11-01-2005, 05:05 AM
நீங்கள் சொல்வது சரி தான் நாரதர். ஆனால் எங்களுடன் பயணம் செய்தவர்களும் பல ஆண்டுகள் மேலை நாட்டில் இருந்தவர்கள் தான். அவர்களைப் பொறுத்தவரையில் பார்சல்கள் தொலைந்தால் தான் நஷ்ட ஈடு வேண்டலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மையாகவே பார்சல்கள் மாறி எங்கையாவது விடுபடும் தருணத்திலும் இல்லாவிடின் லேட்டாக எமது கைகளுக்கு கிடைக்கும் போதும் ஏயர்போட்டில் வைத்தே சில சலுகைகளை அவர்கள் எங்களுக்கு செய்ய வேண்டும். இது பலருக்கு தெரியதா விடயம். ..... இந்த தகவல்களை என்னுடன் வந்த மற்ற தமிழர்களுக்கு சொல்ல அவர்கள் சீ என்று போட்டு சென்று விட்டார்கள். ஆதனால் தான் இங்கு எழுதினேன்.

