11-04-2005, 07:44 PM
Vasampu Wrote:குருவி மதனின் வாதம் சரியானதே. மதமென்பது தனிமனிதர் சுதந்திரம். தயவுசெய்து யேசு நாதரையும் மதங்களைப்பரப்ப முயலும் அயோக்கியர்கள் செய்யும் அட்டுழியங்களையும் ஒப்பிட்டு எழுhதாதீர்கள். யேசு மதங்களைக் கடந்தவர் என்றால் யேசு மற்றைய மதத் தெய்வத்தை வணங்குவது போல் முத்திரை வெளியிடட்டுமே. அப்படி வெளியிட்டால் அது பெருந்தன்மை. அப்படி வெளியிட்டிருந்தால் வெள்ளையர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதும் தெரியும்.
சாத்திரி ஒரு நாட்டில் நாம் வாழும்போது அந்நாட்டின் விடுமுறைகள் எமக்கும் சார்ந்ததுதான். ஒரு மதத்தை சார்ந்தவர் இன்னொரு மதக் கடவுளை வணங்குவதில் தப்பல்ல. அது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. உதாரணமாக பல வெள்ளையர்கள் ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து கிருஷ்ணனை வணங்குகின்றார்கள். அதற்காக சிலுவை அணிந்த ஒருவர் கிருஷணனை வணங்குவதாக இந்தியா முத்திரை வெளியிட்டால் வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?? மற்றும் இங்கு இந்துக் கோவில்களையோ மற்றைய கோவில்களையோ தடைசெய்யாமலிருப்பதை சுட்டிக் காட்டினீர்கள். தாராளமாகத் தடைசெய்யட்டுமே. தடைசெய்தால் ஆசியாவிலுள்ள தேவாலயங்களுக்கு என்னாகும் என்பதை உங்களை விட இவர்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.
விட்டால் இந்துமத தெய்வங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காட்டவே உள்ளாடைகளிலும் பாதணிகளிலும் அச்சிட்டார்கள் என்றும் வாதிடுவீர்கள்.
வசம்பு...இங்கு களத்தில் எத்தினை விதமாக இந்து மதந்தைப் பழித்தார்கள்..அப்போ எங்கோ போனது இந்த மதிப்பளிப்பு..??! உண்மையில் இது இரட்டை வேடத்தனமாகவே தெரிகிறது..! களத்தில் ஒரு நியாயம்..வெளிக்கு ஒரு நியாயமாக..!
கிறீஸ்மஸ் கொண்டாடுவது இன்ன மதந்தவர் என்றதிலும் அது எல்லோராலும் கொண்டாடப்படுவது என்பதே நாங்கள் தரிசித்தது..! நாங்களும் கரோல் கீதம் இசைத்து நத்தார் தாத்தா வேடம் போட்டு ஊர் சுற்றியதும் உண்டு..! சேர்ச் போனதும் உண்டு...கிரமமாக..!
அதுவும் மேற்கைப் பொறுத்தவரை அவர்கள் மதத்திற்கு என்றில்லாமல் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றனர்..! அந்த முத்திரையைப் பார்க்கின்ற போது பொட்டு வைத்த ஒரு குடும்பத்துடன் வெள்ளையர்கள் கலந்திருப்பது போல இருக்கிறது..! உண்மை... மேற்கில் குறிப்பாக ஆசியர்கள் வெள்ளைகளோடு நெருங்கிப் பழகுவது குறைவு.. கறுப்புகள் பழகுவதைக் காட்டிலும் இவர்கள் குறைவு..! இப்படியான தனிமைப்படுத்தல்களே..பேர்மிங்காம்...பிரட்பேட் பகுதிகளில் கலவரங்கள் தோன்றக் காரணம்...! இவற்றை மையமாக வைத்து ஒற்றுமையை நட்புறவை சகோதரத்துவத்தை வலியுறுத்த அந்த தபால்தலையை றோயல் மெயில் வெளியிட்டிருக்கும்...உண்மையில் அது சிறந்ததே..!
மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் மனிதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முதன்மைத் தேவை...! அப்போதுதான் ஒற்றுமை சகோதரத்துவம் வளரும்...! அமைதி தோன்றும்..புரிந்துணர்வு பெருகும்..! மதம் மதம் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் எந்த நன்மையும் இல்லை..மத அடையாளங்களால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...??! எதுவுமே இல்லை...! வெறும் இனத்துவ அடையாளத்துக்காக மதத்தை காக்கிறார்கள்..மனிதம் தொலைய.. அது அவசியம் தானா...! மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை...அவர்களிடம்..! எனவே அவர்கள் இம்முத்திரையை மதவாதக் கண்ணோட்டத்தில் காண்பதிலும்..சகோதரத்துவத்தை கொண்டுவர உதவுவதாகவே காண்பார்கள்...! அப்படிப் பார்க்கப்பட்டால்..அது றோயல் மெயிலுக்கே வெற்றி..! உலகில் தபால் தலையை அறிமுகப்படுத்திய நாடு...ஒருபோதும் முன்பின் யோசிக்காது இப்படி சீப்பான விமர்சனங்களுக்காக அம்முத்திரையை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை...என்றே கூறலாம்..! முத்திரைகள் வெறும் கடதாசிகளாக அன்றி ஒரு நாட்டின் மக்களின் சிறப்புகளை உலகறிய வைக்கும் பணியையும் செய்து வருகிறது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

