11-02-2005, 08:18 AM
Quote:என்ன கவிப்பிரியன் முன்னதில் இருந்து கருத்தால் முரண்படுகிறீர்கள்..இப்போ விதியை சாட்சிக்கு இழுக்கிறீர்கள்..! பிரிவுக்கான காரணங்களை கண்டறிய வலியுறுத்துக்கள்..! சிலர் அப்பா அம்மாவுக்காகப் பிரிவதாகச் சொல்வர்..இன்னும் சிலர் என்னென்னவோ காரணங்களைச் சொல்வர்.. காதலித்த பின் பிரிவு என்பதற்கு இடமில்லை...! பிரிகிறார்கள் என்றால் பொய்யாக நடந்திருக்கிறார்கள் என்பது பொருள்..இல்லை.. காதலை கேலியாக்குகிறார்கள் என்று பொருள்..!
காதலில் விழுந்து பிரிவால் வாழ்வைப் பாழாக்கியவர்கள் சிலரை சந்தித்த வகையில்....எங்கள் கருத்து...! என்ன எல்லாமே சோகமா இருக்கு...என்ன நடந்தது...??!
காதல் பிரிவுகள் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவை என்பதால் அனைவரும் விதி மீதே பழியைப் போடுவார்கள். காதலர்கள் எவரும் பிரிவை விரும்புவதில்லை. ஆனால் சில நேரம் ஏன் பிரிகின்றோம்எ ன்று தெரியாமல் பிரிவு வரம் அதனால் அந்த காதல் போலியேன்றே உண்மையற்றதென்றோ சொல்லி விட முடியாது. காதலனுக்காக காதலை விட்டுக் கொடுக்கும் காதலியும் அவளுக்காக தனது காதலை விட்டுக் கொடுக்கும் குணமுடைய காதலர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் பிரிவக்கு யார் காரணம்? இவர்கள் பிரிவால் அவர்களே வெற்றியடைவரர்கள். காதலர்கள் பிரிவார்கள்..காதல் பிரிவதில்லை..அதே போல தான் காதலர்கள் தோற்பதண்டு..காதல் எப்போதும் எதற்காகவும் தோற்காது.....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

