11-01-2005, 06:17 AM
narathar Wrote:ஜூட் மற்றும் மணிமாறன் எழுதியது போல் வினத்திறனை ஊக்குவிப்பது இந்த இலாபம் ஈட்டும் நோக்கிலான முதாலாளித்துவப் பொருளாதார அமைப்பே ஆகிலும்.ஈட்டிய இலாபம் அல்லது உபரி அனைவருக்கும் சமமாகப் பங்கிடப் படுகிறதா என்பது கேள்விக் குறியே..
சமமற்ற உழைப்பின் பலன் சமமாக பங்கிடப்படுவதை கடினமாக உழைத்தவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களது கடின உழைப்பின் பலன் பொறுப்பற்ற உழைக்கும் விருப்புமற்ற பலருடன் சமமாக பங்கிடப்பட்டு கொடுப்பதை அவர்கள் அநீதி என்று கருதுகிறார்கள்.
உழைப்பின் அளவும் ஆர்வமும் முயற்சியும் ஆற்றலும் அறிவும் சமமற்ற மனிதர்களை கொண்ட உலகில், உழைப்பின் பலனை சமமாக பங்கிட முயன்ற பொதுவுடமை நாடுகளில், உழைப்பின் அளவும் அதற்கான ஆர்வமும் முயற்சியும் ஆற்றலும் தேவையற்றதாகி, குன்றி, பொதுவுடமை வல்லரசுகள் மறைந்து, முதலீட்டு நாடுகள் தோன்றியது வரலாறு.
உழைப்பின் பலன் சமமாக எல்லோருக்கும் பங்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றதும் நடைமுறையில் சாத்தியப்படாததும் ஆகும். மாறாக மக்கள் யாவருக்கும் அடிப்படை தேவைகளான உணவு உடை உறையுள் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது. ஐரோப்பிய நாடுகளும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் அந்நிய நாட்டு அகதிகளுக்கு கூட உணவு உடை உறையுள் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்கின்றன. இதற்கான பணம் வணிகர்களின் வருமான வரியில் இருந்து பெறப்படுகின்றது. இந்த அடிப்படை வசதிகளின் தரம் பொதுவுடமை நாடுகளில் உள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரத்திலும் உயர்வானது. காரணம் இந்த முதலீட்டு பொருளாதார நாடுகள் பெருமளவு வருமான வரியை பெற்று அதில் தமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்கிறார்கள் பெருமளவு வருமான வரியை பெற பெருமளவு வருமானமும் இருக்கவேண்டும்..
''
'' [.423]
'' [.423]

