Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் பற்றிய ஆய்வுகளை தர முடியுமா?
#18
அநுராதபுரவை ஆண்ட தேவநம்பிய திஸ்ஸவின் காலத்தில் இந்தியாவிலிருந்து மிஹிந்தலைக்கு ஆகாய மார்க்கமாக வந்து, யுசயாயவ ஆயாiனெய பௌத்த போதனையைச் செய்து, அநுராதபுரவின் இராணி அனுலா, அவரின் பரிவாரங்கள் உட்பட அரச ஆட்சியாளர்களையும், மக்களையும் பௌத்தத்தைப் பின்பற்ற வைத்து, புதியவொரு தேசத்தினை அன்று உருவாக்கியிருந்ததுபோல், இன்று சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் மஹிந்த சிந்தனையினைப் புகுத்துவது}டாக இலங்கைத் தீவானது புதிய தேசமாக ஆக்கப்படுகிறது என்ற ஒருவித அலவா இன் அடிப்படையில்தான், மஹிந்த சிந்தனை என்ற பெயரில் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனமானது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரணில விக்கிரமசிங்க பராக்கிரமபாகு கால ஆட்சி பற்றிப்பேசி வருகின்றார்.

இன்றைய மஹிந்தவின் சிந்தனை எப்படியானது என்பதைப் பார்க்குமுன்னர், இலங்கையின் தேரவாத பௌத்த வரலாற்றினைக் கூறுவதாகப் பௌத்த பேரறிஞர்களால் கூறப்படும் தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகள் யுசயாயவ ஆயாiனெய வின் வருகை, ஏனையவைகள் பற்றிக் கூறியிருப்பவைகளின் உண்மைத் தன்மை பற்றிப் பார்ப்பது சிறந்தது.

ஒருவர் மணிமேகலை என்ற தமிழ் இலக்கியத்தினை ஆராய்தால், அதில் இலங்கைக்குப் புத்தபெருமான் வியத்தை மேற்கொண்டிருந்த கதை குறிப்பிடப்பட்டிருப்பதையும்@ யுசயாயவ ஆயாiனெய தேவநம்பிய திஸ்ஸவிற்குப் போதனை செய்த கதையை ஒத்த கதையாகச் சாதுவன் -- நாகர் தலைவன் கதை இருப்பதையும் அவதானிக்கமுடியும். மேலும், காமக் கிளத்தியின், வைப்பாட்டியின் மகள் மணிமேகலை – ஆகாயத்தில் பறக்கும் வல்லமை -- பெருகும்; தன்மை கொண்ட பிச்சா பாத்திரம் -- மணிபல்லவம் -- பௌத்தம் என்பவைக்கும் அசோகச் சக்கரவர்த்தியினது காமக்கிளத்தி, வைப்பாட்டியின் மகள் சங்கமித்தா – ஆகாயத்தில் பறக்கும் வல்லமை -- அரச மரங்களைப் பெருக்கும் பொற் பாத்திரம் -- பியங்கு தீப – பௌத்தம் என்பவைகளின் நெருங்கிய ஒற்றுமையை அவதானிக்கமுடியும்.

இவை தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைக்கும், மணிமேகலை ஆசிரியருக்குமிடையில் இருந்த நெருங்கிய தொடர்பையே வலியுறுத்துனகிறது.

மேலும், தன்னைப் புத்தபெருமானுடன் இணைத்துக் கொள்ள, தேவநமபியதிஸ்ஸவின் இராணியான அனுலா, தன்னைப் பிக்குணி ஆக்கிக்கொள்ள அரசனை வலியுறுத்திய தீபவம்ஸ, மஹாவம்ஸக் கதையானது, சாதாரண மக்களுக்கு செய்யுள் வடிவில் வலியுறுத்தப் பாடப்பட்ட ஒரேயொரு கல்வெட்டாக இருப்பது, கோட்டக தமிழ்க் கல்வெட்டாகும். அதில், இராணி அனுலாவின் நிலையானது பின்வருமாறு, சிலேடைத் தன்மையுடையதாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது:

செது
கங்கணம் வேல் கண் இணையால் காட்டினார் காமர் வளைப்;
பங்கயக்கை மேல் திலதம் பாரித்தார் – பொங்கு ஒலி நீர்ச்
சிங்கை நகர் ஆரியனைச் சேரா அநுரேசர்
தங்கள் மடமாதர் தாம்.

போங்;கு ஒலி நீர்ச் சிங்கை நகர் ஆரியன் என்பது, புத்தபெருமானையாகும்.

இது பற்றிய முழுமையான ஆய்வினை ஒருவர் றறற.வயஅடைசநளநயசஉhயனெநெறள.உழஅ இணையத்தளத்தில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளிவ் காணலாம்.

இவற்றைவிட, தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளில் கூறப்பட்டுள்ளவைக்கும், “சங்க இலக்கியங்கள்” எனத் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆராய்வாளர்களால் கூறப்படும் இலக்கியங்கள், ஏனைய தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருபபதை மேற்குறிப்பிட்ட இணையத்தள ஆய்வுகளுடாக உறுதிசெய்யமுடியும்.

இவைகள் தமிழ்ப் பௌத்த துறவிகளுக்கும், தீபவம்ஸ, மஹாவம்ஸ உருவாக்கத்திற்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

இதைவிட, மஹாவம்ஸ, தீபவமஸ என்பவைகள் கி; பி. 14 – 15ஆம் நு}ற்றாணடுகளில்தான் எழுதப்பட்டன என்பதையும் அந்த இணையத்தள ஆய்வுகளுடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை உருவாக்கமானது, கற்பனை அடிப்படையிலான யுசயாயவ ஆயாiனெய இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்பனையாகுகிறது!

அறிவியல் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து, சரியான முடிவுகளுக்கு வரமுடியாது இருந்துவரும் சிங்களப் பேராசிரியர்கள், சமயப் பெரியோர்கள், அறிவாளிகள் கற்கனைக் கோட்பாடான ஆரியன் -- சிங்களம் -- சிங்களவர் – தேரவாத பௌத்தம் -- லங்கா என்ற ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையிலான கோட்பாட்டினை உருவாக்கி, அதனடிப்படையில் ஆட்சிக் கொள்கைகளை முன்வைத்து வந்து இலங்கைத் தீவினை நாசம் பண்ணியதுபோல், இன்று இலங்கையின் பௌத்த வரலாற்றினையே சரியாக ஆராயாது, அதன் அடிப்படையில் மஹிந்த சிந்தனை என்ற ஆலவா உருவாக்கப்பட்டுள்ளது.

இவை இலங்கைத் தீவின் எதிர்காலமானது எப்படி இருக்கும் என்பதை அறியப் போதுமானதே.
http://www.tamilsociety.com/
Reply


Messages In This Thread
[No subject] - by iruvizhi - 10-09-2005, 12:56 PM
[No subject] - by Birundan - 10-09-2005, 01:49 PM
[No subject] - by KULAKADDAN - 10-09-2005, 01:53 PM
[No subject] - by தூயவன் - 10-09-2005, 03:05 PM
[No subject] - by Jude - 10-09-2005, 10:30 PM
[No subject] - by iruvizhi - 10-10-2005, 10:37 AM
[No subject] - by Thala - 10-10-2005, 10:40 AM
[No subject] - by Birundan - 10-10-2005, 11:55 AM
[No subject] - by Mathuran - 10-29-2005, 07:19 PM
[No subject] - by Vasampu - 10-29-2005, 11:02 PM
[No subject] - by kurukaalapoovan - 10-29-2005, 11:43 PM
[No subject] - by kuruvikal - 10-30-2005, 07:11 AM
[No subject] - by AJeevan - 10-30-2005, 09:49 AM
[No subject] - by Mathuran - 10-30-2005, 09:59 AM
[No subject] - by Vasampu - 10-30-2005, 01:05 PM
[No subject] - by Birundan - 10-30-2005, 01:28 PM
[No subject] - by kurukaalapoovan - 10-31-2005, 06:40 PM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 06:13 AM
[No subject] - by அருவி - 04-19-2006, 06:30 AM
[No subject] - by அருவி - 04-19-2006, 06:34 AM
[No subject] - by Thala - 04-19-2006, 09:19 AM
[No subject] - by Thala - 04-19-2006, 09:20 AM
[No subject] - by alika - 04-19-2006, 10:21 AM
[No subject] - by karu - 04-19-2006, 10:25 AM
[No subject] - by Mathuran - 04-19-2006, 11:08 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:36 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:39 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:41 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 06:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)