11-06-2005, 01:33 AM
Vasampu Wrote:கிருபன்ஸ் றோயல் மெயில் வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அத்துடன் முத்திரைகளை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறமாட்டோம் என்று காட்டமாக பதிலளித்துள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடைபெறுவதால் நிச்சயம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.
காட்டமாகப் பதிலளித்தது மாதிரித் தெரியவில்லை. தாங்கள் பல இந்து அமைப்புக்களுடன் கலந்தாலோசித்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாததற்கு மன்னிப்புக் கேட்கின்றோம் என்று றோயல் மெயிலின் அதிகாரி ஒருவர் பி.பி.சி வானொலியில் கூறினார். இங்குள்ள இந்து அமைப்புக்களுடன் வருங்காலத்தில் கலந்தாலோசனை செய்வோம் என்றும் கூறினார். எப்படியோ முத்திரைகள் விற்பனைக்கு வரத்தான் போகின்றன. வாங்காமல் விடுவது அவரவர் விருப்பம்.
<b> . .</b>

