11-02-2005, 01:38 PM
Quote:ஓமக்கா நானும் இண்டைக்கு முழுக்குத் தேடுறன் லீவுதானே ஏதாவது படங்கள் கிடைக்குமா எண்டு....சரியா ஏமாந்து போனன்..... இல்லு நீங்கள் ஏதோ பெரிய புத்திசாலித்தனமா எழுதுறதெண்டுற நினைப்பில எழுதியிருக்கிறீங்கள் தானே அதான் சொன்னன்......விதிமுறையோட சம்பந்தப்படது தானேக்கா உங்கட கருத்து.....பிறகென்ன.... வலைஞன் அண்ணா வேற ஏதோ நோக்கத்தில அந்த விதிமுறைய கொண்டு வர....அத கொச்சைப்படுத்திற மாதிரி தானே நீங்கள் எழுதியிருக்கிறீங்கள்..... அனிதா அக்கா எழுதினதுக்கும் நீங்கள் எழுதினதுக்கும் இடைல இருக்கிற வித்தியாச்த பாருங்கோவன்.....
பு}னைக்குட்டி அனித்தாவின் கருத்தும் எனது கருத்தும் ஒரே மாதிரியிருக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்க முடியும்?? இந்த விதிமுறை பற்றி என்ர சொந்தக்கருத்தை வைத்தேன். வலைஞன் அண்ணா வேறை என்ன நோக்கத்திற்காக இதை கொண்டு வந்தாரோ. அதற்கு எதிர் விளைவுகளும் இருக்கலாம் தானே பு}னைக்குட்டி அதைத்தான் தங்கள் கருத்தாக வைக்கிறார்கள் உறுப்பினர்கள் உதாரணத்திற்க ஒன்று சொல்கிறன். நான் வந்த ஆரம்ப காலத்தில. எழுத்துக்கள் பிடிக்க ஒரு சிறிய சொல்லை தேடிப்பிடிக்க எத்தனை நிமிசம் எடுத்திச்சு தெரியுமோ?? ஒரு சிறிய பந்தியை எழுத மணிக்கணக்கா செலவிட்டிருக்கிறன். நான் பாவிக்கிற எழுத்துருவோடையா நான் பிறந்தனான். புதிசா கற்கும் பொழுது சிரமங்கள் இருக்கும் அல்லவா?? களத்தில ஆங்கிலத்தில் எழுதக்கூடாது என்ற விதியும் இருக்கு. சின்னனா சொற்கள் கொண்டு எழுதமுடியாது என்ற விதியும் வந்தால் புதிசாவாறவை வந்தவழி பாத்திட்டு போறதா?? ஒரு சில இடங்களில் ஆவாது விதிவிலக்கு தேவை என்ற கருத்தையும் அழுல்படுத்த சிக்கல் இருக்கையில் பதிய உறுப்பினர்கள் எவ்வளவு கஸ்டப்படுவினம்..!
பநதி பந்தியா எழுதியிருக்கிற எத்தனை ஆக்கங்களை நீங்கள் வாசிச்சிருப்பியள் சொல்லுங்கோ..?? உதாரணத்திற்கு களத்தில ஒரு சில போட்டிகள் கிடக்கு அதில ஒரு சொல்லில வாறமாதிரி பதில் வந்தா அதை நீட்டி இழுத்து அலம்பி பதில் எங்க கிடக்கு என்று தேடிpப்பிடிக்கவா?? முடிந்தவரை சுருக்கி எழுதுவது உறுப்பினர்கள் வாசிக்கவும் இலகு எழுதுபவர் எழுதுவதும் இலகு அல்லவா?? அது சரி விதிமுறை பற்றி கருத்தை வைத்தால் கொசு;சைப்படுத்திற மாதிரி ஆகுமா?? என்ன சொல்றீங்க.. வர வர என்ர கருத்திற்கு பல பல அர்த்தங்கள் கண்டு பிடிக்கிறாங்க நான் என்ன பண்ணட்டும். :wink: :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

