11-02-2005, 12:26 AM
Nithya Wrote:வட்டம்
உப்புக் குடத்தில்
உலகம் அறியாமல்
சுருண்டு படுத்து
கத்திக் கதறி
பிரசவித்து
உருண்டு, தவண்டு
நடந்து..
உருவத்தின் மாறுதலுக்கு
விஞ்ஞானம் என
பொருள் தேடி..
காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி
உடலுக்குள் கசிப்பு
உற்பத்தி செய்து..
பேராசை வைத்து
நிஐமில்லாத ஆவிக்காய்
விவாதம் செய்து..
தள்ளாடி
தடுமாறி..
அறளை பெயர்ந்து
இவ்வுடல்
இறச்சியாய்
விறகேறினதும்
ஒரு கை அடங்கா
சாம்பலை
மீண்டும் உப்புக்
கடல் சேர்த்து..
அட சீ..
ஏன் இந்த வட்டமான
வாழ்க்கை..???
அடடா.. வட்டம் அருமையா இருக்கு .. அழகான ஆழமான கருத்தை சொல்லும் கவி . வாழ்த்துக்கள் நித்தியா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

