11-05-2005, 10:27 AM
எனது சின்னவயதிலே எனது நண்பி(மேரி) வீட்டுக்குச்சென்று விடுமுறையில் தங்குவது வழக்கம். அவளது வீடு பெரிய ஒரு தோட்டத்தின் நடுவிலே அமைந்துள்ளது. மிகவும் பழமையான வீடு. ஒவ்வொரு அறையும் பெரிய விசாலமானவை. பல அறைகள் பராமரிப்பு இன்றி தூசி படிந்து கிடக்கும். அங்கு குழந்தைகளுகள் விளையாடுவதற்கென்று தனி அறை ஒன்று அதில்தான் நாங்கள் பெரும்பாலும் எனது பகல் நேரத்தைச் செலவு செய்வோம். அறையின் ஒரு பகுதியில் தண்ணீரை சூடு செய்யும் சாதனம் அமைந்திருந்தது. அதையொட்டி பெரிய பெரிய அலுமாரிகள் சுவரில் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு அலுமாரியில் தான் நாங்கள் விளையாடும் விளையாட்டுப்பொருட்கள் நிறைந்து கிடக்கும். அதையொட்டி உள்ள மேசையில் தான் நாங்கள் படங்கள் வரைந்து விளையாடுவோம். அந்த அறையில் நான் தனியாக இருக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் எனக்கு பயங்கரமாகவே கழியும். அதனால் எனது நண்பியுடன் தான் எப்போதும் இருப்பேன். அந்த தண்ணீரை சூடு பண்ணும் இயந்திரத்திற்கெதிராக நான் எப்போதும் அமர்வது கிடையாது. அங்கு யாரோ பின்னால் இருப்பது போன்று உணர்வு ஏற்படும்.
உயர் நிலைப்பள்ளியில் நாம் படிக்கும் போது நண்பிகளுடன் அரட்டை அடிப்பது வழக்கம். அப்போது சில சமயங்களில் ஒருவருக்கொருவர் தெரிந்த பேய்கதைகள் சொல்லி மற்றவர்களை; பயமுறுத்தி மகிழ்வோம்.
ஒரு சமயம் ஒரு நண்பி தனது வீட்டில் ஏற்பட்ட அனுபவத்தைச்சொன்னாள். அவளது வீட்டில் பேய் குடியிருப்பதாக அவர்கள் நம்பினார்கள். நடு இரவில் பல சமயங்களில் குழந்தை அழும் ஒலியை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். விசாரித்ததில் அந்த வீட்டில் முன்பு ஒரு குழந்தை இறந்ததாக தெரிய வந்துள்ளது. அந்தக் குழந்தை ஒரு சிறிய தொட்டிலில் இருந்த போதுதான் இறந்துள்ளது. அந்த குழந்தையின் அறையை இப்போது யாரும் பயன்படுவதில்லையமாம்.
அதன்பின்; மேரி ஒரு உண்மையைச்சொன்னாள். தங்கள் வீட்டிலும் அது போன்ற சில சம்பவங்கள் நடந்ததாகச்சொன்னாள். ஒரு சமயம் தனது தாய் இரவு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென குளிர் காற்று வீசியதாகவும். அப்போது யாரொ அருகே நடந்து செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும். அவர்கள் வீட்டு செல்ல நாய் திடீரென அந்த தண்ணீர்சூடு பண்ணும் இயந்திர உள்ள அறையைப்பார்த்து குரைத்ததாகவும். இந்தச் சம்பவத்திற்கு முன் அந்த அறையில் தானாக தண்ணீர்க்குழாய் திறந்து தண்ணீர் கொட்டிய சம்பவங்களும் நடந்துள்ளதாம்.
Brandy