11-03-2005, 05:29 AM
narathar Wrote:வணக்கம் ஜூட்,
யோசிச்சு ஆறுதலா எழுத நேரம் வேணும்,உங்கள் பதிலுக்கு உடனடையாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டீர்கள் கடினமாக உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று.
நான் எங்கே அப்படி சொன்னேன்? நான் அப்படி சொல்லவில்லை. நான் சொன்னது வருமாறு:
Jude Wrote:சமமற்ற உழைப்பின் பலன் சமமாக பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்ப மாட்டார்கள்.
உங்களின் தொடரும் விளக்கம், நான் சொல்லாததை, நான் சொன்னதாக நீங்களே சொல்லி, அதற்கு தரும் விளக்கம். கடினமாக உழைத்தவர்கள் எல்லோருக்கும் பலன் கிடைப்பதில்லை.
narathar Wrote:இதில் நீங்கள் கடின உழைப்பு என்று எதைக் கூறுகிறீர்கள்? நீங்கள் கூறுவது மனிதர்கள் உடலால்,மூளயால் செய்யும் வேலையா?
சரி இப்ப உடலால் என்று பாத்தா உடலால் கடினமா தொழில் செய்யிறவை யாரு?கூலிக்கு சுமக்கிற தொழிலாளர்
போன்றாவர்.ஆனா இவை தான் சமூகத்தில அதிகம் கஸ்ட்டப் பட்ட மக்களாய் இருகினம்.அப்ப கடின உழைப்புக்கும் பலனுக்கும் என்ன சம்பந்தம்.
அதுதானே? என்ன சம்பந்தம்? நீங்கள்தான் கேட்கிறீர்கள். பதிலையும் சொல்லிவிடுங்களேன்?
narathar Wrote:நீங்க சொல்லப் போறியள் கடின உழைப் பெண்டா மூளயப் பாவிச்சு வேலை செய்யிறது எண்டு.
நான் அப்படியும் சொல்லவில்லையே? இதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொண்டு உங்கள் கற்பனைக்கெதிராக செய்யும் வாதம்.
narathar Wrote:அப்படிப் பாத்தாலும் பாருங்கோ என்ன மூன்றாம் உலகில மனிசர் மூளயப் பாவிச்சு வேலை செயிறேல்லயா அல்லது அவைக்கு மூளை இல்லயா.
மிருகங்களும் தான் மூளையை பாவிக்கின்றன. எல்லா மனிதர்களும் மூளையை பாவிக்கிறார்கள். ஆனால் அதற்காக எல்லாரும் கண்டுபிடிப்புகளை செய்து இன்னொரு பாடசாலை போகாத கணித மேதை இராமானுஜமாகவில்லை.
narathar Wrote:இப்ப நீங்களே இலங்கையில படிச்சு அமெரிக்காவில வேலை செய்யிறியள். நீங்களும் நானும் படிச்சது இலங்கை மக்களின் வரிப் பணத்தில ஆனாப் பாருங்கோ நாங்க வேலை செய்யிறது எங்கட மூளைப் பாவிச்சு மேற்குலகிற்கு.அப்ப எங்கட மூளைய எது வாங்கி இருக்கு?அது இந்த மூலதனம் இல்லயோ?
உங்களுடைய மூளையை, நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு விற்றீர்கள், என்பதை நீங்கள் சொல்லி நாங்கள் அறிந்து கொள்கிறோம். என்னுடைய மூளை என்னிடம்தான் இருக்கிறது. அது எனது மூலதனம். நான் அதை வைத்து தாராளமாக செல்வம் சேர்க்கிறேன். எனக்குத்தான் சேர்க்கிறேன். அது எனது சுயவிருப்பில் நான் எடுத்த முடிவு.
narathar Wrote:அது தான் மாக்ஸ் சொன்னவர் உற்பத்திக் கான காரணிகளை மூலதனம் தான் கைக்குள்ள வச்சிருக்கெண்டு.இதில் நாங்கள் எவ்வளவு தான் கடினமா உழச்சாலும்,எங்கட உழைப்பு மூலதனத்தைப் பெருக்குது அது எங்களை வாங்கி வச்சிருக்கிறவரின்ட மூலதனத்தைப் பெருக்குது.எண்ட படியால உழைப்புக்கும் பலனுக்கும் சம்பந்தம் இல்லயுங்கோ
உங்களுடைய மூளையை நீங்கள் ஏற்கனவே விற்றுவிட்டதால் மார்க்ஸ் சொன்னதை ஆராயந்து பார்க்க உங்களுக்கு வசதியில்லை போலும்.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் உழைப்புக்கு பலனுண்டு. ஆனால் உழைப்பவர்கள் எல்லாருக்கும் பலன் எதிர்பார்த்தபடி கிடைப்பதில்லை. எனது உழைப்புக்கு நான் தாராளமாக பலன் அனுபவிக்கிறேன். (மறந்துவிடாதீர்கள் என்னுடைய மூளை, என்னுடைய மூலதனமாக என்னிடமே இருக்கிறது.)
narathar Wrote:நாங்கள் உலக வங்கியிட்ட மூலதனத்தை எதிர்பார்த்தா அவை சொல்லுறதைக் கேட்டா அவயள் தான் எங்கட உற்பத்திக் காரணிகளை கட்டுப் படுத்துவினம்.பிறகு எங்கட உழைப்பு அவயின்ட மூலதனத்தை பெருக்கும்
இன்னுமொரு சிங்கப்புூராகவோ, தாய்வானாகவோ, ஜப்பானாகவோ வராமல் ஒரு வியட்நாமாக, கம்போடியாவாக, கியுூபாவாக வரலாம் என்று சொல்கிறீர்கள். விடுதலைப்புலிகள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. இன்றும் அவர்கள் சீனாவுடனோ தடை செய்த இந்தியாவுடனோ உறவை ஏற்படுத்துவதில் நேரத்தை வீணாக்காமல் அமெரிக்க தடைக்கெதிராக இராமஸே கிளார்க் ருத்திரகுமாரன் தலைமையில் வழக்குக்கு பின் வழக்காக தொடர்ந்து வெற்றிக்கு பின் வெற்றியாக கண்டு வருகிறார்கள். எத்தனை மில்லியன் இதற்கு செலவாகிறது தெரியுமா? கடந்தமாதம் கூட விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கர்கள் பயிற்சி அளிப்பதற்கு இருந்த தடைக்கெதிரான ஒரு சட்டத்துக்கு எதிராக தீர்ப்பு கிடைத்ததை அடுத்து இன்னுமொரு சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடுதலைப்புலிகள் நேசநாடாக பார்க்கிறார்கள். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை உள்வாங்கியே தமிழீழ பொருளாதாரம் அமைய இருக்கிறது.
narathar Wrote:நீங்க சொன்னமாதிரி எல்லாத்தையும் திறந்த பொருளாதாரம் எண்டு ஆக்கின அது தான் நடக்கும்
திரும்பவும் நான் சொல்லாததை, நான் சொன்னதாக நீங்களே சொல்லி, அதற்கு தரும் விளக்கம்.
நாடுகள் தமது பொருளாதாரத்தை முற்றிலும் திறந்து விடுவது முட்டாள்தனமானது. மார்க்ஸிய கற்பனையிலேயே அது சாத்தியம். அமெரிக்கா ஆடை இறக்குமதிக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு குறித்த தொகை வகுத்திருக்கிறது. அதற்கு மேல் தடை. ஜப்பானிய வாகனங்கள் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களை பாதித்தால் அதற்கு கட்டுப்பாடு. அதிகவரி. கனடாவுடன் சர்வதேச வணிக கட்டுப்பாட்டு நிறுவனத்தில் மரஏற்றுமதிக்கு வரிவிதிப்பது பற்றி வழக்கு. ஆக முதலீட்டு பொருளாதாரமும் தமது மக்களின் உற்பத்தி நலன் கருதி பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகின்றது.
''
'' [.423]
'' [.423]

