11-05-2005, 10:49 AM
Vaanampaadi Wrote:[quote=adithadi]தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள்? யாராவது விளக்க முடியும்மா?
பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?
பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.
அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.
ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.
அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.
தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.
அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)
அம்புலிமாமா கோகுலம் வாசிச்சதன் விளைவுகள் இவை...அப்படியா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

