11-04-2005, 09:45 AM
Mathan Wrote:ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்றய மதத்தை வழிபடுவதில் தவறேதும் இல்லை, இந்து மதத்தவர்கள் யேசுவையோ, அல்லது கிறித்தவ மதத்தவர்கள் புத்தரையோ வழிபடுவதில் ஒரு தவறும் இல்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை வழிபடுபதாக முத்திரை வெளியிடும்போது அது ஒரு மதத்தை உயர்த்தி மற்றய மதத்தை தாழ்த்துவது போல தோற்றமளிப்பதே எதிர்ப்புகள் கிளம்ப காரணம், ஒவ்வொரருக்கும் ஒவ்வொரு மத நம்பிக்கைகள் இருக்கின்றன, நாம் அவற்றை மதித்து நடக்கலாமல்லவா.
பொதுவா பொட்டு இந்துக்களின் மத அடையாளமாகவே கருதப்படுகின்றது,
இப்படிச் சொல்லுற நீங்களா..இந்து சமயத்தை கேவலமாக வக்கிரமாக விமர்சிக்க பார்த்திட்டு இருந்தீர்கள்..! அப்போ எத்தனை பேரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்தீர்கள்..!
hock: :roll:
நிச்சயமாக றோயல் மெயில் செய்ததில் தவறில்லை.பொட்டு இந்துக்களின் சொத்து என்றும் அதை மற்றவர்கள் பாவிக்கக் கூடாது என்றும் உலக சட்டம் எதுவும் இல்லை..! அதுபோல
பொட்டு வைத்த இந்துப் பெண் என்றாலும் ஆண் என்றாலும்....ஜேசுவை கிறிஸ்மஸ்ஸைக் கொண்டாடக் கூடாது என்றும் இல்லைத்தானே..! அது தனிமனித சுதந்திரம்..அதற்குள் மதத்தைத் திணித்து தலையிடுதல் அழகல்ல..! அவர்களுக்கு அந்த வடிவம் பிடிச்சிருக்கு அச்சிட்டார்கள்...! எந்த இந்துவாவது சொல்லட்டும் பொட்டு தங்களுக்குத்தான் ஒரே சொந்தம் என்று...??! நிச்சயமாக இல்லை..! ஆபிரிக்க ஆதிக்குடியினர் சிலரிடமும் பொட்டு வைக்கும் பழக்கம் உண்டு..அடையாளத்துக்கு..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

