11-02-2005, 12:27 AM
யாழ் களஉறவுகளுக்கு வணக்கம்,
கருத்துக்களத்தில் புதியதொரு செயற்பாட்டை இணைத்துள்ளோம். இது உங்கள் வேகத்தைக் குறைப்பதற்காக அல்ல. உங்கள் சிந்தனைத் தேடலை வளர்ப்பதற்காகவே. களத்தில் இணைக்கப்படும் களஉறுப்பினரின் ஆக்கத்துக்கோ, அல்லது வேறு தளங்களிலிருந்து இங்கிணைக்கப்படும் ஆக்கத்திற்கோ வெறுமனே
<b>நன்றி
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
தகவலுக்கு நன்றி
பயனுள்ள தகவல்
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல ஆக்கம்</b>
போன்றவற்றையோ, அல்லது
<b>முகநயங்களையோ</b>
மட்டும் எழுதுவதைத் தாண்டி, உங்கள் கருத்துக்களை முன்வைப்பதை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். களத்தில் இணைக்கப்படும் ஆக்கத்தை அல்லது கருத்தை நீங்கள் வாசித்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒரு கருத்தை நிச்சயமாக உருவாக்கியிருக்கும் அல்லது உங்களை ஏதொ ஒரு விதத்தில் பாதித்திருக்கும். அதனால் தான் நீங்கள் பதில் எழுதுகிறீர்கள். அந்தப் பதிலை ஏன் நன்றியென்றோ, வாழ்த்துக்கள் என்றோ முடித்துக் கொள்கிறீர்கள்? அது உண்மையில் ஒரு ஆக்கத்தை இணைப்பவரை தட்டிக்கொடுக்காது, அலுப்பைத்தான் கொடுக்கும். களத்தில் பல இடங்களில் வெறும் வழமைக்காகவே "நன்றிகள், வாழ்த்தக்கள், நல்ல ஆக்கம்" என்றும் எழுதப்படுகிறதாய் தோன்றுகிறது.
நீங்கள் அப்படி எழுதுவதை பிழையென்றோ, அதை செய்யாதீர்கள் என்றோ நாம் கருதவில்லை. நன்றிகளும், வாழ்த்துக்களும் சொல்வது நம்மிடையேயான உறவை அல்லது நட்பைப் பலப்படுத்துவதற்கே. ஆனாலும் அவற்றோடு உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாமே?
சரி! இந்த நோக்கத்தை முன்வைத்தே நாம் களத்தில் புதிய செயற்பாடொன்றை இணைத்துள்ளோம். அதாவது
|| தனியே முகநயங்களை மட்டும் இணைக்கும் கருத்துக்கள் களத்தில் இணைக்கப்படமாட்டாது
|| தனியே நன்றிகள் என்றோ, வாழ்த்துக்கள் என்றோ ஒரு சொல்லில் எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது
|| தகவலுக்கு நன்றிகள் என்றோ அல்லது வேறு வடிவத்திலோ சுருக்கமாக எழுதப்படுபவை இணைக்கப்படமாட்டாது
இந்த செயற்பாடு ஆக்கபூர்வமான கருத்துக்கள் வேண்டியும், களஉறுப்பினர்களை ஆக்கபூர்வமான தேடல்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் நோக்கோடுமே இணைக்கப்பட்டுள்ளது என்பதை மறுபடி ஞாபகப்படுத்துகிறேன்.
குறுக்குவழிகள் பயன்படுத்தி (வம்புக்காக) இந்த செயற்பாட்டை நீங்கள் மீறலாம். அப்படி மீறினால் அந்தக் கருத்துக்கள் அகற்றப்படும் என்பதை மிக வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
உதாரணமாக: "நன்றி நன்றி நன்றி ..." என்று பத்துத் தடவை எழுதி இணைக்கலாம். அப்படி இணைத்தால் அது நீக்கப்படும்.
அனைவரும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்.
நன்றி