11-05-2005, 03:44 PM
இங்கே பலர் என்னிடம் கேள்விக்கணைகள் தொடுத்திருப்பதால் எல்லோருக்கும் பதிலளிக்கின்றேன்
<b>
குருவி:</b>
மதங்களைக்கடந்து மனிதம் பேணப்படவேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாறுபட்ட கருத்தும் கிடையாது. மனிதத்திற்கு அடிப்படையான தனமனித சுதந்திரமும் காக்கப்பட வேண்டுமென்பதே எனது அடிப்படை வாதம். றோயல் மெயிலுக்கு நீண்ட கால பாரம்பரியம் இருக்கலாம். அதற்காக அதன் தலைமைப் பொறுப்பிலிருப்போரெல்லாம் அதன் கௌரவத்தைப் பேணுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்று வாதிட முடியாது. பொதுவாக எல்லாச் சமயங்களும் அடிப்படையில் ஒரே விடயத்தைத்தான் போதிக்கின்றன. ஆனால் அச்சமயங்களை பரப்புவோரும் போதிப்போருமே தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு மற்றைய சமயத்தினரையும் வம்புக்கிழுக்கின்றார்கள். றோயல் மெயில் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல விரும்பியிருந்தால் ஒரு சிலுவை அணிந்த கிறிஸ்தவர் வேற்றுமதக் கடவுளை வணங்குவதுபோல் முத்திரை வெளியிட்டிருக்கலாமே?? அப்படிச் செய்திருந்தால் அது பாராட்டப்பட்டிருக்க வேண்டிய செயல். என்னை மற்றையோர் மதிக்கின்றார்கள் என்பதிலோ அல்லது நான் மற்றையோரையும் மதிக்கின்றேன் என்பதிலோ பெருந்தன்மை தெரிகின்றது. மற்றையோருக்கு போதனை செய்வதைவிட முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு.
களத்தில் இந்துமதம் விமர்சிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான் ஒரு வீட்டில் இரு சகோதர்கள் தமக்குள் அடிபட்டுக் கொள்வதற்கும் அதே இரு சகோதரர்களும் பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுவதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. தற்போதைய விடயம் ஊர் பார்க்க இடம்பெறும் தெருச்சண்டை. அதுவும் தன்பாட்டில் சும்மா இருப்போரை வம்புக்கிழுத்துள்ளார்கள். பாடசாலை நாட்களில் வெள்ளையுள்ளத்துடன் எத்தனையோ செய்கின்றோம. அதற்கு எந்தவித அர்த்தமும் கொள்ளாமல் ஆடிப்பாடி மகிழ்வதே எமது நோக்கமாகவும்pருந்தது. அதுபோல் மாற்றுசமய நிகழ்வுகள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல் எம்மை மனமகிழ்வோடு பங்குபற்ற அனுமதித்த எமது பெற்றோர்கள் தான் சிறப்பானவர்கள். அந்தப் பெருந்தன்மை றோயல் மெயிலுக்கு ஏன் வரவில்லை.
<b>அடிதடி:</b>
பொதுவாகவே நான் கருத்தைக் கருத்தாலேயே எதிர் கொள்பவன். நீங்கள் தான் கருத்தை திசைதிருப்ப ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். பொட்டுப் பற்றி மற்றையோர் எழுதிய கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். எனவே தற்போது அது இந்துமத சின்னம்தான் என்று புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனியும் உங்களுக்கு புரியவில்லையென்றால் ஒன்றுமே செய்யமுடியாது.
<b>மதுரன்:</b>
உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. சரி விடயத்திற்கு வருகின்றேன். இந்துமதம் என்பது தற்போது சைவம் வைணவம் போன்றவற்றை உள்ளடக்கியே குறிப்பிடப்படுகின்றன. இப்போது எவரும் எனதுமதம் சைவம் என்று குறிப்பிடுவதில்லை. இந்துமதமென்றே குறிப்பிடுகின்றார்கள். ஏன் தற்போதய தமிழ் இஸ்லாமிய கிறிஸ்தவ சகோதரர்களின் மூதாதையர் எந்த மதத்தை தழுவி இருந்தனர் என்று எண்ணுகின்றீர்கள்.
<b>அஜிவன்:</b>
நீங்கள் வினாவிற்கு விடையளிப்பதைவிட எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதிலேயே குறியாக உள்ளீர்கள். உங்கள் முதல் இணைப்பு அதனையே தெளிவாக்குகின்றது. ஒரு பச்சோந்தியின் சுயபுராணம்தான் அதில் இருக்கின்றது. பொலிஸார் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்று புூச்சாண்டி காட்டுகின்றீர்கள். இது உங்களுக்கே கேவலமாக இல்லையா?? மிதிபடும் இனமாக நாம் வாழ்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி.