11-02-2005, 10:17 PM
kuruvikal Wrote:poonai_kuddy Wrote:ஏனக்கா குருவியக்கா ஐயர ஐயர் எண்டுறீங்கள்......... டொக்டர டொக்டர் எண்டுறீங்கள்...............ஆசிரியர ஆசிரியர் எண்டுறீங்கள்....... இந்துக்கள இந்துக்கள் எண்டுறீங்கள்....கிறிஸ்தவர கிறிஸ்தவர் எண்டுறீங்கள்.......சிங்களவன் எண்டுறீங்கள்.....முஸ்லீம் எண்டுறீங்கள்.....வண்ணான் எண்டும் கட்டாடி எண்டும் இருக்கிற உவமானத்த சொன்னா ஏத்துக்கிறீங்களில்ல..... ஏதோ மனசில கறையிருக்கிற படியாத்தானே அத ஏத்துக்க முடியல.....
எதுக்கு சாதிய கீழ்தரமா பாக்குறீங்கள்?????? சாதியே இல்லையெண்டு சொல்லுறீங்களா அப்ப???????
சாதி இருக்கோ இல்லையோ..வளர்க்கப்படத் தேவையில்லை..! டாக்டர் என்பதை வைத்தியசாலைக்கு வெளியில் காவுவதை.. நாங்கள் விரும்பவில்லை..! படித்த பட்டத்தை..அதற்குரிய இடத்துக்கு வெளியில் காவுவதை விரும்பவில்லை..! சிங்களவன்.. இனம்...அதை அவர்களே அடையாளப்படுத்தப் பாவிக்கிறார்கள்..அதில் தவறில்லை..! ஆனால் சாதி ஒரு சமூகத்துக்குள் மனிதர்களை தொழில்ரீதியில் பிரிந்து வேறுபடுத்தி அடக்குமுறைக்குள் வைக்கும் கீழ்த்தரமான செயல்...! அவர்களின் மன உணர்வுகளை உள்வாங்க மறுக்கும் மனித நேயமற்ற காட்டுமிராண்டித்தனம்..! அதை உவமை என்ற பெயரில் கவிதைகளின் ஏன் காவ வேண்டும்..!
மனசில கறை இல்லை..உங்களைப் போல எங்களைப் போல..அன்றி அவர்கள் எல்லோரும் மனிதர்கள்..! இனத்துவப் பாகுபாட்டுக்கு அப்பால் சாதியம் கொடுமையானது...! அது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்..! மீள உச்சரிக்கப்படுதல் அவசியமில்லை..!hock: :twisted:
சாதிய யாரும் வளக்க சொல்லல......சாதி சமூகத்தில இருக்கிற ஒண்டுதான்....அத நீங்கள் கஸ்ரப்பட்டு ஒழிக்கத் தேவையில்ல....அத காலத்தின்ர தேவைய பொறுத்து இருக்கிறதும் இல்லாமப்போறதும் நிகழுமக்கா....சாதியின்ர பேர சொல்லி ஒருத்தர ஒருத்தர் தாழ்த்துறதில தான் பிரச்சினை....ஒருத்தர ஒருத்தர் அங்கரிச்சா என்ன பிரச்சினை...ஒருத்தர ஒருத்தர் மதிச்சா போதும்.....சாதியின்ர பேர உச்சரிக்கிறது எந்த தேவைக்கெண்டுறத பொறுத்துதான் அதன் பாதிப்பு இருக்கு....சும்மா உச்சரிக்கவேண்டாம்....முனகவேண்டாம் எண்டா சாதி இல்லாமல் போயிடுமாக்கும்.....சும்மா கதயள்காதேங்கோ.....அடக்குமுறைகள செய்யாதேங்கோ......உங்களப் போன்றவர்கள் தான் தாழ்வு மனப்பான்மைய வளக்குறீங்கள்.......


hock: :twisted: 