11-05-2005, 05:13 PM
Vasampu Wrote:இங்கே பலர் என்னிடம் கேள்விக்கணைகள் தொடுத்திருப்பதால் எல்லோருக்கும் பதிலளிக்கின்றேன்வசம்பு உங்கள் பதிலுக்கு நன்றி.
மதுரன்:
உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. சுரி விடயத்திற்கு வருகின்றேன். இந்துமதம் என்பது தற்போது சைவம் வைணவம் போன்றவற்றையே உள்ளடக்கியே குறிப்பிடப்படுகின்றன. இப்போது எவரும் எனதுமதம் சைவம் என்று குறிப்பிடுவதில்லை. இந்துமதமென்றே குறிப்பிடுகின்றார்கள். ஏன் தற்போதய தமிழ் இஸ்லாமிய கிரிஸ்தவ சகோதரர்களின் மூதாதையர் எந்த மதத்தை தழுவி இருந்தனர் என்று எண்ணுகின்றீர்கள்.
நீங்கள் அளித்த பதிலில் இந்து மதத்தினை தவிர்ந்த ஏனைய சமயத்தவர்களின் பூர்வீகம் பற்றி வினாவியுள்ளீர்கள். ஆனால் நான் கேட்ட கேழ்வி வேறு. நான் கேட்ட கேள்வியை முடிந்தால் மீண்டும் ஒருமௌறை படித்து பாருங்கள். இதில் நான் எனதி வினாவினை இவ்வாறுதான் தொடுத்துள்ளேன். முடிந்தால் அதற்கு பதில் தாருங்கள். என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு ஒன்றில் மதம் தேவை இல்லை இல்லாது விடின் இயற்கை வளிபாடே சிறந்தது. நாம் உண்ணும் உணவே எம்மை வாழ வைக்கின்றது. அதனைத்தரும் சூரியன் தான் நமது சக்தி. அதனை வணக்கலாம். இயற்கை வளிபாடே சிறந்தது. என கருதுகின்றேன்.
நான் கேட்ட கேழ்வி:
தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?

