Yarl Forum
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649)

Pages: 1 2 3 4 5 6


கருத்துக்களும் - அதன் அளவும் - வலைஞன் - 11-02-2005

யாழ் களஉறவுகளுக்கு வணக்கம்,

கருத்துக்களத்தில் புதியதொரு செயற்பாட்டை இணைத்துள்ளோம். இது உங்கள் வேகத்தைக் குறைப்பதற்காக அல்ல. உங்கள் சிந்தனைத் தேடலை வளர்ப்பதற்காகவே. களத்தில் இணைக்கப்படும் களஉறுப்பினரின் ஆக்கத்துக்கோ, அல்லது வேறு தளங்களிலிருந்து இங்கிணைக்கப்படும் ஆக்கத்திற்கோ வெறுமனே

<b>நன்றி
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவல்
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல ஆக்கம்</b>

போன்றவற்றையோ, அல்லது

<b>முகநயங்களையோ</b>

மட்டும் எழுதுவதைத் தாண்டி, உங்கள் கருத்துக்களை முன்வைப்பதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். களத்தில் இணைக்கப்படும் ஆக்கத்தை அல்லது கருத்தை நீங்கள் வாசித்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒரு கருத்தை நிச்சயமாக உருவாக்கியிருக்கும் அல்லது உங்களை ஏதொ ஒரு விதத்தில் பாதித்திருக்கும். அதனால் தான் நீங்கள் பதில் எழுதுகிறீர்கள். அந்தப் பதிலை ஏன் நன்றியென்றோ, வாழ்த்துக்கள் என்றோ முடித்துக் கொள்கிறீர்கள்? அது உண்மையில் ஒரு ஆக்கத்தை இணைப்பவரை தட்டிக்கொடுக்காது, அலுப்பைத்தான் கொடுக்கும். களத்தில் பல இடங்களில் வெறும் வழமைக்காகவே "நன்றிகள், வாழ்த்தக்கள், நல்ல ஆக்கம்" என்றும் எழுதப்படுகிறதாய் தோன்றுகிறது.

நீங்கள் அப்படி எழுதுவதை பிழையென்றோ, அதை செய்யாதீர்கள் என்றோ நாம் கருதவில்லை. நன்றிகளும், வாழ்த்துக்களும் சொல்வது நம்மிடையேயான உறவை அல்லது நட்பைப் பலப்படுத்துவதற்கே. ஆனாலும் அவற்றோடு உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாமே?

சரி! இந்த நோக்கத்தை முன்வைத்தே நாம் களத்தில் புதிய செயற்பாடொன்றை இணைத்துள்ளோம். அதாவது

|| தனியே முகநயங்களை மட்டும் இணைக்கும் கருத்துக்கள் களத்தில் இணைக்கப்படமாட்டாது
|| தனியே நன்றிகள் என்றோ, வாழ்த்துக்கள் என்றோ ஒரு சொல்லில் எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது
|| தகவலுக்கு நன்றிகள் என்றோ அல்லது வேறு வடிவத்திலோ சுருக்கமாக எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது

இந்த செயற்பாடு ஆக்கபூர்வமான கருத்துக்கள் வேண்டியும், களஉறுப்பினர்களை ஆக்கபூர்வமான தேடல்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கோடுமே இணைக்கப்பட்டுள்ளது என்பதை மறுபடி ஞாபகப்படுத்துகிறேன்.

குறுக்குவழிகள் பயன்படுத்தி (வம்புக்காக) இந்த செயற்பாட்டை நீங்கள் மீறலாம். அப்படி மீறினால் அந்தக் கருத்துக்கள் அகற்றப்படும் என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

உதாரணமாக: "நன்றி நன்றி நன்றி ..." என்று பத்துத் தடவை எழுதி இணைக்கலாம். அப்படி இணைத்தால் அது நீக்கப்படும்.

அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி


- kuruvikal - 11-02-2005

இது முன்னரும் மோகன் அண்ணாவால் நடைமுறையில் வைக்கப்பட்டு காலக்கிரமத்தில் இல்லாமல் போனது...??! Idea

உதாரணத்துக்கு...ஒரு நகைச்சுவைப் படம் போட்டால்...சிரிக்காமல்..எப்படி சிரிச்சம் என்றா எழுதிறது...! ஏதோ...சொல்லுங்கோ கேட்கிறம்...! நகைச்சுவைக்குள்ளும் தேடல் செய்வோம்..அப்படி என்றீங்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kirubans - 11-02-2005

மேற்கோளைப் போட்டு "நன்றி" சொன்னால் போயிற்று. Idea


- vasisutha - 11-02-2005

இனி களத்தில் நன்றி சொல்வதாக இருந்தால் உறவுகளே..
இப்படி எழுதுங்கள்...........
.............
உங்கள் கருத்து என்னை புல்லரிக்க வைத்துவிட்டது..
அதை எண்ணி இரவு தூக்கம் வர மறுக்கிறது.. எனவே
இதை இங்கு இணைத்த உங்களுக்கு மிகவும் நன்றிகள்..
உங்களைப் போன்றவர்களின் சேவை நாட்டுக்கு தேவை


- vasisutha - 11-02-2005

kirubans Wrote:மேற்கோளைப் போட்டு "நன்றி" சொன்னால் போயிற்று. Idea

இதைத்தான் நானும் டன் அண்ணாத்தைக்கு சொல்லி
ஆறுதல் படுத்தினேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 11-02-2005

களத்தில் இருக்கும் ஓரிரு படித்த அறிவாளிகள் தங்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு ஏதோ ஒன்றை எழுதி தள்ளுவார்கள் பட் கைநாட்டு, கால் நாட்டுகளுக்கு ஏற்ற ஒரே ஒரு சிறந்த பதில் தகவலுக்கு நன்றி, அல்லது முக நயம்,,, சரி ஏதோ ஒரு வகையில நல்லதாத்தான் படுது,, நடைமுறை படுத்தினால் நாங்களும் படிச்ச அறிவாளிகளைபார்த்து பழகிடுவம்........ நன்றி


- iruvizhi - 11-02-2005

Danklas Wrote:களத்தில் இருக்கும் ஓரிரு படித்த அறிவாளிகள் தங்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு ஏதோ ஒன்றை எழுதி தள்ளுவார்கள் பட் கைநாட்டு, கால் நாட்டுகளுக்கு ஏற்ற ஒரே ஒரு சிறந்த பதில் தகவலுக்கு நன்றி, அல்லது முக நயம்,,, சரி ஏதோ ஒரு வகையில நல்லதாத்தான் படுது,, நடைமுறை படுத்தினால் நாங்களும் படிச்ச அறிவாளிகளைபார்த்து பழகிடுவம்........ நன்றி

ம்ம்ம்ம்ம்ம்...... சரி எதோ கைநாடு கால்நாட்டா இருக்காமல் அவர்களை மாதிரி நீங்களும் அவற்றினை வாசித்து எழுதி அறிவாளி ஆகிடுவியளோ என்பதுதான் எனது பயம். ஏதோ நீங்களாவது படிச்சு முன்னேறுங்கோ.


- RaMa - 11-02-2005

ம்ம் நீங்கள் சொல்வது சரி... என்னை போன்றவர்கள் அதாவது அரசியல் தமிழ் இலக்கியம் இலக்கணம் உலக வரலாறு என்பவற்றை இப்போது தான் அதுவும் இந்தக் களத்தின் ஊடாக தான் அறிய தொடங்கி இருக்கிறவர்கள் அந்த அறிவாளிகளின் கருத்துக்கு எப்படி கருத்து வைப்பது? இனி வசி சொன்னபடி தான் செய்ய வேண்டும்....


- kurukaalapoovan - 11-02-2005

ரமா, திரை அரட்டைக்கு அப்பால் உங்கள் படிப்பு, வேலை அல்லது பொழுதுபோக்கு சம்பந்தமாக எழுதுவதற்கு எத்தனையே உண்டு. தெரிந்ததை பகிருங்கள், தெரியாதவை பற்றி கேள்வி எழுப்புங்கள் ஆக்கபூர்வமாக தொடரலாம்.


- Danklas - 11-02-2005

வலைஞன் இதில் சிறுமாற்றத்தை கொண்டு வரலாம் எண்டு எனது கருத்தை கூறுகிறேன்.. முக்கியமான பிரிவுகளுக்கு இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம், ஓரிரு பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். (நகைச்சுவை, அங்கத்தவர் பிரிவுகள்) ஏனெண்டால் உதாரணத்துக்கு எனது புலனாய்வு அறிக்கையையோ, அல்லது முகத்தாரின் "முகத்தார் வீடு" பகுதியிலோ சக அங்கத்தவர்கள் மேலே சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரயொகிக்கமுடியும் அதனால் அதை பிரசுரிக்கும் அங்கத்தவர்களை உட்சாகபடுத்தலாம் (குறூக்கால போவான், நாரதர் அதை என்றுமே செய்தில்லை, எழுந்த மானத்திற்கு அறிக்கை விடுவார்கள் ஈமயிலில் வார படங்களை கொண்டுவந்து போடுறது அது இது எண்டு, ஏதோ என்னைபோன்ற சிலர் அவர்கள் தரும் சம்பளத்தில் கருத்துக்களை முன்வைப்பதாக அறிக்கை விடுகிறார்கள்,)

ஆகவே சில கருத்து பிரிவுகளுக்கு இவ் விதிவிலக்கை அளிக்காவிட்டால் அந்த பிருவுகளில் கருத்துக்கள் குறையும் அதை வாரவாரம் அல்லது தொடர்ச்சியாக முன்வைக்கும் அங்கத்தவர்களுக்கு ஒரு சோர்வு ஏற்படும், ஆகவே கருத்துக்கள் குறையும், ஏன் இதை இப்படி செய்கிறோம், குறுக்கால போவான், நாரதர், கிருபன் போன்றவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை மட்டும் வாசிச்சுட்டு அதற்கு ஏதாவது பதில் எழுதிட்டுபோவம் எண்டு நினைக்கத்தோன்றும், எனவே இதில் சில தளர்வுகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.. மீள் பரிசிலனை செய்தால் நன்று.. Idea


- kurukaalapoovan - 11-02-2005

வலைஞன் எனக்கும் ஒரு சந்தேகம் "கருத்து" என்பதன் அர்த்தம் என்ன? அதை சார்ந்து வருகிற "கருத்துக்களம்" என்பதன் நோக்கம், "கருத்தாளர்கள்" இன் பங்களிப்பு என்பன என்னவாக இருக்க வேண்டும்?

"கருத்துக்கள் குறைகிறது" "கருத்தாளர்கள் குறைகிறார்கள"; போன்ற ஆதங்கத்தை எவ்வாறு அளவிடலாம்?


- Birundan - 11-02-2005

மண்டைக்க எவ்வளவோ எழுதவேண்டும் என்று இருக்கு, எழுத பஞ்சி, சரி மற்றவர்கள் எழுதியதை படிச்சிட்டு சிரிச்சுட்டு போவம் என்றால், அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு....சரி படிச்சிட்டு மனதுக்க சிரிச்சிட்டு போவம், எழுதுறது எனக்கு போரு.....படிக்கிறது எனக்கு ஜோரு......


- vasisutha - 11-02-2005

Danklas Wrote:வலைஞன் இதில் சிறுமாற்றத்தை கொண்டு வரலாம் எண்டு எனது கருத்தை கூறுகிறேன்.. முக்கியமான பிரிவுகளுக்கு இதை நடைமுறைக்கு கொண்டுவரலாம், ஓரிரு பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம். (நகைச்சுவை, அங்கத்தவர் பிரிவுகள்) ஏனெண்டால் உதாரணத்துக்கு எனது புலனாய்வு அறிக்கையையோ, அல்லது முகத்தாரின் "முகத்தார் வீடு" பகுதியிலோ சக அங்கத்தவர்கள் மேலே சொன்ன வார்த்தைகளை மட்டுமே பிரயொகிக்கமுடியும் அதனால் அதை பிரசுரிக்கும் அங்கத்தவர்களை உட்சாகபடுத்தலாம்...

ஆகவே சில கருத்து பிரிவுகளுக்கு இவ் விதிவிலக்கை அளிக்காவிட்டால் அந்த பிருவுகளில் கருத்துக்கள் குறையும் அதை வாரவாரம் அல்லது தொடர்ச்சியாக முன்வைக்கும் அங்கத்தவர்களுக்கு ஒரு சோர்வு ஏற்படும், ஆகவே கருத்துக்கள் குறையும்,





இது நல்ல யோசனை.. Idea


- Danklas - 11-02-2005

குறுக்ஸ் கள நிர்வாகத்தின் முடிவை வரவேற்கலாம் ஆனால் எந்த இடத்தில் எதை பாவிக்கவேண்டும் எண்டு ஒரு வரையறை இருக்கு. உதாரணத்துக்கு ஓட்டப்போட்டியில் ஓடும் ஒருத்தனை உட்சாகம் ஊட்டினால் (கரகோசம், கத்துதால், விசிலடித்தல்,) அவனுக்கு என்னம் ஆக்கிரோசம் கூடும் அதலால் அவன் வெற்றி பெறுவான், ஆனால் சில இடங்களில் படிப்பு சம்பந்தபட்ட இடங்களில் அல்லது பரீட்சைக்கு படிக்கும் மாணவனுக்கு அல்லது ஒரு கலந்துரையாடல் சம்பவங்களில் ஒரு கருத்தை சொல்லும்பொழுது உங்களிடம் இருக்கும் கருத்துகளை சொல்லும் பொழுது அது அவனுக்கு அல்லது அந்த கூட்டத்துக்கு நன்மையாக இருக்கும், பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு சம்பவங்களையும் (ரன் ஓடுறவனையும், பரீட்சைக்கு படிக்கிறவனையும்) மாற்றி செய்தால் நிச்சயம் இரண்டுமே தோல்வியில் முடியும், ஆகவே எந்த இடத்தில எதை பாவிக்கனும் எண்டு புரிஞ்சிருக்கும், அளவுகோல் எண்டு வைச்சுக்கொள்ளுங்களன்,, அந்த அந்த இடங்களில சரியான விதத்தில அளவு கோலை பயன் படுத்தினால் எல்லாம் நண்மையில் முடியும், கருத்துக்கள் வழமையாக வரும்,.. Idea


- vasisutha - 11-02-2005

வலைஞன்

நீங்கள் புதிய சில பகுதிகள் ஆரம்பித்தது ஏன்?
அதாவது தீவிர இலக்கியம் விவாதம் போன்ற பிரிவுகள்?

இப்பொழுது ஏனைய களப்பகுதிகளுக்கு என்று சில நிபந்தனைகள் ஏன்? அப்படியானால் அந்த புதிய
பகுதிகளுக்கு யாரும் போவதில்லையா?
.....நாங்கள் அரட்டை அடிக்கும் பிரிவுகளுக்கும் யாரும் வரக்கூடாது கருத்து எழுதக்கூடாது அதுதானே? :?:

மிக்க நன்றி.. வாழ்க சனநாய்அகம்


- வலைஞன் - 11-02-2005

வணக்கம் Danklas,
உங்கள் கருத்திற்கு நன்றி. முதலில் நீங்கள் சொன்ன விடயம் நியாயமானதாகப் பட்டாலும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு தொழில்நுட்ப சாத்தியம்(தற்போது) இல்லை.

அடுத்து வெறும் நன்றிகளும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மட்டுமாக நீங்களோ, மற்றவர்களோ உங்கள் ஆக்கங்களை எழுதமாட்டீர்கள் தானே? அப்படி புதிய களஉறுப்பினர் ஒருவரை உற்சாகப்படுத்தவேண்டுமென்றால் கூட ஒரு முழுமையான வசனத்தில் அந்த உற்சாகப்படுத்தலைச் செய்யலாம்தானே?

Mathan Wrote:ஆகா நல்லாயிருக்கு டன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

sabi Wrote::mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Anitha Wrote:நல்லாயிருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்பவை உங்களை உற்சாகப்படுத்துகின்றனவா? அல்லது

Mathan Wrote:டன் நல்லா இருக்கு, சிரிப்பு தாங்க முடியலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் சிரிக்கிறன் என்று கேட்ட வேற்று மொழி நண்பர்களுக்கு சொன்னாலும் ஏன் இவ்வளவு சிரிப்பு என்று புரியலை, அவர்களுக்கு நம்ம சின்னப்ஸ் பத்தி தெரியாதே

தூயவன் Wrote:இந்த வயதிலும் நம்ம சின்னாவுக்கு செம தில்லுப்பா :wink:

KULAKADDAN Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டன் உங்க புலநாய் மிக நல்லா வேலை செய்யுது போல.

sathiri Wrote:என்ன சொன்னாலும் இராவணன் செய்தது அடத்தான காரியம் சின்னாவிடம் ரவைகள் முடிஞ்சா பிறகு 50 கலிபராலை சுட்டு தள்ளியிருக்க கூடாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்பவை அதிகம் உற்சாகப்படுத்துகின்றனவா? நாம் இங்கே இந்த செயற்பாட்டை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், வெறும் நன்றி, நல்ல தகவல் என்று சொல்லி தங்களுக்குள் தோன்றும் கருத்துக்களை மூடிவைக்காமல் வெளிப்படத்தவேண்டும் என்பதற்கே. அதேபோல ஒருவரை உற்சாகப்படுத்தும் போது வழமையாக சொல்கிற நல்லாருக்கு, நல்லாருக்கு என்பது ஒருகட்டத்தில் கேட்கிற உங்களுக்கே அலுத்துப்போய்விடுகிறதல்லவா?

நகைச்சுவைப் பகுதிக்குள் விவாதிக்க சொல்லவில்லை. ஆனால் நன்றியையும், ஸ்மைலியையும் போட்டு நிரப்பாமல் மேற் குறிப்பிட்ட உதாரணம் போல எழுத முடியாதா? முயற்சித்துப் பாருங்களேன்?


- வலைஞன் - 11-02-2005

vasisutha Wrote:வலைஞன்

நீங்கள் புதிய சில பகுதிகள் ஆரம்பித்தது ஏன்?
அதாவது தீவிர இலக்கியம் விவாதம் போன்ற பிரிவுகள்?

இப்பொழுது ஏனைய களப்பகுதிகளுக்கு என்று சில நிபந்தனைகள் ஏன்? அப்படியானால் அந்த புதிய
பகுதிகளுக்கு யாரும் போவதில்லையா?
.....நாங்கள் அரட்டை அடிக்கும் பிரிவுகளுக்கும் யாரும் வரக்கூடாது கருத்து எழுதக்கூடாது அதுதானே? :?:

மிக்க நன்றி.. வாழ்க சனநாய்அகம்

வணக்கம் வசி,
எல்லாப் பகுதிகளுக்கும் தான் இந்த நிபந்தனை. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிக்கும், இந்த செயற்பாட்டுக்கும் என்ன தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? அரட்டை அடிக்கின்ற பிரிவென்றால் அங்கு அரட்டை அடிக்கும் போது "நல்லாருக்கு" என்று மட்டும் எழுதி அரட்டை அடிக்க முடியுமா? அதுதவிர அரட்டை அடிக்கிற பிரிவில் ஒரு சொல்லில் "நல்லாருக்கு, நல்ல தகவல்" என்று பதில்கள் வருவது குறைவு தானே? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதனால் இந்த செயற்பாட்டினால் பாதிப்புகள் இல்லையே?


- kuruvikal - 11-02-2005

வலைஞன் Wrote:வணக்கம் Danklas,
உங்கள் கருத்திற்கு நன்றி. முதலில் நீங்கள் சொன்ன விடயம் நியாயமானதாகப் பட்டாலும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு தொழில்நுட்ப சாத்தியம்(தற்போது) இல்லை.

அடுத்து வெறும் நன்றிகளும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மட்டுமாக நீங்களோ, மற்றவர்களோ உங்கள் ஆக்கங்களை எழுதமாட்டீர்கள் தானே? அப்படி புதிய களஉறுப்பினர் ஒருவரை உற்சாகப்படுத்தவேண்டுமென்றால் கூட ஒரு முழுமையான வசனத்தில் அந்த உற்சாகப்படுத்தலைச் செய்யலாம்தானே?

[quote=Mathan]ஆகா நல்லாயிருக்கு டன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

sabi Wrote::mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Anitha Wrote:நல்லாயிருக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்பவை உங்களை உற்சாகப்படுத்துகின்றனவா? அல்லது

Mathan Wrote:டன் நல்லா இருக்கு, சிரிப்பு தாங்க முடியலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் சிரிக்கிறன் என்று கேட்ட வேற்று மொழி நண்பர்களுக்கு சொன்னாலும் ஏன் இவ்வளவு சிரிப்பு என்று புரியலை, அவர்களுக்கு நம்ம சின்னப்ஸ் பத்தி தெரியாதே

தூயவன் Wrote:இந்த வயதிலும் நம்ம சின்னாவுக்கு செம தில்லுப்பா

[quote=KULAKADDAN]<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> டன் உங்க புலநாய் மிக நல்லா வேலை செய்யுது போல

[quote=sathiri]என்ன சொன்னாலும் இராவணன் செய்தது அடத்தான காரியம் சின்னாவிடம் ரவைகள் முடிஞ்சா பிறகு 50 கலிபராலை சுட்டு தள்ளியிருக்க கூடாது

என்பவை அதிகம் உற்சாகப்படுத்துகின்றனவா? நாம் இங்கே இந்த செயற்பாட்டை அறிமுகப்படுத்தியதன் நோக்கம், வெறும் நன்றி, நல்ல தகவல் என்று சொல்லி தங்களுக்குள் தோன்றும் கருத்துக்களை மூடிவைக்காமல் வெளிப்படத்தவேண்டும் என்பதற்கே. அதேபோல ஒருவரை உற்சாகப்படுத்தும் போது வழமையாக சொல்கிற நல்லாருக்கு, நல்லாருக்கு என்பது ஒருகட்டத்தில் கேட்கிற உங்களுக்கே அலுத்துப்போய்விடுகிறதல்லவா?

நகைச்சுவைப் பகுதிக்குள் விவாதிக்க சொல்லவில்லை. ஆனால் நன்றியையும், ஸ்மைலியையும் போட்டு நிரப்பாமல் மேற் குறிப்பிட்ட உதாரணம் போல எழுத முடியாதா? முயற்சித்துப் பாருங்களேன்?

டன் டோன்வொறி... சுருக்கம் இந்தளவுக்கு விரிவா இருந்தாச் சரியாம்...அந்தளவுக்கு வந்திட்டா அது தேடல் உள்ள கருத்து...! ஓக்கேயா...! அப்பாடா ஒரு மாதிரி விதி அமுலுக்கு வந்திட்டு...! சரியான funny...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 11-02-2005

வலைஞா இதில என்ன வித்தியாசத்தை கண்டீங்க?? இரண்டுமே ஒரே குறிக்கோளைத்தான் குறிக்குது?? சிலவேளை உங்கள் பார்வைக்கு வித்தியசமாக தென்படுதா? '"சிரிப்பு தாங்க முடியல்ல, பிற நாட்டுக்காரங்களுக்கு எப்படி விளங்கபடுதிறதெண்டு தெரியல்ல" Arrow "நல்லா இருக்கு" இது இரண்டும் வெவ்வேறு பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றனவா? சரி நீங்க தெரிவித்தது போல் அதற்கெண்டு தனிபட்ட ரீதியில் தற்போதைக்கு செய்யமுடியாதெண்டால், நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுதானே? புரிந்துணர்வு இருக்கு எங்களுக்கும்,, சோ கள உறவுகள் புரிந்துகொள்வார்கள்,, நன்றி உங்க பதிலுக்கு வலைஞா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- nallavan - 11-02-2005

வலைஞன்,
நல்ல திட்டம். வரவேற்கிறேன்.

முடிந்தால் டங்ளசு சொல்வதுபோல பிரிவுகளுக்கு ஏற்றாற்போல் நிபந்தனைகளைப் போடலாம். முடியாத பட்சத்தில் எல்லா இடத்திலும் நடைமுறைப்படுத்தத் தான் வேண்டுமென்றாலும் பிர'ழ்'ச்சினையில்லை.

குறுக்கால போவானின் கருத்து- கருத்துக்களம் - கருத்தாளர்கள் பற்றிய கேள்வி முக்கியமானது.