமிழ் வீரரே! (/showthread.php?tid=7736) |
மனங்களில் நிலையான தமி - sOliyAn - 11-27-2003 மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள் மண்ணினில் விதையான மாவீரரே மனங்களில்.... விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள் விடுதலை மூச்சினில் நின்றீர்களே மனங்களில்.... தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட பகைவனை விரட்டவே வந்தீர்களே மனங்களில்.... ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள் வேராகி விழுதாகிப் பரந்தீர்களே மனங்களில்.... இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும் எம் இதயத்தில் நினைவூறுமே! மனங்களில்.... - kuruvikal - 11-27-2003 <img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/heros/Heros_Page_Pic/MAAVITAR.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilmaravan.com/Backround/Animation/fire.gif' border='0' alt='user posted image'> [b][size=18]மரணத்துகஞ்சும் மனிதரல்ல நீவீர் மரணத்துள்ளும் இலட்சியம் தேடும் அற்புதங்கள் நீவீர்...! மரணத்தால் உம் சரீரம் அழித்தீர் மண்மட்டுமல்ல தமிழன் மானம் காக்கவுமே..! இல்லையில்லை [size=18][b]மண்ணில் புதிய சரித்திரம் படைக்கவே....! உமக்காய் நாம் செய்வது எம்மரணம் வரை உம் சாதனை காப்பதுவும் -அதை சந்ததிகள் கொண்டு மண்ணில் என்றும் நிலைப்படுத்துவதுமே....! - shanmuhi - 11-27-2003 <b>நிஜத்தில் படைத்த சாதனைகளின் பின்னால் நிழல்களாய் தூங்கும் சரித்திர நாயகர்களே உதிர்வின் உயிர்ப்பில் உதிந்திட்ட ஓர்நாள் கார்த்திகை இருபத்தி ஏழில் கைகளில் விளக்குடன் நெஞ்சத்து சோகங்கள் விம்மியழ.... நாம் செலுத்துகின்ற அஞ்சலிக் கோலங்கள் உங்கள் கல்லைறையை புூஜீக்கின்றன</b> - mohamed - 01-12-2004 மனங்களில் நிலையான மாவீர்களை நினைவுகூரும் அதே வேளை இவர்களும் நம் மனதில் என்றென்றும் நிலை நிறுத்தப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் உடல் ஊனமுற்ற அந்த போராளிகள். இந்த வீரர்களின் கட்டுரை ஒன்று பீபீசியில் வந்துள்ளது, வாசிக்கையில் கண்கள் கலங்குகிறது!! http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3343287.stm |