11-05-2005, 01:34 AM
Vasampu Wrote:அடிதடி பொட்டு தமிழரின் இந்து மத அடையாளம் தான். ஆனால் 100 வீதம் தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்களாகத்தான் முன்பு இருந்தார்கள். உம்மைப்போல் எதையும் அரைகுறையாக அறிந்து வைத்திருந்த சிலர் தமது வசதிகளுக்காக ( வேலை வீடு போன்றவற்றிற்காக ) அன்றும் மதம் மாறினார்கள். இன்றும் மதம் மாறுகின்றார்கள்.
வணக்கம் வசம்பு நீண்ட நாட்களிற்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நீங்கள் மேலே குற்ப்பிட்ட விடயம் சரியானதா என அறிய ஆவலாக உள்ளேன் ஆதலால் இவ்வினாவினை இங்கே முன் வைக்கின்றேன்.
தமிழர்கள் இதுக்களா? காரணம் இந்து என்னும் சொல் கிரேக்கத்தில் இருந்து தான் வந்ததாக அறிஞ்ஞர்கள் கூறுகின்றார்கள். ஆதி காலத்து மனிதன் வளிபட்டது இயற்கையையே (சூரியனை, மரம், செடி, கொடி, (தானியம் தருகின்ற) வற்றை வணங்கி இருக்கின்றார்கள். அதே நேரம் இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் இயற்கையை வளிபட்டு இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம். சிவப்பு இந்தியர்கள், சாமர்கள், குர்த்திஸ் இன மக்கள்( பழம் குடியினர்). ஆப்ரிக மக்கள், தமிழர்கள் இன்னும் பல பழங்குடிகள். பின்நாளில் உருவ வளிபாடும் தோன்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?

