Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#43
1994-1995 இல் யாழ் மண்ணை
ஆக்கிரமித்த சிங்களப் படைகள்
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை தென்னைகளையும் பிற பயன்தரு மரங்கiயும் தறித்தனர். யாழ். தீபகற்பத்தை மூன்று தனித்தனி வலயங்களாகப் பிரிக்கும் பாரிய மண் அணைகளைக் கட்டியெழுப்பினார்கள். வீடுகள், மரங்கள், தோட்ட நிலங்கள் அரண் அமைப்பதற்காக அழிக்கப்பட்டன. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் யாழ். மக்களுக்கு இப்பாரிய அணைகளால் நீண்டகாலப் பாதிப்பு ஏற்படலாம் என்று மண்வள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

--------------------------------------------------------------------------------


போர்நிறுத்த உடன்பாட்டின் பின் தமிழ் மக்கள் மீதான இராணுவக் கெடுபிடிகளும் வன்முறைகளும் முற்றாக நீங்கா விட்டாலும் ஓரளவுக்குத் தணிந்துள்ளன. கடந்த பல தசாப்தங்களாக நடைபெறும் எமது வாழ்வாதாரங்களின் அழிப்பு மாத்திரம் இன்னும் ஓயவில்லை. இவ வருட மார்ச்சு- ஏப்பிறில் மாதங்களில் மன்னார் தீவின் பனைகளைப் புல்டோசர் மூலம் படையினர் வீழ்த்தினர். இதேபோன்று முன்னர் முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட பனைகள் அழிக்கப்பட்டுள்ளன.
மன்னார் தீவில் ஐம்பதினாயிரம் பனைகள் இவ வாறு வீழ்த்தப்பட்டன. அதன்பின் துண்டுகளாக நறுக்கிச் சீவப்பட்டு தென்னிலங்கைக்கு இராணுவ வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டன. மன்னார் தீவு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆட்சேபக் கடிதம் அனுப்பினார். இலண்டனில் இயங்கும் ஐ.பி.சி. வானொலி இதுபற்றிய செய்தியை ஒலிபரப்பியது. பனைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை புூர்த்தியாகும்வரை தொடர்ந்தது. எதிர்ப்புகளால் ஒரு சிறிய அனுகூலம் கிடைத்தது. ஆயர் இல்ல வளாகப் பனைகள் உயிர் தப்பின.
மூடிமறைத்தல், திசை திருப்புதல், வீண்பழி சுமத்தல், மிகைப்படுத்தல், கூட்டிக்குறைத்தல் என்ற பஞ்ச கிருத்தியங்களை கொழும்பு ஊடகங்கள் கனகச்சிதமாகச் செய்கின்றன. மன்னார் தீவுச் சம்பவங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டன. அரசுடமையான சண்டே ஒப்சேபர் ஞாயிறு இதழ் தனது ஏப்பிறில் 21.2002 வெளியீடு மூலம் திசை திருப்பல் நடவடிக்கையைத் தொடங்கியது.
முதலாம் பக்கத்தில் 'புலிகளின் காட்டை அழிக்கும் திட்டம்' என்ற தலைப்பின் கீழ் ஒரு நீண்ட செய்திக்குறிப்பை ஒப்சேபர் வெளியிட்டது. 'வனவளத் திணைக்களம் நிலமையை அவதானிக்கிறது. சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் விழிப்பு' என்ற உப தலைப்பும் அதன் கீழ் காணப்படுகின்றது.
உண்மைக்குப் புறம்பான ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை மேற்கூறிய ஒப்சேபர் செய்தி விடுதலைப் புலிகள் மீது சுமத்துகின்றது. சர்வதேச மட்டத்தில் பெரும் அப கீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இது புனையப்பட்டுள்ளது. செய்தியின் சாரம் பின்வருமாறு, இடம்பெயர்ந்து அல்லற்படும் தமிழ் அகதிகளைக் குடியமர்த்துவதற்காக மாங்குளத்தின் 2,198 ஹெக்ரேயர் கன்னிக் காடுகளை அழிப்பதற்கு புலிகளின் 'பொருண்மிய திட்டமிடல் முகாமைத்துவ அதிகாரிகள்' திட்டம் வகுத்துள்ளனர்.
காரணமின்றி செய்திகள் வெளியிடப்படுவதில்லை. இது ஊடகத்துறைக் கோட்பாடு. மன்னார் தீவுப் பனைகளின் அழிப்பை மூடி மறைப்பதற்காகவே ஒப்சேபர் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியின் முக்கிய அம்சமாக ஜகத் குணவர்த்தனா என்ற சிங்கள சட்டத்தரணி விடுதலைப் புலிகள் நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் கூறப்படும் திட்டத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த நாட்டின் இயற்கை சூழல் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் நடக்கவேண்டும் என்று ஜகத் குணவர்த்தனா எமக்கு அறிவுரை கூறுகின்றார். 1990 தொடக்கம் இயற்கை சூழல் பாதுகாப்பில் புலிகள் காட்டும் அக்கறை வெறும் பொய்த்தோற்றம் என்றும் இச்சட்டத்தரணி வாதிடுகிறார்.
ஹேமன்தா விதானகே, லலான்த்த சில்வா என்னும் வேறிருவர் குணவர்த்தனாவுடன் இணைந்து கண்டனக் குரல் எழுப்புகின்றனர். இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பொன்றை உருவாக்கி அதன் நிறைவேற்று இயக்குநராக ஹேமன்தா விதானகே பணியாற்றுகிறார். பொதுமக்கள் சட்டநலன் காக்கும் அமைப்பின் தலைவராக லலானத்த சில்வா பதவி வகிக்கின்றனர். இயற்கைச் சூழல் பாதுகாப்புக்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளேன் என்று எழுதியும் பேசியும் வரும் தனிமனிதராக ஜகத் குணவர்த்தனா இடம்பெறுகிறார்.
இன்று இயற்கைச் சூழல் பாதுகாப்பு உலக விவகாரங்களில் முன்னணி இடம் வகிக்கின்றது. இந்த விழிப்புணர்வு அமெரிக்காவின் றேச்சல் கார்சன் அம்மையாரின் போராட்டத்துடன் ஆரம்பமாகியது. மரங்ளைத் தறிக்காதே, காடுகளை வளர்த்தெடு, கடல் நதிநீரை மாசுபடுத்தாதே, செயற்கை உரம் கிருமிநாசினிப் பாவிப்பை நிறுத்து என்று அவர் பரப்புரை வழங்கினார். நாட்டில் தோன்றிய கிளர்ச்சியை அவதானித்த ரைம் சஞ்சிகை றேச்சல் கார்சனை ஒரு மன நோயாளி என்று கண்டித்தது.
அப்போதைய அமெரிக்க அதிபர் கெனடி கார்சன}ன் கூற்றை விசாரிப்பதற்காக ஒரு தேசிய ஆணையத்தை அமைத்தார். கார்சன் கூறித்திரிபவை யாவும் உண்மை என்று ஆணையம் தீர்ப்பு வழங்கியது. 1962இல் கார்சன் எழுதிய 'அமைதியான துளிர்காலம்' என்ற நூல் இயற்கைச் சூழல் ஆர்வலர்களின் வேத நூலாகக் கருதப்படுகின்றது. எக்கோலொஜி என்று ஆங்கிலத்திலும் சூழலியல் என்று தமிழிலும் அழைக்கப்படும் இயற்கைச் சமநிலைக்கோட்பாடுகள் மனித வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஒயிகொஸ் லோகொஸ் என்ற கிரேக்க மொழிச் சொற்கள் இணைந்து எக்கோலொஜி என்ற ஆங்கிலச் சொல் உருவாகியுள்ளது. ஒயிகொஸ் என்றால் வீடு அல்லது வாழ்விடம் என்றும், லோகொஸ் என்றால் கற்கைநெறி என்றும் பொருள்படும். இயற்கையின் அமைப்பையும் தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை நெறி என்று சூழலியலை வர்ணிக்கலாம்.
வனவளம் பற்றிய ஆய்வுரைகள் காடுகள் மூவகைப்படும் என்று அறியத் தருகின்றன. முதலாவது வகை முதலான காடுகள் அல்லது கன்னிக்காடுகள் எனப்படுகின்றன. இரண்டாவது வகை அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தானாகத் தோன்றும் வழிவந்த காடுகள் இரண்டாம் தலைமுறைக்காடுகள் எனப்படும். மூன்றாவது வகை மீள வனமாக்கல் மூலம் மனிதன் தோற்றுவித்ததாகும்.
உலகின் 60 வீதமான கன்னிக் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. அழிப்பு இதுவரை நிறுத்தப்படவேயில்லை. இலங்கைத்தீவின் காடுகள் 18.5 வீதமாகக் குறைந்துவிட்டன. பசுமையான நிலப்பகுதிகளும் 47 வீதமாக இறங்கிவிட்டன. குடியேற்றத்திட்டங்கள், இராணுவ நடவடிக்கைகள், மரவியாபாரம் என்பன இப்பாரிய விகிதாசார வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன.
இலங்கையின் இயற்கைச்சூழல் பாதுகாப்பைக் குறியாகக் கொண்ட தொண்டர் அமைப்புகளும் தனி மனிதர்களும் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளன. பெற்ற நிதிக்குச் சமனான பணிகள் நடக்கின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். பரபரப்பான அறிக்கை விடுதல், பத்திரிகைகள் மூலம் பிரசாரம் செய்தல் போன்றவற்றைவிட வேறொன்றும் நடைபெறுவதில்லை. நிதி வழங்கியோரைத் திருப்திப் படுத்துவதற்காகவே அறிக்கைகளும் பத்திரிகைச் செய்திகளும் வெளிவருகின்றன.
ஜகத் குணவர்த்தனா போன்றோர் நடத்தும் பிரசாரங்களை இனவாதத்தின் இன்னுமோர் வெளிப்பாடாக நோக்க வேண்டும். புலிகளை மட்டந்தட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஒப்சேபர் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதற் பக்கச் செய்திகளுக்கு பத்திரிகை உலகில் ஒரு உயர் முக்கியத்துவம் உண்டு. முதற் பக்கச் செய்திகள் மாத்திரமே செய்திகள். மாங்குளம் காட்டை புலிகள் அழிக்கத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தியை முதல் பக்கத்தில் ஒப்சேபர் வெளியிட்டதன் நோக்கம் இதிலிருந்து புலப்படும்.
சிங்கள நாட்டில் நடக்கும் இயற்கைவள அழிப்புக்கள் பற்றி சட்டத்தரணி ஜகத் குணவர்த்தனாவும்அவருடைய தோழர்களும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இலங்கையின் உலக அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு பறவைகள் சரணாலயமான அம்பாந்தோட்டை-புத்தளம் பிராந்தியம் இப்போது பேராபத்தை எதிர்நோக்குகின்றது. 6216 ஹெக்ரேயர் பரப்பளவைக் கொண்ட சரணாலயம் 5016 ஹெக்ரேயராகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிரித்தெடுக்கப்படும் 1200 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் குடியேற்றம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஐ.நா நடைமுறைப்படுத்தும் பறவைகள் சரணாலய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இச்சரணாலயத்திற்கு விசேட அந்தஸ்து உண்டு. அதை அரசு பொருட்படுத்தவில்லை. ஒருபகுதி நிலம் மக்கள் வாழ்விடமாக மாற்றப்படும்போது சரணாலயத்த}ன் அமைதிச் சூழல் கெட்டுவிடும்.
சிங்கராஜ ஈரவலயக்காடும் இதே வகைச் சீரழிவை எதிர்நோக்குகின்றது. பிற நாடுகளில் காணமுடியாத பல அரிய மூலிகைச் செடிகளும், உயிரினங்களும் இதில் காணப்படுகின்றன. நோய்த்தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் அவற்றின் உள்@ர் முகவர்களும் சிங்கராஜ வனங்களைத் திருடிச் செல்வதில் அக்கறை காட்டுவதாகச் செய்திகள் அடிபடுகின்றன. மரபணுத்திருட்டு பரவலாகக் காணப்படுகின்றது.
சூழல் பாதுகாப்பு அமைப்புக்களும் தனிநபர்களும் மௌனம் சாதிக்கின்றன. இவர்களுடைய இருப்புக்கு வகை செய்யும் நிதி உதவிகளை வழங்கும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் சிங்கராஜ வனத்தில் திருட்டுக்கள் நடத்துகின்றன. சூழல் பாதுகாப்பின் அவல நிலையை இதிலிருந்து உணர முடிகின்றது.
சிங்கராஜவனப் பிரதேசம் சம்பந்தமான பிறிதோர் ருசிகரமான செய்தியை இங்கு தருகிறோம். சிறீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலின் தெற்குக் கோபுரத்தின் நிழல் இத்தீவின் மீதுபடுவதால் தீவு இரண்டுபடும் ஆபத்து இருப்பதாக ஒரு ஐதீகம் நிலவுகின்றது. இக்கோபுரம் பல வருடங்களாக முற்றுப்பெறாமல் இருந்தது உண்மைதான். சிருங்கேரி மடாதிபதியின் முயற்சியால் சில வருடங்களுக்கு முன் கோபுரப்பணி புூர்த்தி செய்யப்பட்டது.
புூர்த்தி செய்யப்பட்ட கோபுரம் தரக்கூடிய ஆபத்துக்களை விலக்குவதற்கு ஜெனரல் ரத்வத்த கடும் முயற்சி எடுத்தார். மூட நம்பிக்கைக்கும் தவறான கணிப்பீடுகளுக்கும் பெயர்பெற்ற இப்போலி மனிதர் தென்னிந்தியாவின் சோதிடர்களின் உதவியை நாடினார். சிறிரங்கம் கோயிற் கோபுரத்தின் திசையில் உங்கள் நாட்டில் ஒரு இந்துக்கோயில் கட்டுங்கள் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இக்கோயில் கட்டுவதற்காக சிங்கராஜ வனத்தின் ஒருபகுதி வெட்டை நிலமாக்கப்பட்டது. புூமிபுூசை செய்வதற்காக இந்திய அந்தணர்கள் வந்தனர். எல்லாம் நல்லபடி நடந்தேறின. ஆனால், கோயில் கட்டுவதற்கு திறைசேரி பணம் தரமறுத்தது. கொழும்பின் தமிழ் வர்த்தகர்களும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். கோயில் எழும்பவேயில்லை. காடு மாத்திரம் பல பெறுமதிமிக்க மரங்களை இழந்து நிற்கின்றது.
பொய்யை மெய்யாக்க வேண்டுமாயின் அதையொரு வலுவான உண்மையோடு பக்குவமாக இணைக்கவேண்டும். இதுதான் பிரசார பலம். கோபுரம் உண்மையானது. அதைச் சுற்றிப் பின்னப்பட்ட பொய் உண்மையின் கனதியைப் பெற்றுள்ளது. ஒப்சேபர் செய்தியைப் பகுப்பாய்வு செய்தால் இது புலப்படும். 900,000 வரையிலான தமிழ் மக்கள் தமது நாட்டிலேயே அகதிகளாக அவலப்படுகின்றனர். இராணுவ முகாம்களென்றும், அதியுயர் வலயங்களென்றும் தமிழ் மக்களுடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடியிருக்க நிலம் வழங்க வேண்டியது புலிகளின் தார்மீகப் பொறுப்பு. இந்த உண்மையோடு மக்களைக் குடியிருத்த மாங்குளம் காட்டை வெட்டப் போகிறார்கள் என்ற பொய்யைக் கலந்தால் அது உண்மை என்று நம்பப்படும் பிரசார முன்னெடுப்புக்களின் அந்தரங்கம் இதுதான்.
எதிரியின் இயற்கை வளங்களை அழித்து நாசமாக்குவது அல்லது எடுத்துச் செல்வது நவீன போர்த் தந்திரோபாயம் என்று பேராசிரியர் மாட்டின் வான் கிரெவால்ட் தனது நூலில் குறிப்பிடுகிறார். பேராசிரியர் கிரெவால்ட் ஒரு யுூதர். இஸ்ரேலின் ஹ்புரு பல்கலைக் கழகத்தில் போரியல் கற்கை நெறிக்குப் பொறுப்பாக இருக்கிறார். இவர் எழுதிய போரியல் நூல்கள் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் இராணுவக் கல்லூரிகளில் பாடநூல்களாகப் பயன்படுகின்றன.
போர்த்துக்கேயர் தொடக்கம் எமது நிலத்தை ஆக்கிரமித்த அந்நியப் படைகள் யாவும் எமது இயற்கை வளங்களை அழிப்பதில் முனைப்பாக ஈடுபட்டன. இன்றுவரை மிக மோசமான சேதங்களை சிங்கள இராணுவம் விளைவிக்கின்றது. இந்தியப் படைகளும் இயற்கை வளங்களை அழிப்பதில் ஈடுபட்டன. 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஸ் அரச நிர்வாகி சேர் ஜேம ஸ் எமர்சன் தௌன்ற் எமது இயற்கை வளம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். 'வடக்கிலும் கிழக்கிலும் அப்பகுதித் தீவுகளிலும் சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதைத் தடுக்குமளவுக்கு நெருக்கமாகப் பனைகள் வளர்கின்றன. இப்பகுதி மக்கள் பனையைக் கற்பகதரு என்கிறார்கள்'
பிரிட்டிசாருக்கு முன் இத்தீவை ஆட்சி செய்த ஒல்லாந்தர்கள் (1658-1796) எமது பனைகளைத் தமது சொந்த நாட்டிற்கும் தமது ஆட்சிக்குட்பட்ட கிழக்கு இந்தியத் தீவுகளுக்கும் பெருமளவில் எடுத்துச் சென்றனர்.
இந்தியப்படைகள் தமது பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்காகப் பனை, தென்னைகளையும், பாலை, முதிரை, வேம்பு, புளி போன்ற மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். துருப்புக்களை ஏற்றிச் செல்லும் சக்தியான கனரக லாரிகளில் அவர்கள் பனம் துண்டுகளைக் கட்டி வைத்திருப்பார்கள். ஈழ மண்ணை விட்டு வெளியேறுவதற்கு முதல் நாட்கூட அவர்கள் நன்கு வளர்ந்த பனைகளை வெட்டி வீழ்த்தினார்கள்.
1994-1995 இல் யாழ் மண்ணை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பனை தென்னைகளையும் பிற பயன்தரு மரங்கiயும் தறித்தனர். யாழ். தீபகற்பத்தை மூன்று தனித்தனி வலயங்களாகப் பிரிக்கும் பாரிய மண் அணைகளைக் கட்டியெழுப்பினார்கள். வீடுகள், மரங்கள், தோட்ட நிலங்கள் அரண் அமைப்பதற்காக அழிக்கப்பட்டன. நிலத்தடி நீரை நம்பியிருக்கும் யாழ். மக்களுக்கு இப்பாரிய அணைகளால் நீண்டகாலப் பாதிப்பு ஏற்படலாம் என்று மண்வள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சிங்கள நாட்டில் எமது பனைக்கு ஒப்பான முக்கியத்துவம் பலாவுக்கு வழங்கப்படுகின்றது. பலாமர வளர்ப்பை பெருக்குவதற்கு ஒரு இயக்கம் சிங்களவர் மத்தியில் இருக்கின்றது. சிறீலங்கா சட்டப்படி அனுமதிப்பத்திரம் பெறாமல் பலாவைத் தறிக்கவோ ஏற்றிச் செல்லவோ முடியாது. சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படுகின்றது. சிங்களப் படைகள் எமது பனை வளத்தை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் நாம் காலப்போக்கில் பனம் பண்டங்களை இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் எழக்கூடும்.
சிங்களப் படைகள் எமது இயற்கை வளங்களை அழிப்பதற்கு இன்னுமோர் காரணமுண்டு. பிரித்தானியா அரசு செயற்படுத்தும் சிறுவர் பாதுகாப்பு நிதியப் பிரதிநிதி ஜோன் பைகேட் அதை விபரிக்கிறார். பருத்தித்துறையில் சிறுவர் புூங்கா அமைத்த புலிகள் அதற்கு ரஞ்சன் புூங்கா என்று பெயரிட்டனர். ரிவிரெச படைகள் இப்புூங்காவை அழித்தபோது ஜோன் பைகேட் தடுக்க முயன்றார். எழுத்துக்களையும் புலிகளை நினைவு படுத்தும் பிற தடயங்களையும் விரும்பினால் அழியுங்கள், மரஞ்செடிகளை விட்டுவையுங்கள் என்று அழிப்புக்குப் பொறுப்பான அதிகாரியிடம் பைகேட் கூறினார். புலிகளின் யாதொரு அடையாளத்தையும் விட்டுவைக்காமல் அழிக் கும்படி மேலிடத்து உத்தரவு என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.
தனது வெள்ளைத்தோல் கொடுத்த தைரியத்தால் சிங்களப் படையினர் கொலைக்களம் இழுத்துச் சென்ற சில தமிழ் இளைஞர்களைத் தன்னால் காப்பாற்ற முடிந்தது என்று ஜோன் பைகேட் கூறுகிறார்.
கொடிகாமம் துயிலுமில்லம் படையினரால் சின்னாபின்னமாக்கப்பட்டபின் தான் அவ விடத்தைப் பார்வையிட்டதாகவும் அவர் வாக்குமூலம் தருகிறார். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த இந்த மனிதர் பிரித்தானியாவின் எம்.ஐ 5 உளவுப்படையைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. வியப்பு என்னவென்றால் இவர் தன்னை 'வெள்ளைப்புலி' என்று அழைப்பதுதான்.
வடபகுதி ஆளுனராகப் பதவி வகித்த (பதவிக்காலம் 1833-1867) பேர்சிவல் அக்லன்ட்டைக் யாழ்ப்பாணம் பழைய புூங்காவைக் கட்டியெழுப்பினார். இதில் காணப்படும் அரிய மரம் செடிகள் பற்றி பிற்காலத்தில் நிர்வாகம் செய்த வேர்னன் அபயசேகரா தனது நூலில் குறிப்பிடுகிறார்.
பழைய புூங்காவும் அதிலுள்ள செயலகக் கட்டிடமும் தமிழீழக் காவல்துறையின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டபின் பழைய புூங்காவின் வனப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றது. அரிய மரங்களில் நாற்றெடுத்து புதியவை உருவாக்கப்பட்டன. மரங்களின் நலன்காக்கும் நோக்கில் ஒவ வொரு மரத்திற்கும் தனித்தனியாகக் கோப்புக்கள் பேணப்பட்டன. சிங்களப் படைகளின் வருகைக்குப் பின் பழைய புூங்கா தனது பொலிவை இழந்தது. புூங்காவின் மதில் சுவர்களை உடைத்து அதனுடைய கட்டுக்கோப்பை படையினர் அழித்தனர். தமது விறகுத் தேவைக்காகப் பொதுமக்கள் சிறிது சிறிதாக மரங்களை வெட்டி எடுத்தனர் படைகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அத்தோடு புலிகள் நடைமுறைப்படுத்திய மீள்வனமாக்கல் திட்டத்தின்கீழ் நாட்டப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் உட்பட வன்னிப் பிரதேசத்தின் பல்பெறுமதி மிக்க மரங்களை சிங்களப் படைகள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இலாபம் ஈட்டும் நோக்கில் தெற்கில் இருந்து அவர்கள் மரவியாபாரிகளையும் ஒப்பந்தகாரர்களையும் வன்னிக் காடுகளுக்குக் கொண்டுவந்தனர். வன்னியில் சிங்கள இராணுவம் நடத்திய அழிவை அளவிட முடியாது.
ஆகஸ்து 1996 தொடக்கம் செப்ரெம்பர் 1998 வரை கிளிநொச்சி மாவட்டத்தின் முழுப் பகுதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் கிடந்தது. மே 1997 தொடக்கம் நவம்பர் 1999 வரை மேற்கு வன்னியின் 1500 சதுர கி.மீ படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது. இக்காலப்பகுதியில் எமது இயற்கைவள இழப்புக்கள் உச்சக்கட்டம் அடைந்தன. தாண்டிக்குளம் தொட்டு மாங்குளம் வரையிலான ய-9 நெடுஞ்சாலையின் இரு பக்கமும் நின்ற மரங்கள் யாவும் தறித்து எடுக்கப்பட்டன. ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புளியங்குளம் ஆகிய கிராமங்களின் பயன்தரு மரங்கள் யாவும் எடுத்துச் செல்லப்பட்டன. மணலாற்றுப் பகுதியில் குடியிருத்தப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகள் நெடுங்கெணி - ஒட்டுசுட்டான் வரை படையினர் உதவியுடன் வந்து தமிழர்களின் சொத்துக்களைத் திருடிச் சென்றனர்.
இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் ஜகத் குணவர்த்தனா கிளப்பிய புரளியைப் போன்றதொன்றை வனவள, சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சர் நந்தமித்திர எக்கநாயக்கா கிளப்பினார். இவர் 30 டிசம்பர் 1998இல் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக எமது தேசியத் தலைவர் அவர்களுக்கு 'வனவளத்தை அழிப்பதற்கு திறந்த அனுமதி வழங்கியுள்ளீர்கள்' என்று குற்றம் சுமத்தி ஒரு கடிதம் அனுப்பினார். பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாக இதைக் கருதலாம்.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜோர்ஜ் பொ னான்டஸ் அவர்கள் ஒக்ரோபர் 1997இல் ஒரு பகிரங்க வேண்டுகோளை சிறீலங்காவுக்கு விடுத்தார். சமதா கட்சியின் புதுடில்லி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானத்தின் பிரகாரம் இவ வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 'தமிழ் பிரதேசங்களிலுள்ள விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு உகந்த நிலங்கள், காடுகள் என்பனவற்றை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி' மேற்படி வேண்டுகோள் கேட்டுக்கொண்டது.
வன்னி வனவளம்பற்றி ஒரு சிங்களப் புத்திஜீவிகொண்டுள்ள நிலைப்பாட்டை அறியவேண்டாமா? மாக்சிசலெனினிச வாதியாக ஆரம்பித்து கடும்போக்கு பேரினவாதியாக பரிணாம வளர்ச்சி பெற்ற தயான் ஜெயத்திலகா வீக்கென்ட் எக்ஸ்பிறஸ் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் கூறியதாவது, வியட்நாம் போரின் போது அமெரிக்க விமானங்கள் போராளிகளின் காடுகள் மீது டயோக்கின் நச்சுப்பொருளைத் தூவின. வன்னிக் காடுகள் மீது நாம் பொஸ்பொரஸ் எரிபொருளை விசிறவேண்டும். காடு பற்றி எரியும் போது புலிகள் வெளியே வருவார்கள், குண்டுவீசி அழித்துவிடலாம்.
வரலாறு எனது வழிகாட்டி, இயற்கை எனது நண்பன் என்று எமது தேசியத் தலைவர் கூறுவார்கள். புலிகள் தலையெடுத்த நாட்தொட்டு காட்டையும் நாட்டையும் மேம்படுத்துவதையே குறியாகக் கொண்டுள்ளனர். புலிகள}ன் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வனமும் வனம் சார்ந்த பிரதேசமும் ஆதாரமாக அமைகின்றன. புலியின் இயற்கைச் சூழல் வனவளம் ஒன்று மாத்திரமே இதை ஜகத் குணவர்த்தனா போன்ற மரமண்டையர்கள் மறவாதிருக்கவேண்டும்.

-
கலாநிதி க. சோமஸ்கந்தன்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)