11-03-2005, 12:05 AM
kirubans Wrote:தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.
நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்.
எனக்கும் கிருபனண்ணான்ர கருத்துத்தான்.....இங்க பூ புழு மரம் காதல் தோல்வியெண்டு கவிதை எழுதாட்டி மற்றதுகள எல்லாம் இழுத்து மூடவைக்கிற வேலைய செய்யினம்..... அதால நானும் மேலதிகமாக இங்க கதைக்க விரும்பேல.... வேணுமெண்டால் சிந்தனைக் களத்தில கதைப்பம்.....
பாரதியார உதாரணத்துக்கு தூக்கிச்சினம்....உதாரணத்த சொன்னோடன...அத பற்றிக் கதையையே காணம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நித்தியா அக்கா இங்க எழுதுற இளம் பெண்களில நீங்கள் தான் சமூதாயம் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறீங்கள்... இப்பிடித்தான் சிலர் கல்லெறிவார்கள்....காயப்படுத்த முனைவார்கள்...முயற்சிக்கு தடை போடுவினம்..... தயங்காம கலங்காம உங்கட அடுத்த கவிதய எழுதுங்கோ..... பாருங்கோ உங்கட கவிதை ஒரு விவாதத்த உண்டு பண்ணியிருக்கு....இதானக்க கவிதை.....
நித்தியாக்காவின் அடுத்த கவிதை காணும் வரை.......tata :wink:

