11-03-2005, 09:31 PM
உண்மையில் இது போன்ற விடயங்கள் பலகாலமாகவே நடைபெறுவதும் பின் வருத்தம் தெரிவிப்பதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இம்முறை பதிலில் தினாவெட்டே அதிகமிருக்கின்றது. முன்பு கூட உள்ளாடைகளில் பாதணிகளில் இந்து தெய்வங்களை அச்சிடடு அவமானப் படுத்தினார்கள். இப்படியான விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக உலகளாவியரீதியில் ஒரு சட்டத்தடுப்பை ஏற்படுத்தி அதை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். மத நம்பிக்கை என்பது அவரவரது சொந்த விடயம். ஒருவர் இன்னொரு மதத்தவர் மனம் நோகும்படி நடந்து கொள்வதே அவர் சார்ந்த மதத்தை கேவலப்படுத்துவதற்கு ஒப்பானது. இப்படியான விடயங்களில் தகுந்த நடவடிக்கைகள் தேவையானவையே.

