11-03-2005, 11:03 PM
Mathan Wrote:<img src='http://img365.imageshack.us/img365/93/stamp1jr.jpg' border='0' alt='user posted image'>
இந்து குடும்பத்தினர் யேசுவை வணங்குவது போல காட்சியளிக்கும் இந்த தபால் தலையை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ரோயல் மெயில் வெளியிட்டது. இதற்கு பிரிட்டன் வாழ் இந்துக்கள் தமது சமய உணர்வுகளை புண்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்த தபால் தலையை திரும்ப பெற ரோயல் மெயில் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து ரோயல் மெயிலுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடந்த இந்து அமைப்புகள் தீர்மானித்துள்ளன,
இப்படத்தில் உள்ளவர்கள் இந்துக்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவ் ஓவியம் 17ம் நூற்றாட்டில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது.
திருநூறு இந்துவின் அடையாளம், ஆனால் பொட்டு இந்திய உபகண்ட மக்களின் அடையாளம். இந்திய உபகண்டத்தில் கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லையா?
இயேசு இவ் மானிடரின் கொடுமைகளை உடைத்தெறிந்தார், புரட்சிவாதி. ஆனால் முட்டாள் மக்களோ அவரை கடவுள் ஆக்கி விட்டார்கள். ஆனால் இன்று மதவெறியர்கள் இன்னும் ஒருமேல் படி போய்விட்டார்கள். மதத்திற்காக மனிதனை கொல்லும் மிருகங்களாக மாறி விட்டார்கள்.

