11-04-2005, 02:16 PM
ஈழத்திலை சாதி ஒழிய வேண்டும் என்பதுதான் எல்லாற்றையும் விருப்பம் இதுக்காகத் தான் ஆரம்பத்திலும் எமது இயக்கங்கள் சில் போராட்டங்களை நடத்தியது ஆனால் சில சாதியை வைத்தே பிழைப்பு நடத்துபவர்களால் அவை முறியடிக்கப்பட்டது 1986ல்கரைநகரில் இருக்கும் பொதுக் கிணற்றில் சகல மக்களும் தண்ணி எடுக்கலாம் என புளோட் அமைப்பு ஒரு முறையை கொண்டு வந்தது ஆனா அங்குள்ள உயர் சாதிப் பெண்களாலேயே அவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் (புளோட் ஆயுதமில்லாத இயக்கம்) ஒரு காலத்தில் மரணவீடுகளுக்கு முடிவெட்டுபவர்களையும் துணி தோய்ப்பவர்களையும் கூப்பிடக் கூடாது எண்டு இயக்கம் அறிவித்தது ஆனா அந்த தொழிலை செய்பவர்களின் வறுமை காரணமாகவும் நடைமுறைக்கு சரியாக வரவில்லை இன்றைய இளைய சமூதாயம் இதுகளை விட்டு ஒழிக்க தயாராத்தான் இருக்கிறார்கள் ஆனா பழைமை வாதிகள் தங்களைப் போல அவர்களையும் சாதிப்பிடியில் வைத்திருக்கப் பார்ப்பதால் இந்த பிரச்சனை. சரி ஊரிலைதான் இப்பிடி வெளிநாடு வந்த எம்மவர்கள் இதுகளை களைந்தெறிய முன்வரலாம்தானே சாதிகள் உருவானது அவரவர் செய்யும் தொழிலை வைத்துத்தான் இங்கு வெளிநாட்டிலும் நாம் சிலவேளைகள் செய்யும் தொழில்களை வைத்து எங்களுக்கும் முத்திரையை குத்தலாம் அல்லவா? ஆண்டாண்டா ஊறிப்போயிருக்கும் சாதி ஒழிப்பு நாங்கள் சொல்வதைப் போல திடீரென நடைமுறைக்கு கொண்டு வரஇயலாது படிப்படியாகத்தான் முடியும் இப்பவும் பாருங்கோ வீட்டிலை கள்ளுசீவிற முருகன் வீட்டிலை நான் போய் சாப்பிட்டு கள் குடிச்சிட்டு வாறது மனுசிக்கத் தெரியாது தெரிஞ்சா அவ்வளவுதான் ஆனபடியா இந்த பழசுகளின்ரை காலத்திலை இதை நடைமுறைபடுத்துவது வலு கஷ்டம் இளைய சமுதாயம் தான் சிந்திக்க செயல்படவேணும்;.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

