11-03-2005, 02:25 PM
அம்மா "பிச்சை" போடுங்கோ..
(ம்ம் மன்னிக்கவும்)
அக்கா "பிச்சை" போடுங்கோ..
ஏனப்பா?
கால் கை எல்லாம்
நன்றாகத்தானே உள்ளன??
வேலை எதுவும் கிடைக்கேல அக்கா..!!
சரி.. நாளை இங்கு போ..
உனக்கு வேலை கிடைக்கும் !!
அடுத்த நாள் அடுத்த வீதியில்
அதே குரல்
"அம்மா பிச்சை போடுங்கோ"
எதிர் கொண்டேன்..
ஏன்டா "பிச்சை" எடுக்கிறாய்???
அழுத்தமான குரலில் கேட்டேன்
மறுமொழி கூறாமல்
பார்வையுடன் சென்று விட்டான்
கலங்கி நின்றேன்..!!
ஒரு வாரத்தில்
ஒரு கடுதாசி..!
"வயிற்றுக்காய் பணம் சேகரித்தல்"
என்று தலைப்பிடப்பட்டிருந்தது..!
அவசரமாய் பிரித்தேன்..
உள்ளே..
"பிச்சை என்று
இகழ்ச்சி செய்ததால்
உங்கள்மேல் வழக்கு"
அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!
நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!
அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!
(ம்ம் மன்னிக்கவும்)
அக்கா "பிச்சை" போடுங்கோ..
ஏனப்பா?
கால் கை எல்லாம்
நன்றாகத்தானே உள்ளன??
வேலை எதுவும் கிடைக்கேல அக்கா..!!
சரி.. நாளை இங்கு போ..
உனக்கு வேலை கிடைக்கும் !!
அடுத்த நாள் அடுத்த வீதியில்
அதே குரல்
"அம்மா பிச்சை போடுங்கோ"
எதிர் கொண்டேன்..
ஏன்டா "பிச்சை" எடுக்கிறாய்???
அழுத்தமான குரலில் கேட்டேன்
மறுமொழி கூறாமல்
பார்வையுடன் சென்று விட்டான்
கலங்கி நின்றேன்..!!
ஒரு வாரத்தில்
ஒரு கடுதாசி..!
"வயிற்றுக்காய் பணம் சேகரித்தல்"
என்று தலைப்பிடப்பட்டிருந்தது..!
அவசரமாய் பிரித்தேன்..
உள்ளே..
"பிச்சை என்று
இகழ்ச்சி செய்ததால்
உங்கள்மேல் வழக்கு"
அடே தமிழா...
சிரிக்கத் தோன்றுகிறது..!!
நான் நேற்று
பிறந்தவள்..
"பிச்சை" என்றோ
(அதுவும் உன்னால்)
பிறப்பிக்கப் பட்டது..!
அம்மா "பிச்சை" போடுங்க
என்பதை நீ நிறுத்து..
என் பச்சையை நான்
நிறுத்துகிறேன்..!!

