11-02-2005, 11:22 AM
Nithya Wrote:சமுதாயம்
சிறுமி என நினைத்து
வேடிக்கையாய் பல விடயம் பேசி
என் முதுகின்பின்னால்
முரண்பட்டு
கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..
இறந்த காலத்தால் - என்
நிகழ்காலம் இறப்பித்து
போடு போடு இன்னும் பல சூடு
நான் திரும்பி பார்க்காத வரையில்
சிறுமிதான்..!!
பி. எஸ் : கடுகின் காரம் மறந்த சமுதாயம்
நல்ல கவிதையக்கா.... கட்டாடி எண்டுறது என்னெண்டு இப்பதான் நான் தெரிஞ்சு கொண்டனான் அக்கா....சமுதாய சிந்தனையள் உங்களிட்ட நிறைய இருக்கக்கா.....
திரும்பிப் பார்க்காத வரையில் சிறுமி என்றால்.....திரும்பிப் பார்த்தால் கிழவியா? (சும்மா பகிடிக்கக்கா)
எங்கட சமுதாயத்தின்ர சாக்கடை மனசை சுருக்கமா ஆனா விளக்கமா சொல்லியிருக்கிறீங்கள். நிறைய எழுதுங்கோ அக்கா

