11-05-2005, 02:08 PM
இது நடந்தது பல வருடங்களுக்கு முன். அப்போது எனது தாயாருக்கு பத்து வயது இருக்கலாம். அப்போது அவர்கள் பேய்க்குளம்(இப்போது அதன் பெயர் மாற்றப்பட்டுவிட்டது) என்னும் இடத்தில் வசித்து வந்தார்கள். வீட்டிற்கு சிறிது தூரத்தில் ஒரு கடை இருந்தது. அடிக்கடி தேவையான பொருட்களை வாங்க எனது அம்மம்மா அவரை அந்தக்கடைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கடைக்குச்செல்ல பல வீடுகளைக்கடந்து தான் செல்ல வேண்டும். ஒரு மத்த்pயானவேளை எனது தாயார் கடைக்குச் செல்லும் வழியில் ஒரு தோட்ட வீட்டைப்பார்த்தார். அந்த வீட்டின் முன் சில கோழிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு நாயுடன் ஒரு சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அவளும் எனது தயாரின் வயதை ஒத்த வயதில் காணப்பட்டதால் தாயார் அவளுடன் நட்புக்கொண்டு ஒன்றாக சிறிதுநேரம் விளையாடி மகிழ்ந்தார்கள். சிறிது நேரத்தின்பின் அந்தப் சிறுமியின் பெற்றோர் எனது தாயாரை மதிய உணவு உண்ண அழைத்துள்ளார்கள். ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனது தாயாருக்கு அந்த உணவு அமிர்தமாக இருந்ததாம். அது மட்டுமல்ல அவர்கள் மிகவும் அன்பாக நட்புடன் பழகியதால் எனது தாயாரால் இன்றும் அதை மறக்க முடியவில்லை. உணவு உண்ட பின் சிறிது நேரம் விளையாடியபின் வீட்டு நினைவு வர தாயார் விடைபெற்றுவந்துவிட்டார். தாயாரைக்காணாததால் கவலையில் அம்மம்மா கோவம் கொண்டுள்ளார். எங்கே சென்றாய் என்று தாயாரைக்கேட்டுள்ளார். தாயார் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. ஏனெனில் அப்படி யாரும் அங்கு இல்லை. அதன்பிறகு தாயார் விபரமாகச் சொன்ன பின்னும் அம்மம்மாவால் நம்பமுடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அம்மா சொன்ன அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் அனைவரும் தீவிபத்தில் இறந்து போனார்கள். சில நாட்கள் கடந்து மீண்டும் எனது தாயார் அந்த கடைக்குச்செல்லும் போது அந்த வீட்டைப்பார்த்திருக்கிறார் அந்த வீடு பாழடைந்து காணப்பட்டிக்கிறது. அங்கு யாரும் வாழ்வதுபோன்ற அறிகுறியே அற்றிருக்கிறது.
Terri
Terri

