11-03-2005, 09:45 PM
inthirajith Wrote:காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ?
நீங்கள் சொல்வது போலவே எங்களுக்கும் ஒரு நண்பன்... காதலியின் காதல் அன்பு போலி என்றதும் துடித்தே போனான்... அப்புறம்..பரீட்சைகளிலும் தோல்வி உற்று விரக்தியில் இருந்தான்...! இப்போ அவன் நிலை தெரியாது..தொலைபேசி இலக்கம் மாற்றிவிட்டான்...மின்னஞ்சல் போட்டும் பதிலில்லை..! அவனின் துன்பத்தால் நண்பர்கள் நமக்கும் துன்பம்...இருந்தாலும்..நாம் அதைப் பகிரப் போய்...அவன் நினைவுகள் மீளக் கூடாது என்று நினைத்து அவன் போக்கில் விட்டாச்சு...! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனசு...சிலருக்கு மிகவும் இழகிய மனசு..! அப்படிப்பட்டவர்கள் தோல்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் துடித்தே போகின்றனர்..! மனதை... ஒரு மனிதனின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள்..ஏன் காதலிக்கிறார்களோ....???!
hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

