11-03-2005, 07:00 AM
kavithan Wrote:<b>சாதிகள் பற்றி பேசி தனிப்பட்ட தாக்குதல்களில் நீங்கள் ஈடுபட எத்தனித்ததன் காரணமாக நித்தியா கவிதைகள் என்ற தலைப்புக்குள் இருந்த சாதிகள் பற்றிய கருத்துக்கள் அங்கத்தவர் பகுதிக்கு மாற்றப் படுகிறது </b>.
தொழில் ரீதியில் ஏற்றபட்ட ஏற்றத்தாழ்வுகள் சாதிகளாக முன்னோர்களால் பிரிக்கப் பட்டு இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவ் வர்க்க வேறுபாடு சிறிது சிறிதாக அழிக்கப் பட்டு வருக்கிறது. புலத்தைப் பொறுத்தவரை இப்போது அனைவரின் தொழிலும் கிட்டத்தட்ட ஒன்று தான். இங்கே உங்கள் சாதி உயர்ந்த சாதி என்று சொல்லி அரசாங்க உத்தியோகமா எடுக்க முடியும் அல்லது தாழ்ந்த சாதி என்றால் தாழ்ந்த வேலையா எடுக்க முடியும். எந்த வேலை கிடைக்கிறதோ அதனை தானே செய்கிறீர்கள்.. வெள்ளைக் காறனுக்கு கோப்பை கழுவினால் உயர்ந்த சாதியா ...? தாழ்ந்த சாதியா..? ஏன் தான் அழிக்கப் படவேண்டியவற்றை எல்லாம் பேசி ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறீர்கள்.தமிழ் தேசியத்தில் அனைவரும் தமிழன் என்ற ஒரே வர்க்கமாக வாழ்வோமாக.
நன்றி
நன்றி கவிதன் இதை இங்கு நகர்த்தியதற்கு..! இவ்வாறான அலட்டல்கள் சமூகவிரோத கருத்துக்கள் ஒரு சிலரோடு உதித்து உதிரட்டும்...! இன்று சிறுவர்கள் சிறுமிகள்.. சாதியம் என்பது அறியாது.. தெரியாது வளர்ந்து வருகிறார்கள்..அவர்களை அவர்கள் பாதையில் உயர் மனிதநேயம் உள்ளவர்களாக நல்ல மனிதர்களாக உருவாக விடுங்கள்..!
சாதி உச்சரிப்பே சாதிய வெளிப்பாட்டின் ஆரம்பநிலை..! அதை மீண்டும் இங்கு தொடரச் சிலர் கங்கணம் கட்டி நிற்கின்றனர்..! பேச்சுப் பொருள் என்று அநாவசியங்களை காவும் இவர்கள் மனங்களுக்குள் அடங்கி இருப்பது என்ன...??! மொத்த சாதியமும்...அதன் ஆதிக்கமும்...மட்டுமே..! புலம் சரி.. தாயகம் சரி இன்று சாதியம் என்பது கூனிக்குறுகி நிற்கிறது..! அதற்கு முண்டுகொடுக்க நினைப்பவர்களை தீவிர கருத்தியல் என்ற போர்வையில் களம் நிமிர இடமளிக்கிறது..! இந்த இடத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா சொன்னது போல...சாதிகள் இல்லையடி என்றபடி சாதியத்தைப் படிப்பவனே உச்சரிப்பவனே உண்மையான சாதி வெறியன்..! அவன் எதற்காக அநாவசியமாக அகற்றப்பட வேண்டியதுக்கு விளக்கம் தேடுறான்..காவித்திரிகிறான்....!! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

