11-05-2005, 07:42 PM
மதுரன்
எங்களுக்கப்பால் ஏதோ ஒரு சக்தி எம்மை வாழ வைக்கின்றது என்பதை ஒத்துக் கொண்டுள்ளீர்கள் அந்த அப்பாற்பட்ட சக்தியை ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பெயர் கொண்டு வணங்குகின்றனர்.. நீங்கள் சொல்வதுபோல் சூரியனை வணங்குவதென்றால் சூரியனை புூமியை இயக்குவது யாரென்ற ஒரு கேள்வியும் வருகின்றதல்லவா. வெறும் உணவு உண்பதால் மட்டும் ஒருவர் உயிர் வாழ்ந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மதமென்பது பெரும்பாலும் மனிதனை நல்வழிப்படுத்தவே பயன்படுகின்றது. நாம் ஏதாவது தவறு செய்தால் நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் எமக்குள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் உதறிவிட்டு வாழத்தலைப்படுவோர் தான் எல்லாவற்றிற்கும் பயப்படாமல் அநியாயங்கள் அட்டூழியங்கள் செய்யத் தலைப்படுகின்றார்கள். நீங்கள் கேட்கலாம் சமயங்களைப் பின்பற்றுவோர் தவறு செய்யவில்லையா என்று? ஆம் அவர்களுள்ளும் தவறு செய்பவர்கள் உள்ளனர்.அவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கின்றனர். சில தேவையில்லாத விடயங்களை விட்டுவிட்டு அடிப்படையில் மதங்கள் சொல்லும் சரியான முறையில் வாழவைதே சிறப்பானது.
ஆம் தமிழருக்கு மதம்சார்ந்த ஒரு அடையாளம் தேவைதான். ஆனால் அது எவ்விதத்திலும் மற்மறையோரை காயப்படுத்தாமலிருக்க வேண்டும்.